வியாழன், 31 மே, 2012

சுய இன்பப் பழக்கம் ஒரு பார்வை


ஆண்களுக்கு திருமணத்துக்கு முன்பு சுய இன்பப் பழக்கம் இருந்திருக்கும். இத்தகைய பழக்கத்தினை கொண்டிருந்த பல ஆண்கள் திருமணத்துக்கு பின்பு ஒரு குழப்பமான மனநிலையில் இருப்பார்கள்.

அதாவது தங்களிடம் பல நாட்கள் தொற்றிக் கொண்டு இருந்த சுய இன்பப் பழக்கம் ஆனது, திருமணத்துக்கு பின்பு தங்கள் செக்ஸ் வாழ்க்கையை பாதித்து இனிமையான சங்கீதமாக இருக்க வேண்டிய தாம்பத்திய உறவை குழி தோண்டிப் புதைத்து விடுமோ என்று அஞ்சுவார்கள்.

இவர்களுக்கு ஒரு நம்பிக்கையான டானிக் அறிவுரை என்னவெனில் சுய இன்பப் பழக்கம் என்பது தவறான நடவடிக்கை அல்ல. அது மனித வாழ்க்கையில் இயல்பானது.

கடந்த நூற்றாண்டுகளில் சுய இன்பப் பழக்கம் என்பது ஒரு பாவ காரியமாக கருதப்பட்டது. மனிதனை படைத்து, காத்து வருகிற கடவுளுக்கு செய்கிற துரோகமாகக் கருதப்பட்டது. அதற்கு பிந்தைய காலக் கட்டத்தில் அந்நாளைய மருத்துவர்களே சுய இன்பப் பழக்கம் என்பது ஒரு மன நோய் என்று தப்புப் பிரச்சாரம் செய்து வந்தனர்.

ஆனால், இன்றைய நாட்களில் சுய இன்பப் பழக்கம் என்பது ஒரு இயல்பான செக்ஸ் நடவடிக்கை என்று ஆகிவிட்டது. இதனை மருத்துவ உலகமும் சரியானது என்று அங்கீகரித்துவிட்டது.

சுய இன்பப் பழக்கமானது உடலை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதனை மருத்துவ உலகம் அறிவியல் பூர்வமாக நிரூபித்து விட்டது, எனவே எந்த ஒரு கணவனும் தனது முந்தைய சுய இன்பப் பழக்கத்தை எண்ணி கலக்கமடைய வேண்டாம்.

சுய இன்பப் பழக்கம் என்பது ஒருவரது உடம்பிலேயே ஆரம்பித்து அவரது மூளையை சென்றடைந்து இன்பக் கிளர்ச்சி அடைய வைத்து அவருக்குள்ளேயே முடிந்து விடும்.

தாம்பத்திய சுகம் என்பது ஒருவர் இன்னொருவருக்குக் கொடுப்பதுடன் ஒருவர் இன்னொருவரிடமிருந்து பெறுவது. எனவே… சுய இன்பப் பழக்கத்துக்கும் தாம்பத்திய சுகத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆகவே எந்த ஒர் ஆணும் தான் எப்போதோ சுய இன்பம் அனுபவித்ததை நினைத்து நினைத்து மனத் தளர்ச்சி அடையத் தேவையில்லை.
நன்றி :மருத்துவம்(xtrapower)


உயிர்---------4

இப்படி எத்தனையோகேள்விகள் ‘ஒரு பெண்ணின் அந்தரங்கபாகத்தில் மூன்று தனித்தனி துவாரங்கள் உண்டு. சிறுநீர் போக ஒரு துவாரம்...அந்தரங்க உறவுக்கு ஒரு துவாரம்... குழந்தை பெற்றுக்கொகள்ள மூன்றாவது துவாரம்...சரியாகக் கணிக்காமல் உறவின்போது துவாரம் மாறி விட்டால் போச்சு. அப்படி உறவுகொகள்ளும் ஆணுக்கு மர்மமான வியாதிகள் வரும்’ என்றெல்லாம்கற்பனைக் குதிரையை பயங்கரமாகத் தட்டிவிட்டு, கதைகள் எழுதியஅந்தக் கால டாக்டர்கள் உண்டு!

மருத்துவம்படிக்கிற எல்லோருக்கும் அடிப்படையாக இரண்டு விஷயங்கள் பற்றிய புரிதல் முக்கியம்.ஒன்று ‘பிஸியாலஜி’உடலில் எந்தெந்தபாகங்கள் என்னென்ன வேலைகளைச் செய்கிறது என்பதை சொல்லித்தரும் பிரிவு இது!இரண்டாவது ‘பேதாலஜி’ நோய் வந்தால் உடலில் எந்தெந்த பாகங்களில்என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது... செயல்பாடுகளில் என்ன குறைபாடுகள் ஏற்படுகிறதுஎன்பது குறித்த ‘நோய் குண அறிவியல்.’ இந்த இரண்டையும் நன்றாக புரிந்துகொண்டவர்களேடாக்டர்கள்.

செக்ஸ் தொடர்பானநோய்களில்,சிக்கல் இந்த அடிப்படைவிஷயத்திலேயே ஆரம்பித்து விடுகிறது. செக்ஸ் உறுப்புகள், அவற்றின் செயல்பாடுகள், உறவு கொகள்ளும்போது அவற்றின் பங்கு... இவைபற்றி தெரிந்தால்தானே நோய் ஏற்படும்போது இதில் நிகழும் மாற்றங்களை அறிய முடியும்.அடிப்படையே புரியாத பட்சத்தில்..?

பல டாக்டர்கள்இதனால் ஏற்பட்ட குழப்பத்தில் செக்ஸ் பிரச்னைகளுக்கு சிகிச்சை தருவதையே தவிர்த்துவந்தார்கள். உளவியல் நிபுணர்களோ, ‘செக்ஸ் தொடர்பானஎல்லா பிரச்னைகளுக்கும் மனதுதான் காரணம்’ என்றுஸ்டிராங்காக சொல்லி, ஏதோ அவர்களால் முடிந்தஅளவுக்கு சிகிச்சை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

இப்படிப்பட்ட ஒருபின்னணியில்தான் நடந்தது, அந்த ஆராய்ச்சி!மற்றவர்களுக்கு இது எப்படியோ... ஆனால், செக்ஸ்பிரச்னைகளுக்கு மருத்துவ ரீதியான தீர்வுகளைத் தரும் எங்களைப் போன்ற டாக்டர்களுக்குஇது ‘மனிதன் நிலவில் காலடி வைத்ததைவிட பெரிய அறிவியல்சாதனை.’ அந்த ஒற்றை ஆராய்ச்சிதான் இன்று ‘செக்ஸாலஜி’ என்ற பெயரில்நவீன சிகிச்சை முறை ஒன்று உருவாக அடித்தளம் போட்டுக் கொடுத்தது. இப்போது பலரும்செக்ஸில் பிரச்னை என்றால் கூசிக்கொண்டு அதை மூடி மறைக்காமல், முக்காடு போட்டுக்கொண்டு தயங்கித் தயங்கிபிளாட்பார லேகியக் கடைக்குப் போகாமல், ‘வாலிப, வயோதிக அன்பர்களை’க் கூவி அழைக்கும் போலி வைத்தியர்களிடம் போய்சொத்தை இழக்காமல், அறிவியல்ரீதியான தீர்வுதேடி தம்பதி சமேதராக ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இந்த ஆராய்ச்சிதான்!

ஒரு காலத்தில் ‘மலட்டுத் தன்மை பெண்ணிடம் மட்டும்தான்இருக்கிறது’ என்று உலகம் முழுக்கஎல்லா சமுதாயமும் உறுதியாக நம்பியது. ‘விதையில்எப்போதும் பழுது இல்லை... நிலம்தான் பாழ்பட்டுக் கிடக்கிறது. அதனால் விதைத்த விதைபொய்த்துப் போகிறது’ என்று இதை நாசூக்காகசொன்னார்கள்.

அரியணைக்குவாரிசைப் பெற்றுத் தராத காரணத்துக்காக எத்தனையோ மகாராணிகள் அநியாயமாக ‘மலடி’ பட்டம் சுமந்து, மரண தண்டனையை பரிசாகப் பெற்று, வாகள்முனைக்கு தங்கள் தலையைக் கொடுத்த பரிதாபசம்பவங்கள் அநேகமாக உலகின் எல்லா நாட்டு வரலாறுகளிலும் இருக்கின்றன! பிரச்னைமகாராஜாவிடம்தான் இருக்கிறது என்பது புரியாவிட்டாலும், அந்தப்புரத்துக்கு அடுத்தடுத்து வரும்மகாராணிகளில் யாரோ ஒருத்தி, தன் உயிரைக்காப்பாற்றிக்கொகள்ள, யாருடனாவது சேர்ந்துதப்பு செய்து ‘இளவரசனை’ப் பெற்றெடுத்து விடுவாகள். அரசனும் "இப்பபுரியுதா? நான் ஆம்பளை சிங்கம்தான்!" என்று மகிழ்ந்துவிடுவான்.
ஆனால், சராசரி குடும்பங்களில் எத்தனையோ பிரச்னைகள்.குழந் தைப்பேறு இல்லாததால் ஏராளமான மணமுறிவுகள். மிக சாதாரணமான ஒரு சிகிச்சைஅவர்களுக்குத் தீர்வு தந்திருக்கும். அது அப்போது யாருக்கும் தெரியாது.

செவ்வாய், 29 மே, 2012

உயிர்-------3


இந்தவித்தியாசமான ஆராய்ச்சி நடந்தது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்... ‘இருண்ட கண்டம்’ என பெயர்பெற்று மர்மப் பிரதேசமாக இருந்தஆப்பிரிக்க கண்டத்தைக்கூட மனித இனம் அலசி ஆராய்ந்து விட்ட நேரம் அது. எங்கோதொலைதூரத்தில் இருந்தபடி மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களை
வகைப்படுத்திபெயர் வைக்கும் அளவுக்கு அறிவியல் அப்போது உச்சத்தில் இருந்தது.

ஆனால், அப்போதும் புரியாத புதிராக இருந்தது, ஆண்பெண் நிகழ்த்தும் அந்தரங்க உறவின்அர்த்தங்கள். அந்த உறவின்போது எந்தெந்த உறுப்புகளுக்குகள் என்னவிதமான மாற்றங்கள்நிகழ்கின்றன? ஒட்டுமொத்தஉடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ்கின்றன? புதிய உயிரை உருவாக்கி அடுத்தடுத்த தலைமுறைகளைஉலகுக்கு படைக்கும் ஆதார சக்தி எப்படி ஆணிடமிருந்து பெண்ணுக்குப் பரிமாறப்படுகிறது?பிரபஞ்சத்தைசிருஷ்டித்ததாகக் கூறப்படும் கடவுகள், ஒவ்வொரு ஜீவனையும் உயிர் கொடுத்து உருவாக்கும் பணியை மட்டும் ஏன் அந்தந்தஜீவராசிகளிடமே கொடுத்தார்? அந்த உறவு என்பதுவெறுமனே உயிர்களை உருவாக்க மட்டும்தானா? மனித இனத்தை எடுத்துக் கொண்டால், இதில் ஆணின் பங்கு என்ன... பெண்ணின் பங்கு என்ன? சுருக்கமாக சொல்லப் போனால் ஆண்களும், பெண்களும் இதை ஏன் தொடர்ந்துகொண்டேஇருக்கிறார்கள்? இந்த உறவில்பலபேருக்கு நாட்டம் இல்லாமல் போவதற்கும், சிலர் மட்டும் எப்போதும் இதே நினைப்புடன் வெறியோடு திரிவதற்கும் காரணம் என்ன?பலபேருக்கு குழந்தைப்பேறுஇல்லாமல் போவதற்கு என்ன காரணம்?
              


இப்படி எத்தனையோகேகள்விகள். ‘ஒரு பெண்ணின் அந்தரங்கபாகத்தில் மூன்று தனித்தனி துவாரங்கள் உண்டு. சிறுநீர் போக ஒரு துவாரம்...அந்தரங்க உறவுக்கு ஒரு துவாரம்... குழந்தை பெற்றுக்கொகள்ள மூன்றாவது துவாரம்...சரியாகக் கணிக்காமல் உறவின்போது துவாரம் மாறி விட்டால் போச்சு. அப்படி உறவுகொகள்ளும் ஆணுக்கு மர்மமான வியாதிகள் வரும்’ என்றெல்லாம்கற்பனைக் குதிரையை பயங்கரமாகத் தட்டிவிட்டு, கதைகள் எழுதியஅந்தக் கால டாக்டர்கள் உண்டு!

மருத்துவம்படிக்கிற எல்லோருக்கும் அடிப்படையாக இரண்டு விஷயங்கள் பற்றிய புரிதல் முக்கியம்.ஒன்று ‘பிஸியாலஜி’உடலில் எந்தெந்தபாகங்கள் என்னென்ன வேலைகளைச் செய்கிறது என்பதை சொல்லித்தரும் பிரிவு இது!இரண்டாவது ‘பேதாலஜி’ நோய் வந்தால் உடலில் எந்தெந்த பாகங்களில்என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது... செயல்பாடுகளில் என்ன குறைபாடுகள் ஏற்படுகிறதுஎன்பது குறித்த ‘நோய் குண அறிவியல்.’ இந்த இரண்டையும் நன்றாக புரிந்துகொண்டவர்களேடாக்டர்கள்.

செக்ஸ் தொடர்பானநோய்களில்,சிக்கல் இந்த அடிப்படைவிஷயத்திலேயே ஆரம்பித்து விடுகிறது. செக்ஸ் உறுப்புகள், அவற்றின் செயல்பாடுகள், உறவு கொகள்ளும்போது அவற்றின் பங்கு... இவைபற்றி தெரிந்தால்தானே நோய் ஏற்படும்போது இதில் நிகழும் மாற்றங்களை அறிய முடியும்.அடிப்படையே புரியாத பட்சத்தில்..?

பல டாக்டர்கள்இதனால் ஏற்பட்ட குழப்பத்தில் செக்ஸ் பிரச்னைகளுக்கு சிகிச்சை தருவதையே தவிர்த்துவந்தார்கள். உளவியல் நிபுணர்களோ, ‘செக்ஸ் தொடர்பானஎல்லா பிரச்னைகளுக்கும் மனதுதான் காரணம்’ என்றுஸ்டிராங்காக சொல்லி, ஏதோ அவர்களால் முடிந்தஅளவுக்கு சிகிச்சை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

இப்படிப்பட்ட ஒருபின்னணியில்தான் நடந்தது, அந்த ஆராய்ச்சி!மற்றவர்களுக்கு இது எப்படியோ... ஆனால், செக்ஸ்பிரச்னைகளுக்கு மருத்துவ ரீதியான தீர்வுகளைத் தரும் எங்களைப் போன்ற டாக்டர்களுக்குஇது ‘மனிதன் நிலவில் காலடி வைத்ததைவிட பெரிய அறிவியல்சாதனை.’ அந்த ஒற்றை ஆராய்ச்சிதான் இன்று ‘செக்ஸாலஜி’ என்ற பெயரில்நவீன சிகிச்சை முறை ஒன்று உருவாக அடித்தளம் போட்டுக் கொடுத்தது. இப்போது பலரும்செக்ஸில் பிரச்னை என்றால் கூசிக்கொண்டு அதை மூடி மறைக்காமல், முக்காடு போட்டுக்கொண்டு தயங்கித் தயங்கிபிளாட்பார லேகியக் கடைக்குப் போகாமல், ‘வாலிப, வயோதிக அன்பர்களை’க் கூவி அழைக்கும் போலி வைத்தியர்களிடம் போய்சொத்தை இழக்காமல், அறிவியல்ரீதியான தீர்வுதேடி தம்பதி சமேதராக ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இந்த ஆராய்ச்சிதான்!

உயிர் -2

இந்தத் தொடரைப்படிக்கும் எவரும் "உணவு, தூக்கம் போலவேபாலுணர்வும்கூட உயிர்களின் தவிர்க்கமுடியாத அடிப்படைத் தேவை" என்பதையும்,அதுபற்றி முழுமையாகத்தெரிந்து கொகள்வது எத்தனை அவசியம் என்பதையும் தெளிவாக உணர்வார்கள்.

அது ஒருபெட்ரூம்... பகட்டான அலங்காரங்களோ, திகட்ட வைக்கும்ஆடம்பர வசதிகளோ இல்லாத மிகச் சாதாரணமான பெட்ரூம். ஆனாலும் அது சரித்திரத்தில் இடம்பிடித்து விட்டது. வெறும் பத்து ஆண்டுகளில் பத்தாயிரம் முறை பலபேர் வந்து பரவசமானகலவி இன்பத்தை அனுபவித்த படுக்கை அறை என்ற பெருமையை அது பெற்றது.

தங்கள் காதல்மனைவியைக் கட்டியணைத்தபடி வந்த அன்புக் கணவர்கள், கேர்கள் ஃபிரெண்டை முத்தமிட்டபடி நுழைந்தடீன்ஏஜ் காதலர்கள், தனியாகஅறைக்குகள் நுழைந்து காத்திருந்து முன்பின் அறிமுகமில்லாத பெண்களை துணையாகத்தேடிக் கொண்டவர்கள், ‘வயது எங்கள்உணர்ச்சிகளுக்கு அணை போடவில்லை’ என்றுநிரூபிக்கும் விதமாக தங்கள் மனைவியோடு வந்து அந்தப் படுக்கையைப் பயன்படுத்திக்கொண்ட கிழவர்கள், ‘எங்களுக்குஜோடியே தேவையில்லை’ என்ற படி தனிஆட்களாக வந்து சுய இன்பத்தில் பரவசப்பட்டவர்கள்... இப்படி பலவிதமான மனிதர்களை அந்தஅறை பத்து ஆண்டுகளில் பார்த்திருக்கிறது.

வெளிச்சம்,இருட்டு என்ற வித்தியாசம்எல்லாம் அவர்களில் பலருக்கு இல்லை. ஒரேநாளில் வெவ்வேறு நேரங்களில் விதம்விதமானஉணர்வுகளுடன் அந்த அறைக்கு பல ஜோடிகள் வந்தன. படுக்கை விரிப்பை மாற்றக்கூட அவகாசம்தராமல், அடுத்தடுத்துபத்து ஜோடிகள் வந்து போனதும் நடந்திருக்கிறது.
இவ்வளவு பிஸியானஅந்த அறை.. ஒரு நட்சத்திர ஹோட் டலின் ‘தேனிலவு சூட்’ அல்லது ஏதாவதுகுளிர்பிரதேச சுற்றுலா தல ரிஸார்ட்ஸாக இருக்கும் என்று தானே நீங்கள்நினைத்தீர்கள்.

ஸாரி... அதுதப்பு. அந்த அறை, ஒரு மருத்துவக்கல்லூரியின் பரிசோதனைக் கூடம். அங்கு இப்படி பத்தாயிரம் தடவை பலர் பரவச நிலையைஅனுபவித்தது, ஓர்ஆராய்ச்சிக்காக! அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் இருக்கும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின்மருத்துவக் கல்லூரி... அதில் இருக்கும் மகப்பேறு மற்றும் பெண்கள்நலப் பிரிவில்தான்நடந்தது இந்த ஆராய்ச்சி.

‘இதில் போய் என்னஆராய்ச்சி!’ என முகத்தைச்சுளிப்பவர்கள், தவறாமல் அடுத்தபாராவுக்கு போங்கள்.

திங்கள், 28 மே, 2012

உயிர் -1

பழங்கால இந்தியாவில்செக்ஸை வாழ்க்கையின் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாக நினைத்தார்கள். சாப்பிடுவது,தூங்குவது மாதிரி அதுவும்ஒரு விஷயம். அதை ஒதுக்கி வைக்கவோ, ரகசிய பொருளாகப்பதுக்கி வைக்கவோ அவர்கள் நினைத்ததில்லை. ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே அரும்பும் அன்பு, காதலாக மலர்ந்த பிறகு அவர்கள் இணைந்து நடத்தும்திருமண வாழ்க்கை இந்த உறவில்தான் முழுமை பெறுகிறது என்பது அவர்களுக்குப்புரிந்திருந்தது.

இல்லறத்தில் ஆண்,பெண் இடையே இருக்கும்உறவு, ஒளிவு மறைவில்லாதது.அன்பு செலுத்துவது, உண்மையாகஇருப்பது, மரியாதை தருவதுஎன எதுவுமே ஒன்வே டிராஃபிக் இல்லை. செக்ஸிலும் இப்படித்தான்... அது இருவரின்தேவைகளையுமே முழுமையாக பூர்த்தி செய்யும்படி அமைய வேண்டும் என்றனர் ரிஷிகள். ‘பெண் என்பவகள் ஆணுக்கு படுக்கையில் சந்தோஷம்தருவதற்காகப் படைக்கப்பட்டவகள் இல்லை. அந்த உறவில் சுகம் தேடும் உரிமை அவளுக்கும்இருக்கிறது. அந்த இன்பம் கிடைக்காதபட்சத்தில் அவகள் திருமண உறவுக்கு வெளியில்அதைத் தேட தயங்க மாட்டாகள். அதனால் குடும்பத்தில் மட்டுமில்லை... சமூகத்திலும்பிரச்னைகள் உருவாகும்’ என்பது அந்தரிஷிகள் சொன்ன வாக்கு.

முடிவாக அவர்கள்சொன்ன நீதி... ‘இந்த உறவில்கொடுப்பவர், எடுப்பவர் என்றவித்தியாசம் இல்லை!’ நமது ரிஷிகள்நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து வைத்திருந்த உண்மைகளை நாற்பதுவருடங்களுக்கு முன்புதான் தீவிர ஆராய்ச்சிகளின் வாயிலாக மேற்கத்திய நாகரிகம்புரிந்து கொண்டிருக்கிறது.
வாழ்க்கையின்முழுமையான பரிமாணத்தை நமது மதிப்புக்குரிய முன்னோர் காட்டினார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்நமது இந்த மரபு வேரைப் பிடுங்கி எறிந்து, "பாலுணர்வு" என்பதையே ஒரு மிகப் பெரியகவர்ச்சி அம்சம் போல ஆக்கி, "ஒருவனுக்குஒருத்தி" என்பதன் புனிதத்தையும் இல்லாமல் ஆக்கி, அவர்களது "டேக் இட் ஈஸி" கலாசாரத்தைநமக்கும் விதைத்து விட்டனர்.

இதிலிருந்துமீண்டு வர என்ன வழி? நமது பாரம்பரியஞானத்தின் வேர்களைத் தேடி, செக்ஸ் தொடர்பானசிக்கல்களுக்கு அறிவியல்ரீதியான தீர்வுகளைக் காணும் முயற்சி தான் இந்தத் தொடர்.மிகுந்த கண்ணி யத்தோடும், அளவற்ற ஜாக்கிரதைஉணர்வோடும் இந்தத் தொடரை அணுகியிருக்கிறார் தன் ஆராய்ச்சிகளின் மூலம் உலகளவில்புகழ்பெற்ற செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி.