வியாழன், 26 ஏப்ரல், 2012

ஜாதிக்காய்

பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயகராவாக பயன்படுத்தப் பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது. ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருள்: 

ஜாதிக்காயில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் 15 சதவிகிதம் உள்ளது. அல்பா பைனென், பீட்டர் பைனென், அல்பா-டெர்பைனென், பீட்டா - டெர்பைனென், மிர்ட்டிசின், எலின்சின், செப்ரோல். ஜாதிக்காய் வெண்ணெயில் புட்டிரின் மற்றும் மிர்ஸ்டைன், ஆகிய எண்ணெய் காணப்படுகிறது. ஜாதிபத்ரியிலும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளன. இவை ஜாதிக்காயில் காணப்படும் அதே எண்ணெய் வகைகள் என்றாலும் இவற்றில் மிர்ட்டிசின் அதிக அடர்த்தியாக உள்ளது.

உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்: 

ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும். காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

தாம்பத்தியம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் உபயோகித்தாலே போதும்.

வேட்டுவ மூளை!

இவன் வேட்டைக்கு உகந்தவனா, இவன் மரபணுக்கள் வேட்டுவ வீரியம் கொண்டவனவா என்று தரம் பிரிந்து பெண்கள் ஆண்களை தேர்ந்தெடுத்தால், ஆண்களுக்கு வேட்டையின் தங்கள் திறமையை நிரூபவித்துக்காட்ட வேண்டிய நிர்பந்தம் எழுந்தது.


ஆனால் இதில் ஒரு பெரிய பிரச்சனையே இருந்தது. புலி, சிங்கம், ஓநாய் மாதிரி மனிதன் பரம்பரை வேட்டுவன் அல்லவே. இவன் குரங்கு வம்சாவழியிலிருந்து வந்தவனாயிற்றே. குரங்குகள் பெரிதாய் வேட்டையாடாதே. அப்படியே பார்த்தாலும், இயல்பில் எல்லா ஜீவராசிகளிலுமே ஆணை விட பெண் தானே அதிக திறமையாய் வேட்டையாடும். இவனோ ஆண், ஆனால் வேட்டையில் சிறந்து விளங்கினாலே ஒழிய பெண் இவனோடு கூடமாட்டாள் என்கிற நிலைமை….ஆனால் இவனுடைய மரபணுக்கள் லேசுபட்டவை இல்லையே…..எந்த சூழ்நிலையிலும் தன்னை மீட்டுருவாக்கம் செய்து ஜெயித்துக்கொண்டே இருக்க முயல்வது தானே இவற்றின் ஸ்பெஷாலிட்டி……அதனால் மீண்டும் தம்மை புதுபித்துக்கொண்டன ஆணின் மரபணுக்கள். எப்படி என்று தானே கேட்குறீர்கள்:

இயற்கையின் பொது விதி: ஆண் பால் தான் பெண்ணை தேடி கண்டு பிடித்து கூட வேண்டும். அதனால் இயல்பிலேயே ஆண்களுக்கு தொலை தூரம் துணை தேடி போகும் தன்மை உண்டு. இன்றும் கூட இளவட்ட ஆண்கள் வயசுக்கு வந்துவிட்டாலே, ஏதாவது வண்டி பிடித்து அக்கம் பக்கத்து ஊர்களுக்கு போய் அங்கிருக்கும் பெண்களை எல்லாம் தரிசித்துவிட்டு வருவதையே ஒரு ஸ்வாரசியமான பொழுது போக்காய் வைத்திருக்கிறார்களே….அது தான் இயல்பான ஆடவர் குணம். இதற்காகவே ஆண்பால் மூளையில் தூரம், திசை, ஆகியவற்றை எடைபோட வல்ல பிரத்தியேக மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் பெண்பால் மூளையில் அவ்வளவு வலிமையாக இருப்பதில்லை. அதனால் தான் இன்றும் கூட பெண்களால் திறந்த வெளிகளில் திக்கு திசை அனுமானிக்க முடிவதில்லை. ஏதாவது நில குறிகள் (landmarks) இருந்தால் அவற்றைவைத்து இடங்களை அடையாளம் கண்டு கொள்ள முயல்கிறார்கள் பெண்கள். இப்படி இயற்கை துணை தேடலுக்காக ஆண்களுக்கு இயல்பாக அருளிய இந்த மூளை மையத்தை தான் ஆண்கள் மிக சாமார்த்தியமாக இரை தேடவும் பயன் படுத்திக்கொள்ள ஆரம்பித்தார்கள். போக போக இதில் செம்மை தேர்ச்சி பெற்றவர்களாகவும் மாறி போனார்கள்

இயற்கையின் அடுத்த அமைப்பு: ஆண்களின் மூளை இருக்கும் “உருவம் அறிந்து பொருத்தும் தன்மை” இதை stereognosis என்போம். கலவியின் போது பெண்பால் பெரிதாய் மூளையை பயன்படுத்த வேண்டி இருப்பதில்லை. சும்மா வெறுமனே அசையாமல் இருந்தாலே போதும். ஆனால் ஆணின் பணியோ ரொம்பவே நுனுக்கமானது. உடல் பாகங்களை மிக சரியாக ஒரிங்கிணைத்து, பொருத்தினாலே ஒழிய இனவிருத்தி ஏற்படாது. ஆக ஒரு ஜீவராசி தழைப்பதும், சுவடே இல்லாமல் மறிப்பதும் ஆணின் ஸ்டீரியோகுனோஸிஸ் என்கிற இந்த திறமையை பொருத்து தான். அதனால் இயற்க்கை ஆணின் மூளைக்கு மட்டும் இப்படி உருவங்களை உணரும் பிரத்தியேக மையத்தை அமைத்திருக்கிறது. குரங்காய் இருந்த போது இந்த மையத்தை வெறுமனே துணை சேர்க்கைக்காக பயன்படுத்தியவன், மனிதனாய் மாறி மாமிச வேட்டைக்கு போகும் போது, இதே மையத்தை ஆயுதம் தயாரிக்க பயன்படுத்த ஆரம்பித்தான். இதனால் மனித குலமே கூடுதல் பிழைக்கும் திறனை பெற்றது

இப்படி இயறக்கையில் ஏற்கனவே இருந்த அமைப்புக்களை வைத்து ஆண் வேட்டைக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டாலும், அடிப்படையில் இவன் வேட்டுவ வம்சாவழி இல்லை…..அதனால் வேட்டைக்குண்டான குறி பார்த்தால், வேகம் உணர்தல், திட்ட மிட்டு கூடி வேட்டையாடுதல், சமிஞ்சையின் மூலமாய் இரைக்கு தெரியாமல் உரையாடிக் கொள்ளுதல், என்பது மாதிரியான மற்ற மையங்கள் அவன் மூளையின் இருந்திருக்கவில்லை. ஆனால் இந்த மையங்கள் இல்லாமல் வேட்டையாட முடியாதே! இதற்க்காக புது புது மையங்களை மூளையில் உருவாக்கினாலோ, மூளையின் சுற்றளவு பெரிதாகிவிடும். மூளையின் சுற்றளவு ரொம்பவும் பெரிதாகிவிட்டால் மனித பெண்ணின் இடுப்பு வழியாக இந்த பெரிய தலையை பிரசவிப்பது என்பது பெரும் பாடாகிவிடும். இதுவே பெரிய இக்கட்டாகி போனது. மூளையில் புது மையங்களும் வேண்டும், ஆனால் மூளையின் மொத்த சுற்றளவும் பெரிதாகாமல் பிரசவத்திற்கு தோதான சைஸிலேயே இருக்க வேண்டும் என்றால்………..அதற்கும் ஒரு வழியை கண்டு பிடித்தன ஆணின் மரபணுக்கள்: பேச்சுக்கு உண்டான மையத்தை ஒரு வேட்டுவன் ரொம்பவும் பயன் படுத்த முடியாதே…….அவன் பலநாட்கள் அமைதியாய் பதுங்கி இருந்து தானே வேட்டையாடவே செய்வான், ஆக எப்படியும் பேச்சு அவனுக்கு உதவ போவதில்லை. அடுத்து முகத்தை பார்த்து உணர்வை புரிந்துக்கொள்ளும் மையமும் வேட்டையின் போது ரொம்பவும் தேவை படாது………அப்புறம் இவன் பாட்டிற்கு “அய்யோ பாவம் இந்த குட்டி மான்.” என்று முகம் பார்த்து உருக ஆரம்பித்துவிட்டான் என்றால் வேட்டையை கொட்டை விட்டு விடுவான், அப்புறம் இவன் குட்டிகள் பட்டினி கிடக்க நேரிடலாம். அதனால் இந்த முகத்தை பார்த்து ஃபீல் செய்யும் மையமும் அவனுக்கு அவ்வளவாக தேவை படவில்லை. ஒரே சமயத்தில் பல விஷயங்களை போட்டு மனதில் உலப்பிக்கொண்டே இருந்தாலும் அவனால் வேட்டையில் கவனம் செலுத்த முடியாது. அதனால் multi tasking மையமும் ஒரு வேட்டுவனுக்கு தேவை இல்லை. பல நாட்களுக்கு ஏக மனதாய் ஒரே குறியாய் கவனம் சிதறாமல் காத்திருந்தால் தான் அவன் வேட்டையில் வெற்றி பெறவே முடியும்……..ஆக கூட்டி கழித்து பார்த்தால், மொழி மையம், முகபாவத்தை கிரகிக்கும் மையம், பலவிஷயங்களை ஒரே சமயத்தில் ஒரிங்கிணைத்து யோசிக்கும் மையம் ஆகியவை எல்லாம் வேட்டைக்கு தேவைபடவில்லை. அதனால் இந்த மையங்களுக்காக அதுவரை ஒதுக்கிய இடத்தை பெரும்பாலும் காலி செய்துவிட்டு, வேட்டைக்கு வேண்டிய புதிய தேர்ச்சிகளை வெற்றிடங்களில் நிரப்பின ஆண்களின் மரபணுக்கள்.

இந்த மாற்றங்களினால் மனித ஆண் கை தேர்ந்த வேட்டுவன் ஆனான். ஆனால் அதற்கு மேல் பெண்களின் மனதையோ, முக பாவத்தையோ புரிந்துக்கொண்டு இனிமையாய் பேசும் தன்மையை அவன் இழந்து விட்டான். இரை கிடக்கிறதோ இல்லையோ, ஒரே இலக்கை துரத்திக்கொண்டு போய், தவமாய் தவம் கிடந்து அதில் பெரிய ஸ்வாரசியம் உணரும் விசித்திரமான குணத்தையும் பெற்றான். அதனால் ஆண் பெண் என்கிற இந்த இரண்டு பாலினத்திற்கும் பெரிய மன இடைவெளி உருவாக ஆரம்பித்தது. அதற்கு மேல் ஒருவரை மற்றவர் புரிந்துக்கொள்ளுவது கடினமாகிவிட்டது. அனால் புரிந்துக்கொள்வதை விட, பிழைத்துக்கொள்ளுதல் அந்த காலத்தில் முக்கியமாக பட்டதால் ஆணின் மூளை மாற்றங்களை பெண்கள் சட்டை செய்துக்கொள்ளவில்லை…………உணவு கொண்டு வரும் வரை எல்லாமே ஷேமம் தான் என்று இருந்து விட்டார்கள். ஆனால் போக போக ஆணின் மூளை மாற்றத்தினால் பல பிரச்சனைகள் தலை தூக்க ஆரம்பித்தன………அவற்றைபற்றி எல்லாம்………..
நன்றி: dr ஷாலினி (http://linguamadarasi.blogspot.in )

புதன், 25 ஏப்ரல், 2012

குழந்தை பிறந்த பிறகு தாம்பத்தியம்


புதிதாக திருமணம் முடிந்து சில வருடங்கள் வரை கணவரின் அருகிலேயே இருந்து அவருக்கு தேவையானவைகளை பார்த்து பார்த்து கவனிப்பார்கள் இல்லத்தரசிகள். அப்புறம் குழந்தை பிறந்த உடன் குடும்பத்தில் வேலை அதிகரிக்கும். இதனால் கணவரை சரியாக கவனிக்காமல் டீலில் விட்டுவிடுவார்கள். இதனால் குடும்பத்தில் சிக்கல்கள் எழுகிறது. கணவரின் கவனம் திசைமாறுகிறது. இதை தவிர்க்க, குடும்பத்தில் கணவர், குழந்தைகளிடையே பேலன்ஸ் செய்யவும், மீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவதற்கும் பெண்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் உளவியல் நிபுணர்கள்.
தேங்கிப் போகாதீர்கள்
பெண்களுக்கு திருமண வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருக்கும் தாம்பத்திய உறவு ஈர்ப்பு, போகப் போக சமைத்தல், வீட்டைச் சுத்தம் செய்தல், குழந்தைகளைக் கவனித்தல் என்று மங்கிப் போய்விடுகிறது. உங்களின் தாம்பத்ய வாழ்க்கையை தேக்கமடைய விடாதீர்கள் வாழ்க்கை தேங்கிக் கிடப்பதற்கு அனுமதிக்காதீர்கள். தாம்பத்ய உறவு வெறும் சடங்காக மாறிவருதாக உணரத் தொடங்கினால் அதில் சுவாரசியம் கூட்டுவதற்காக, கணவருக்கு ஆர்வம் ஊட்டுவதற்கு என்ன செய்யலாம் என்று நீங்கள் யோசிக்க வேண்டும்.
அழகாய் உணருங்கள்
சுயமரியாதையில்தான் தன்னம்பிக்கை தோன்றுகிறது. உடலைப் பற்றி கவலைப்படாமல், அதிக ஆர்வமில்லாமலும் உங்களை நீங்கள் உணர்ந்தால், செக்ஸியாக தோன்றுவதற்கான விஷயங்களைச் செய்யுங்கள்.அழகு நிலையம் சென்று அழகுபடுத்திக்கொள்ளலாம். கூந்தலில் கவனம் செலுத்துங்கள். பழைய உள்ளாடைகளைத் தூக்கிப் போட்டு விட்டு புதிய கவர்ச்சிகரமான உள்ளாடைகளுக்கு மாறுங்கள்.
உங்களை உணருங்கள்
கச்சிதமான உடம்பைக் கொண்ட பெண்களை விட, படுக்கையறையில் தன்னம்பிக்கையுடன் செயல்படும் பெண்களைத்தான் ஆண்களுக்குப் பிடிக்கிறதாம். உடலில் கூடியிருக்கும் எடையை மறந்துவிட்டு படுக்கையறையில் உற்சாகம் காட்டுங்கள். பாலுணர்வு சிந்தனை பொங்கட்டும். உங்கள் உடம்பைப் பற்றி நீங்களே தெளிவாக அறிந்துகொள்ளுங்கள். எங்கே தொட்டால் பிடிக்கிறது, எங்கே உணர்ச்சி மேலிடுகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தன்னம்பிக்கை பெண்கள்
தாம்பத்ய உறவின் போது செயல்பாட்டில் திறமை பெற்றவராக மாறுங்கள். அது எளிமையானதாக, வழக்கமானதாக இருக்கலாம். தைரியமானதாக, சந்தோஷ அதிர்வளிப்பதாக இருக்கலாம். ஆனால் அந்தக் குறிப்பிட்ட செயல்பாட்டில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும் தன்னம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும்.
சந்தோஷத்தில் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று திருப்தி அடைந்துவிடாதீர்கள்.வேண்டும் வேண்டும் என்று கேளுங்கள். விரும்புவதைத் தைரியமாகச் சொல்லுங்கள். ஆண்கள், பெண்களின் மனங்களைப் படிப்பவர்கள் அல்லர். எனவே அவர்கள் சரியாகச் செயல்படவில்லை என்றால் அவர்களைத் திசைதிருப்பி சரியான வழியில் செலுத்துங்கள்.
மகிழ்ச்சிப் படுத்துங்கள்
படுக்கையறையில் எதைப்பற்றியில் கவலைப்படாமல் அமைதியாக இருக்கவேண்டாம். எப்பொழுதுமே உங்களவர்தான் தொடங்கவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே முன்முயற்சியில் ஈடுபடுங்கள். `அவருடைய’ விருப்பங்களைக் கேளுங்கள். அவர் முழுமையாகத் தயாராவ தற்கு நேரம் கொடுங்கள். புதிய முறைகளில் அவரைத் தூண்டுங்கள், புதிய பரிட்சார்த்த முறைகளில் ஈடுபடுங்கள். புதிய இன்பம், புதிய மகிழ்ச்சி வெளிப்படுவதை உணர்ந்து நீங்கள் ஆச்சரியம் அடைவீர்கள்.
மனதுக்கு மாற்றம், மகிழ்ச்சி தரும் புதிய இடங்களுக்குத் துணைவருடன் செல்லுங்கள். மனதில் மகிழ்ச்சி பொங்குவதை உணருங்கள். அந்த உற்சாகம், தாம்பத்யத்திலும் வெளிப்படும்.

திங்கள், 23 ஏப்ரல், 2012

காமசூத்திரம் கற்பிக்கும் முதல் இரவும் உச்ச கட்டமும்…


இக்கட்டுரை காமம் பற்றிய கல்வியாகவே காமசூத்திரத்திலிருந்து அப்படியே எடுத்து எழுதப்பட்டுள்ள‍தே தவிர வேறெந்த உள் நோக்கமும் கொண்டதல்ல…! கண்டி ப்பாய் இது வயது வந்தவர்களுக்கு மட்டுமே.
முதல் இரவு ;-
தனக்குத் தகுந்த பெண்ணைத் தேர்ந்தெடுத்து மணம் புரிந்து கொள் ளும் இளைஞன் முதலில் அனுபவமற்ற தன் இளம் மனை வியின் நம்பிக்கையைப் பெற முயல வேண்டும். முற்றிலும் புதிய வாழ் வை மேற்கொள்ளப்போகும் அவள் மன நிலையை உணர்ந்து நடக்க வேண்டும். மெல்லப் பக்குவப்படுத்தி அவள் அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறியச் செய்வது அவசியமாகும். கலவி இன்பம் காண அவசரப்படுதல் கூடாது.
அணுகும் முறை ;-
பெண்கள் இயற்கையிலேயே மலரைப் போன்ற மென்மையான தன் மையுடையவர்கள். எனவே மலரைக் கையாளுவது போன்று மிரு துவாகக் கையாளவேண்டும். கசக்கி முகர முயற்சித்தல் கூடாது.
முதல் இரவில் பெண்ணிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளக் கூடாது. தனது வீரத்தை அல் லது பலத்தைக்காட்ட அதுவல்ல நேரமும் இடமும். முதன் முறையான கலவியில் பெண் ணை பல வந்தப் படுத்தினால் அவள் கலவியையே வெறுக் கும் நிலை உருவாகக்கூடும். இந்த வெறுப்பானது ஆண் வர் க்கத்தின் மீதே ஏற்பட்டு அவள் மனதில் நிரந்தரமாகப் பதியக் கூடும். எனவே புதுப்பெண் ணின் உணர்ச்சி பாதகம் அடையாத வகையில் மென் மையாக நட ந்து கொள்ளவேண்டியது மிக அவசியமான ஒன்றாகும். அவளுடைய நம்பிக்கையை முற்றிலும் பெறாத வரையில் கலவி க்கு முதற்படியான புறத்தொழில்களில் கூட ஈடுபடுதல் கூடாது. அப்போதுள்ள சூழ்நிலை க்குத் தகுந்தவாறு நடந்து கொண்டு முதலில் பூரணமாக அவளுடைய நம்பிக்கையைப் பெறுதல் வேண்டும்.
முதலாவது கட்டம் ;-
இளைஞன் பெண்ணைத் தழுவுதலிருந்து தொடங்க வேண்டும். இப் படித் தழுவுவதை சிறிது நேரம் மட்டுமே செய்ய வே ண்டும். அதிக நேரம் தழுவிக் கொண்டே இருந்தால் அது பெண்ணிடம் வியப்பு உண ர்ச்சியைக் கிளப்பி விட்டு வி டும். முதன் முதலில் தழுவும் போது நெருங்கிப் பழகாத காரணத்தினால் பெ ண்ணின் மேல் பாகத்தை மட்டுமே தழு வவேண்டும். அந்தச் சமயம் அவள் அதற்குச் சம்மதி ப்பாள்.
பெண் சற்று வயதானவளாக அதாவது பருவமடைந்து சில ஆண்டு கள் ஆனவளாகவும் ஏற்கனவே அவனுக்கு பழக்கம் உள்ளவளாக வும் இருந்தால் வெளிச்சமுள்ள அறையில் அவளைத் தழுவ லாம். ஆனால் இளம் பெண் ணாகவும் அதிக அறிமுகமில் லா தவளாகவும் இருக்கும் பட்சத்தில் இருட்டிலேயே த ழுவுதல் நல்லது. அதுதான் அவ ளுடைய வெட்கத்தைக் குறைத்து அவளையும் விரு ப்பத்தோடு ஈடுபடச் செய்யும்.
இரண்டாவது கட்டம் ;-
ஆணினுடைய ஆலிங்கனத்தை பெண் ஏற்றுக்கொண்டதும், தாம்பூ லத்தை (இன்றைய காலத்தில் ஏதேனும் இனிப்பை) அவள் வாயில் ஊட்ட வேண்டும். அப்படிக்கொடுக்கும் போது மெல்ல அவளுடைய இதழ்களில் பரிவுடன் ஓசையின்றி முத்த மிட வேண்டும்.
மூன்றாவது கட்டம் ;-
இந்த இரண்டும் செய்த பிறகு அவளைப் பேசத் தூண்ட வேண்டும். அவளிடம் எதை ப்பற்றியாவது உற்சாகமான கேள்வி கேட்பது இதற்கு ஏற்ற முறையாகும்.
‘’என்னை உனக்குப் பிடித்திருக்கிறதா?’’ என்பது போன்ற கேள்விக ளைக் கேட்க லாம். இப்படிக் கேட்பதற்கு முதலில் பதில் சொல்ல மாட்டாள். அதிகமாக வற்புறுத்தி னால் தலையை மட்டும் ஆட்டு வாள். தன் வாயைக் கிளறுவ தற்காகவே இப்படிக் கேட்பதாக அவள் எண்ணும்படி அமைந்து விடக் கூடாது உங்கள் கேள்விகள். அப்படி யான எண்ணம் அவளுக்கு உண்டாகும் பட்சத்தில் அவளிடமிருந்து திருப்திகரமான பதிலும் உடன் பாடும் கிடைக்காமல் போகக்கூடும்.
நான்காவது கட்டம் ;-
வெட்கத்தைவிட்டு சரளமாகப் பேசத் தொடங்கியதும் அவள் தாம்பூலத் தை எடுத்து எதுவும் பேசாமல் அவனுக்குக் கொடுப்பாள். அப்போது தனது இளம் முலைகளை அவன் லேசாக வருட வேண்டும் என்பதற்கான அறிவிப்பு சமிக்ஞை இது. அவன் உடனே மெல்ல விரல்களால் அவள் முலைகளைப் பிடித்து தடவ வேண்டும். அப்படிச் செய்ய வேண்டாம் என்று அவள் வாய்விட்டுச் சொன்னாலோ, அல்லது பேசாமல் கையினால் தடுத்தாலோ தன்னை அவள் அணைத்துக் கொண்டால் மீண்டும் அவ்வாறு செய்வதில்லை என்று கூறலாம். இந்த விதமாக அவளாகத் தன்னை அணைத்துக் கொள்ளச் செய்ய வே ண்டும்.
அப்படி அவள் அவனை அணைத்துக் கொள்ளும்போது அவளது உடலை மிருதுவாகத் தடவிக் கொடுக்க வே ண்டும். அவள் அணைக்கும் போது அவளது மார்பகங்கள் ஆணின் மார்பின் மீது படிந்திருக்கும். அப்படியே மெல்ல அவளைத்தூக்கி தன் மடியில் இருத்திக் கொண்டு தனங்களை வருட வேண்டும். அவ்வப் போது முத்தங்களும் கொடுத்தல் வேண்டும்.
முதல் புணர்ச்சி ;-
மனைவியாய் அமையப் பெற்ற பெண்ணானவள் சிறுவயதினளாகவும், கலவி பற்றி போதிய அறிவின்றி மிரட்சியுடனும் இருக் கும் பட்சத்தில் முதல் இரவி லேயே கலவியில் ஈடுபடுதல் கூடாது. முதல் இரண்டு மூன்று இரவுகள் மேற்சொன்னபடி நடந்து கொண்டு மனைவியின் வெ ட்கத்தைப் போக்கி முதலில் அவளுடைய நம்பிக்கையைப் பெறவேண்டும். அடுத்த தினங்களில் பெண்ணின் உடல் முழுவ தும் தன் கையினால் தடவி பல்வேறு பாகங்களிலும் முத்தமிட வேண்டும். பின்பு அவள் தொடையை மெல்லத் தேய்த்து விட வேண்டும். அப்படியே கையை மெல்ல மேலே கொண்டு போய் அடித்தொடைகளைப் பிடித்துவிட வேண்டும். இதற்கு அவள் மறுத் தாலோ அல்லது கையினால் தடுத்தாலோ மூச்சுத் திணரும் அளவுக்கு முத்தங்களைப் பொழிந்து அவளது தனங்களைத் தட்டுவது அல்லது கசக்குவது போன்ற செயல்களைச் செய்து அவளது உணர்ச்சி யைக் கிளற வேண்டும்.
தொடைகளைப் பிடித்து விடுவதில் அவள் இன்பத்தை அடையத் தொடங்கும் போது அவளுடைய யோனியை மிருதுவாகத் தடவிக் கொடுத்து அவள் உடலைப் பிடித்து விடும் சாக்கில் புடவையை அவிழ்த்து தன்கை யினாலேயே நிர்வாணமாக்கி விடவேண்டும். ஏதாவது சாக்கை வைத்துக் கொண்டு இதையெல்லாம் செய்வது அவசியம். கலவி யில் நேரடியாக இறங்கி விடக்கூடாது. பெண்ணின் உடலும் உள் ளமும் பக்குவ மடைந்து அவள் தயாராகும் வரை கலவியில் ஈடுபட முயற்சிக்கவே கூடா து.
அவள் பருவமடையாமலோ அல்லது கல விக்குத் தயாராகாமலோ இருந்தால் அவ சரப்பட்டு முரட்டுத்தனமாக நடந்து கொள்ளக் கூடாது. அவளுடைய வெட்கம் முழுவதும் மறைந்து காதல் விளையாட்டு களில் இயல்பாக ஈடுபடும்போதே அவளுடைய மனதில் அதிர்ச்சி ஏற்படாத வகை யில் கலவியை அறிமுகப்படுத்த முடியும்.
முதல் இரவிலேயே கலவியில் ஈடுபடாமல் எதற்காக காத்திருக்க வேண்டும்? இப்படிப் பெண்ணைத் திருப்திபடுத்துவது ஏன்? என்ற கேள்வி எழலாம். சில காரணங்கள் உண்டு
# ஆரம்பத்தில் பெண்ணின் விருப்பப்படி நடந்து கொண்டு அவளு டைய நம்பிக்கையைப் பெற முயலுவதால் அவள் பரிபூரணமாகக் கணவனை நம்புவதுடன் அவனுடைய காம உணர்வுக்கு அடிமையாகவும் ஆகிவிடுவாள்.
# அவனுடைய விருப்பு வெறுப்புக்கு மட்டுமே உட் படும் பெண்ணாக இருந்தால் அவள் விரைவி லேயே உணர்ச்சியற்ற மரக்கட்டை போலாகிவி டுவாள். கலவித்தொழிலில் அவளுடைய ஒத்துழைப்பு இருக்காது. அப்படியான பட்சத்தில் கலவியில் இன்பம் காண இயலாது. எனவே தன்னிச்சையான விருப்புடன் அவளுடைய ஒத்துழைப்பு கிடைக் கும்படி ஆண் நடந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது.
# பெண்ணைக் கவரும் வழியையும் அவளது நம்பிக்கையைப் பெறும் இனிய முறைகளையும் அறிந்து அவளுடன் இணையும் ஆண் எப்போதும் பெண்ணின் பெருமதிப்பைப் பெற்றவனாகவேஇருப்பான்.
# பெண்ணைச் சரியாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்யாமல் அவ ளை அனுப விக்க முற்படும் இளைஞன் அவள் மனதில் பயத்தையும் வெறுப்பையுமே ஏற்படுத்துகிறான்.
# ஒரு பெண்ணானவள் ஆணிடமிருந்து அன்பையும் அனுதாபத்தையும் எதிர்பார்க்கிறாள். அது கிடைக்காமல் போகும்போது அவள் மனம் பாதிக்கப்படுகிறது. அதனால் அவள் அந்த ஆணையும் அவ னின் கலவி யையும் வெறுக்கத் தொடங்கும் நிலை உண் டாகிறது.
பெண்மையின் காம இச்சை ;-
ஒரு பெண்ணின் காம இச்சை அதிகரிப் பதை அறிந்து கொள்ள சில வழிகள் உள்ளன. பெண்ணிடம் காணப் படும் சில அறிகுறிகள் அதை புலப்படுத்தும். அவை ;-
1.உடல் தளர்தல் 2.கண்களை மூடிக்கொள்ளுதல் 3.வெட்கம் மறைதல் 4.இன்பத்தொனி எழுப்புதல்
பெண்ணுக்கு காம இச்சை பெருகுவ தை அறிய மேற்சொன்ன அடையா ளங்கள் உதவுகின்றன. ஆணுக்கு காம இச்சை பெருகும் போது லிங்கம் முழு வதுமாய் விரைத்துக் கொள்கிறது. அப்போது அவள் எவ்வளவு அதிகமாக முடியுமோ அவ்வளவுக்கு லிங்கத்தை யோனிக்குள் அழுத்திக் கொள்வாள். அசைவுகளைத் துரிதப்படுத்த ஒத்துழைப்பாள். அவளுடைய காமம் உச்சக் கட்டத்தை அடையும் போது தன் கைகளை ஆட்டுவாள். உடல் வியர்க்கும். அவனைக் கடிப்பாள். தன் மேலே யிருந்து எழுந்திரு க்க வி டாமல் அவனைக் கட்டிப் பிடித்துக் கொள்ளுவாள். யோனியிலிருந்து லிங்கத்தை எடுத்துவிட கொஞ் சமும் சம்மதிக்காத வ கையில் நடந்து கொள்ளுவாள்.
பெண்ணின் அதிருப்திக்கான அடையாளங்கள் ;-
கலவியில் ஈடுபட்ட பெண் இன்பமும் திருப்தியும் அடையவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளவும் சில வழிகள் உள்ளன.
தன்னுடைய காம இச்சை அடங்கும் முன்பே ஆணுக்கு விந்து வெளிப்பட்டு விட்டால் அவளே கலவித்தொழில் செய் வது போல தன் இடுப்பை மேலும் கீழும் அசைப்பாள். ஏன் இப்படியென்றால் புறத் தொழில்களால் பெண்ணை உச்சநிலை அடையச் செய்து அத ன்பின் அவளுடன் சேராமல் எடுத்த எடுப்பிலேயே கலவியில் ஈடு படுவதால் இப்படி நேரிடுகிறது. ஆண் பெண் இருவருக்கும் ஒரே சமயத்தில் இச்சை அடங்குவதாக இருக்க வேண்டும். ஆண் அவசரப்பட்டால் அத னால் பெண்ணுக்கு கலவியில் திருப்தி ஏற்படாமல் போகும். தனக்கு இச்சை பூர்த்தியானதும் பெண்ணுக்கும் அதே சமயம் பூர்த்தியானதாக ஆண் நினைப்பது தவறாகும். கலவியில் இருவருடைய இன்பத்தையும் திருப்தியையும் கவனிப்பது மிக முக்கியம் என்பதை மறந்து விடக்கூடாது. பெண்ணுடைய திருப்தி அவசியமாகக் கவனிக்கப்பட வேண்டும்.
பெண்ணை உச்ச கட்டத்தை அடையச்செய்வது எப்படி? ;-
பெண்ணினுடைய காம இச்சையை உச்சகட்டத்தை அடையச் செய்வதற்கு பல வழிகள் உள்ளன.
ஆலிங்கனம் எனப்படும் தழுவுதல், பிடித்து விடு தல் அல்லது கசக் குதல், முத்தமிடுதல், நகக்குறி பதித்தல், பற்குறி பதித்தல், தட்டு தல் அல்லது தடவுதல், மாற்றுப்புணர்ச்சி, வாய் சேர்க்கை போ ன்ற புறத்தொழில்களை முதலில் செய்து அதன் பின்னர் கலவியில் ஈடு படுவதன் மூலம் ஒரு பெண்ணை உச்ச கட்டத்தை அடையச் செய் யலாம். ஆண் தன் விரல்களால் பெண்ணின் அல்குலைத் தேய்த்து விடுவதால் அவளின் இச்சை அதிக ரிக்கும். அதைச் சுற்றி சுற்றித் தேய்த்து உணர்வூ ட்ட வேண்டும். பிறகு ஒரு விரலை மட்டும் யோனி க்குள் நுழைத்துப் பார்க்கவேண்டும். உள்ளே தொடுவதற்கு மென்மையாக இருந்தால் அதன் பின் லிங்கத்தை உள்ளே செலு த்தலாம்.
யோனியின் தன்மையை ஆண் சோதித்துத் தெரி ந்து கொள்வது இன்பம் பெருகுவதற்கு உதவியாக இருக்கும். பெண்ணின் யோனி யின் ஸ்பரிசத் தன்மையை நான்கு விதமாகச் சொல்லலாம்.
1.தாமரை இதழ் போன்று மென்மையானது 2.முண்டும் முடிச்சு மானது 3.மடிப்புகளாக தளர்ச்சியடைந்திருப்பது 4.பசுவின் நாக் கைப் போல சொர சொரப்பானது.
யோனியானது தொடுவதற்கு மென்மை யாக இருந்தால் அத்தகைய பெண்கள் விரைவாக காம உணர்ச்சி கிளர்ந்து எழுந்து உச்ச கட்டத்தை அடைந்து விடு வார்கள். கலவிக்கு அவர்களை தயார் படுத்துவது மிகவும் எளிது. எனவே அத்தகைய யோனியை தேய்த்து விட வேண்டிய அவசியமில்லை. மற்ற மூன்று வகையான யோனி உடையவர்களுக்கு லிங்கம் அதிகமாக உள்ளே நுழை ந்து உராய்ந்தால்தான் காம இச்சை உச்ச கட்டத்தை அடைந்து திருப்தியடை வார்கள்.
பெண்கள் வெளிப்படுத்தும் செய்கைகளிலிருந்து கலவியின் போது எந்த விதமாக நடந்து கொண்டால் அவளுக்குத் திருப்தியளிக்கும் என்பதை ஆண் தெரிந்து கொள்ள முடியும். ஆண் கலவியில் ஈடுபட்டிருக்கும் போது பெண் ணின் பார்வையானது உடலின் ஏதாவதொரு பாகத்தின் மீது விழலாம். அப் பொழுது அந்தப்பகுதி யில் ஸ்பரிசத்தை அவள் விரு ம்புகிறாள் என்று அர்த்தமாகும். இதையெல்லாம் கவனித்து ஆண் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டு பெண்ணின் இன்பத்தை அதிகரிக்கத் தகுந்தவற்றை செய்து அவளையும் கலவியில் திருப்திப் படுத்த வேண்டும்.
கலவித் தொழில் செய்யும் ஆணுக்கு விந்து வெளிப்படப் போகிறது என்பதை உணர்ந்து கொண்ட பெண் நீட்டிய விரல்களுடன் ஆணினுடைய புட்டத்தில் தட்டலாம். இதைப் பலமாகச் செய் தால் விந்து வெளிப்படுவ தைத் தடுக்கலாம். காம உச்சநிலையை தான் அடையும் வரை பெண் இப்படியே தட்டிக் கொண்டிருந்தால் இருவரும் சமமான இன்பம் துய்க்க வழி ஏற்படும்.
கலவிக்குப் பின் ;-
கலவித்தொழில் முடிந்ததும் ஆணும் பெண்ணும் அடக்கமாகப் படு க்கையிலிருந்து எழுந்து ஒருவர் முகத் தை மற்றவர் பார்க்காமல் குளிக்கச் செல்ல வேண்டும். கலவியின் போது உடல் தளர்ந்து உடையெல்லாம் கசங்கியிருக்கும். சோர்ந்தும், களைத்தும், நலுங்கியும் உள்ள உடலோடு காட்சி யளித்தால் இருவருக்குமே ஒருவர் மீது ஒருவருக்குள்ள கவர்ச்சியானது குறை ந்துவிடும். இதற்காகத்தான் கலவி முடிந்ததும் ஒருவரையொருவர் பார்க்காமல் சென்று குளித்து விட்டு வர வேண்டும் என்பது.
குளித்து முடிந்ததும் புதிய உடை அணிந்து கொண்டு இருவரும் ஒரு இடத்தில் வந்து அமர வேண்டும்.
பெண்ணை ஆண் தன் இடக்கரத்தால் அணைத்துக் கொண்டு இனிய பானம் குடிக்குமாறு கேட்க வேண்டும். ருசியான இனிப்புகளை அவளை அச்சமயம் உண்ணச் செய்து தானும் உண்ண வேண்டும். சூடான பால், மாம்பழம், ஆரஞ்சு முதலான சாறுகளையும் அல்லது தங்களுக்கு விருப்பமான பானங்கள் எதையும் பருகலாம்.
ஏதேனும் அறைக்குள் இருந்தால் வராந்தாவுக்கோ மாடிக்கோ சென்று நிலவொளியின் அழகை அனுபவிக்க வேண்டும். இனிய காதல் பேச்சுகள் பேச வேண்டும். இதனாலும் உணர்வூட்டும் பானங்கள், உணவு வகைகள் உட்கொண்டதாலும் மீண்டும் காம இச்சை கிளர்ந்து எழும்.

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

நடிகர் சிவகுமார் செக்ஸ் பற்றி அவருடைய கருத்துகள்


பல்வேறு துறைகளைப் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளிவாகவும் துணிவாகவும் சொல்லிவரும் நடிகர் சிவகுமார் செக்ஸ் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளிவாகவும் நல்ல புரிதலுடனும் சொல்கிறார். 

அது பற்றிய கேள்வியும் பதிலும்;

கே; செக்ஸ் பற்றி யாருமே தெளிவாகச் சொல்வதில்லையே..நீங்களாவது விளக்குவீர்களா?

; சிற்றின்பம் என்னும் செக்ஸ் முழுமையாக அறிந்தவர்க்கு பூமியிலேயே பேரின்பம். காமக்கலைக்கு கஜூராஹோ கோவில் எழுப்பிய பாரதத்தில் பெரும்பாலானோர்க்கு அந்தக் கலை பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லை என்பதுதான் சோகம்.

குழந்தை பிறக்க ஒரு துளி கொடுத்துவிட்டதாலோ, முதலிரவைத் தாண்டிவிட்டதாலோ நாம் செக்ஸ் கலையில் தேர்ச்சி பெற்றுவிட்டோமென்று கருதமுடியாது.

ஆணின் உடல் அமைப்பு வேறு, உணர்வுகள் வேறு; பெண்ணின் உடல் அமைப்பு வேறு, உணர்வுகள் வேறு. ஆண் செயல்படுபவன்; பெண் அதை பெற்றுக்கொள்பவள்.

எத்தனை நதி பெருக்கடுத்தாலும் கடல் மட்டம் உயராது. எத்தனை விறகுக்கட்டைகளைப் போட்டாலும் வேள்வி நெருப்பு அணையாது. அவ்வளவு வீரியமானது பெண்களுடைய செக்ஸ் உணர்வு.

சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் என்று ஆகாயத்திலும் அடுக்கு மாடிகளிலும் பறந்தும் ஒருவன் ஜாலம் செய்யலாம். ஆனால் ஒரு பெண்ணை அவ்வளவு எளிதில் செக்ஸில் அடிபணிய வைக்க முடியாது.

மனதாலும் உடலாலும் ஒத்துழைப்பதில்லை என்று ஒரு பெண் முடிவெடுத்து விட்டால், சடலத்தோடு உறவுகொண்ட விரக்தியே மிஞ்சும்.

ராமாயணத்தில் கௌதம முனிவன் மனைவி அகலிகையிடம் தேவேந்திரன் மாறுவேடத்தில் வந்து கூடுவான். தன் கணவன் என்று நினைத்து இணங்கிய அகலிகைக்கு அடுத்த சில நொடிகளில் இதுவேறு ஆடவன் என்று புரிந்துவிடுகிறது. இருந்தாலும் போகட்டும் என்று அனுமதித்துவிட்டாள் என்று ஒரு சம்பவம் உண்டு. இதை அறிந்த கௌதம முனிவன் அகலிகையைக் கல்லாகச் சமைத்துவிட்டான் என்று கதை போகும்.

டாக்டர் மாத்ருபூதம் செக்ஸ் பற்றிய விவாதத்தில் அகலிகையின் உணர்வை உறுதிப்படுத்துகிறார். எவ்வளவுதான் ஒரு பெண் மனதளவிலும் உடல்வழியாகவும் முரண்டுபிடித்தாலும், ஒரு காமுகனின் பலாத்காரத்தை- ஒரு கட்டத்தில் உடம்பு ஏற்றுக்கொள்கிறது. மனதை உணர்ச்சி தற்காலிகமாக வென்றுவிடுகிறது. சில கணம் உடல் அந்த உறவில் திளைத்து மூழ்கியபின் மீண்டும் மனம் உணர்ச்சியை வெல்லும்போது நடந்துவிட்ட தவறுக்கு அவள் கதறி அழுவாள். இதுவே உண்மை என்கிறார்.

மனித உடம்பை இரண்டாகப்பிரித்து மேல்பகுதி சுத்தமானது, கீழ்ப்பகுதி அசுத்தமானது. வலது கை சுத்தம்; இடது கை அசுத்தம் என்று பிள்ளைகளிடம் சொல்லித்தராதீர்கள் என்கிறான் ஓஷோ. உடல் முழுமையானது. வாயில் துர்நாற்றம் வீசாமல் இருக்கவேண்டுமென்றால் ஆசனவாய் சுத்தமாக இருக்கவேண்டும். ஆசனவாயில் அடைப்பு ஏற்பட்டால் துர்நாற்றம் மேலே கிளம்பி சிறுகுடல், இரைப்பை, உணவுக்குழாய் வழி வாயிலே புகுந்து வெளியேறும்.

ஆசனவாய் சிறுநீர்த்தாரை இரண்டையும் தூய்மையாக வைத்துக்கொள்ள குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள். சிறுவனோ சிறுமியோ சிறுநீர்க் கழித்தபின் அதிலே தேங்கும் உப்பின் காரணமாக, பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படும்போது விரலால் சொறியவே செய்யும். அங்கு கை வைப்பது பாவம், தவறு என்று சொல்லி குழந்தைகளை அதட்டாதீர்கள், மிரட்டாதீர்கள். 

சிறுநீர் மற்றும் மலம் கழித்தபின் அந்தப்பகுதிகளைச் சுத்தமாகக் கழுவப் பழக்கிவிடுங்கள். அதைவிடுத்து, வீண் மிரட்டல் விடுப்பதால் தன் உடம்பில் உள்ள அந்த உறுப்பு, வேண்டாத ஒன்று-தீண்டத்தகாதது என்று அந்தச் சிறுவன் அல்லது சிறுமி மனதிலே எண்ணம் படிய, அவர்கள் வளர்ந்து திருமணம் செய்து முதலிரவில் சந்திக்கும்போது ஏதோ கெட்ட காரியம் செய்கிறோம்-பாவ காரியம் செய்கிறோம் என்று பயந்தே கூடுகிறார்கள். அதனால் பிறக்கும் குழந்தை குழப்பத்துடன் மிரட்சியுடன் பிறக்கிறது.

ஒரு வயதுக்குப் பிள்ளைகள் வளர்ந்தவுடன் செக்ஸ் பற்றிய விஷயத்தையும், பிறப்பு உறுப்புக்களின் பயன்பாட்டையும் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள் என்கிறான் ஓஷோ.
மனிதனுக்கு இயற்கையில் இரண்டு பசி உண்டு. ஒன்று மேல் வயிற்றுப்பசி. இன்னொன்று கீழ்வயிற்றுப்பசி. இரண்டு பசிக்கும் முறையாகத் தீனி போடாவிட்டால் அடங்காதுஎன்கிறார் கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.

அறியாத வயதில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, ஐந்தாறு நாட்கள் அவளுடன் கூடிக்குலவி ருசி பழக்கிவிட்டு துபாய்க்கு நீ வேலைப்பார்க்கப் போய்விட்டால் அவள் கதி என்ன ஆகும்?

ருசி கண்ட பூனை எத்தனை நாட்கள் பொறுமையாக இருக்கும்?

இதில் அவள் தவறு எங்கே இருக்கிறது?

ராமகிருஷ்ண பரமஹம்சர் வணக்கத்திற்குரிய துறவி. அவர் நாற்பது வயது தாண்டியே திருமணம் செய்துகொண்டார். சாரதா தேவிக்கும் அவருக்கும் இருபத்தியிரண்டு வயது வித்தியாசம். தன் மனைவியை அம்பாள் வடிவமாக, சக்தியின் பிம்பமாக பரமஹம்சர் பார்த்தார். அவரது பக்தியை சாரதா அம்மையாரும் அப்படியே ஏற்றுக்கொண்டார்.அவர்கள் தெய்வீகத்தம்பதிகள்.

இன்று ஒரு ஆண் செக்ஸ் உணர்வு குறையத் துவங்கும் நாற்பது வயதில் தன்னைவிட 22 வயது குறைவான ஒரு பெண்ணை மணந்து, செக்ஸ் பற்றி எதுவும் அவளிடம் பேசாமல், நீ சக்தி வடிவம் என்று பீடத்தில் அமர்த்தி விபூதி அடித்தால் அவள் நிலை என்ன ஆகும் ? யோசியுங்கள்!

பூப்படைந்து ஆறு ஆண்டுகளில் செக்ஸ் உணர்ச்சிப்பொங்கிப் பிரவாகமெடுக்கும் வயதில் அவளை நீ அம்பாள் வடிவம் நெருங்காதேஎன்றால் அவள் கதி என்ன ஆகும்? யோசித்துப் பாருங்கள்.

திருமணமாகி சில ஆண்டுகள் கழிந்ததும் செக்ஸ் உணர்வை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும். இரவு பகல் எந்நேரமும் அதே சிந்தனையோடு, இருபது ஆண்டுகள் கழித்தும் ஒரு ஆணோ பெண்ணோ அலையக்கூடாது.

அதே சமயம் இனவிருத்திக்காக மட்டுமே மனைவியைக் கூட வேண்டும். மற்ற நேரம் அவளை நெருங்கக் கூடாதுஎன்கிற காந்திஜி தத்துவத்தைக் கடைப்பிடித்து, பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியைப் பாராமுகமாய் ரிஷ்யசிருங்கர் போல, முற்றிலும் உறவு தவிர்த்து வாழ்வதும் அவசியமில்லை.

முழுமையான செக்ஸ் இன்பம் என்பது உடலாலும் மனதாலும் ஒருமித்து திருப்தி அடைவது. உடலிலே குறைபாடு உள்ளவர்கள், ஆண்மை இழந்தவர்கள் கூட, ஒரு பெண்ணுக்கு மனதளவில் செக்ஸ் இன்பம் அனுபவித்த திருப்தியைக் கொடுக்கமுடியும்.

விடுமுறை நாட்களில் உங்கள் மனைவியை ஊட்டிக்கு பஸ்ஸில் அழைத்துப் போங்கள். மேட்டுப்பாளையத்திலிருந்து மேலே கல்லாறு பகுதியை பஸ் கடக்கும்போது குளிரில் பற்கள் தடதடக்கும். உங்கள் ஸ்வெட்டரை உங்கள் மனைவிக்குப் போட்டுவிடுங்கள்.

அதிகாலை ஆள்மறைக்கும் மேகமண்டலத்தில், மயிர்க்கூச்செரியும் குளிரில், தொட்டபெட்டா சிகரம் சென்று ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தபடி சூடான வேர்க்கடலைக் கொரியுங்கள். நடந்தே ஊட்டி ஏரிப்பகுதிக்கு வந்து பெடல் போட்டில்ஐஸ்கிரீம் சாப்பிட்டவாறு ஒரு மணிநேரம் சவாரி செய்யுங்கள்.

அடுத்த பக்கத்தில் வரிசையாக மட்டக்குதிரைகள் நிற்கும். ஒரு குதிரையில் மனைவியை ஏற்றிவிட்டு லேக் ஏரியாவை ஒரு சுற்றுச் சுற்றுங்கள். பகல் விருந்துக்குப்பின் மேட்னி காட்சி. இரவு கதகதக்கும் ஹோட்டல் அறையில், நடுங்கிக்கொண்டு உள்ளே வரும் மனைவியை இறுகக் கட்டி அணைத்து படுத்துக்கொள்ளுங்கள். எழுபத்தைந்து விகித சந்தோஷத்தை அவள் அனுபவித்திருப்பாள். உடல்ரீதியான செக்ஸ் இங்கே இரண்டாம் பட்சம்தான்.

ஆணைப்பொறுத்தவரை செக்ஸ் விஷயத்தில் என்றுமே அவசரக்காரன்தான். அடுப்பை மூட்டாமலேயே, தோசைக்கல்லை அடுப்பின் மீது வைத்து தோசை மாவை ஊற்றிவிடுகிற புத்திசாலி இவன். சில சமயம் தோசைக்கல், 50 தோசைகளை வேக வைக்கும் அளவு சூடாக இருக்கும்போது இவன் அரைக்கரண்டி மாவை மட்டும் ஊற்றுவான்.

பெண்களை நெருங்காமலேயே இருந்துவிடுவது உத்தமம். அவர்களை ஆட்டத்திற்குத் தயாராக்கிவிட்டு, நீ சீக்கிரமே ஆட்டத்தை முடித்து ஓடுவது பின்னால் விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

இயற்கையிலேயே அதிக செக்ஸ் பசி உள்ள ஆணுக்கு செக்ஸ் உணர்வு குறைவாக உள்ள மனைவி அமைவதும் உண்டு. 

அதிக செக்ஸ் பசி உள்ள மனைவிக்கு கையாலாகாத கணவன் அமைவதும் உண்டு. அப்போதுதான் வேலி தாண்டிய வெள்ளாடுகதை நிகழும்.

50
ஆண்டுகள் மணமொத்த தம்பதியாய் வாழ்ந்த ஒரு ஜோடி, ஊசி முனைகள் ஒன்றையொன்று தொட்டுக்கொள்ளும் நிலையில், உச்சம் தொட்ட இன்பத்தை- ஐந்து அல்லது ஆறு முறை அனுபவித்திருந்தால் பெரிய விஷயம் என்கிறது ஒரு நூல்.

ஒன்று இவன் முந்தி உச்சம் தொட்டு அடங்கிவிடுவான்
அல்லது அவள் உச்சம் தொடும்போது இவன் ஓய்ந்திருப்பான்!

உடல் பலத்தைப் பயன்படுத்தி செக்ஸில் வெற்றி பெறுவதைவிட, சாதுர்யத்தைக் கடைப்பிடித்து, பெண்ணை உச்சம் கொண்டு சென்று மகிழ்விப்பது எளிது.

பூரண செக்ஸ் இன்பம் என்பது இருவரும் ஒரே சமயத்தில் உச்சநிலையை அடைவதே. அது தெய்வ நிலை.

உலகை மறந்த அற்புதக் கணம்!

அந்தக் கணங்களில்தான் ஈருடல் ஓருயிர் நிலையை இருவரும் எய்துகிறார்கள்.
இந்திய மண்ணில், பொதுவாக எந்தக் கணவனும் தன் மனைவியிடம் இன்று நீ சந்தோஷமாய் இருந்தாயா என்று கேட்பதில்லை. பெண்ணின் திருப்தி- அவள் உடல் அசைவுகளில், மயக்க நிலை முனகல்களில் வெளிப்படும். அதுபற்றி நாம் கவலைப்படுவதே இல்லை.

டாய்லெட்டில் சிறுநீர் கழிக்கும் நேரமே இவன் செக்ஸுக்கு ஒதுக்குவது கொடுமை.
இந்த லட்சணத்தில் விலைமாதரிடம் விளையாடி எய்ட்ஸ் வாங்கிவந்து வீட்டிலிருக்கும் மனைவிக்கும் அவள் வயிற்றில் சுமக்கும் அப்பாவிக் குழந்தைக்கும் அந்த எய்ட்ஸை தானம் செய்யும் புண்ணியவான்களும் உண்டு.

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாட்களில் செக்ஸ் கூடாது என்றுதான் பெண்கள் திங்கள், வெள்ளி தினங்களில் எண்ணெய்க் குளியல் போடவேண்டும். ஆண் சனிக்கிழமை குளிக்கவேண்டும் என்று வகுத்து வைத்தனர்.

தலையில் குளிர்ந்த எண்ணெய் வைத்து, அரக்கித் தேய்த்து உடம்பெல்லாம் பூசிவிடும்போது உச்சந்தலை உஷ்ணம் உடம்பின் கீழ்ப்பகுதிக்கு வந்துவிடுகிறது. அன்று மனைவியைக் கூடும்போது அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு சீக்கிரமே ஆட்டத்தை முடித்துவிடுவான். உடல் சக்தியும் அதிகம் வீணாவதால் மறுநாள் உடல் அசதி கூடுதலாக இருக்கும்.

குடித்துவிட்டு உறவுவைத்தால், கொடிகட்டிப் பறக்கலாம் என்று பலர் நினைக்கின்றனர். மது, ‘உடல் இன்ப வேட்கையை அதிகப்படுத்திவிட்டு, செயல்பாட்டைக் குறைத்துவிடும்என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்று படித்தவர்கள்கூட பெண்களை போகப் பொருளாகவே பார்க்கின்றனர். காலையில் எழுந்து குளித்து, அடுப்பு பற்றவைத்து சிற்றுண்டி தயாரித்து, பிள்ளைகளைக் குளிப்பாட்டி, ஊட்டிவிட்டு யூனிஃபார்ம் போட்டு பள்ளிக்கு அனுப்பிய கையோடு, கணவனை கவனித்து பின் அரக்கப் பரக்க அலுவலகம் போய் ஆணாதிக்கம் மிக்க மேனேஜரிடம் அநியாயமாகத் திட்டுவாங்கி, மாலைவரை ஃபைல்களில் மூழ்கி, ஆறு மணிக்கு பஸ் பிடித்து அடித்துப் பிடித்து வீடு வந்து, கணவனுக்கு காபி போட்டுக்கொடுத்து, பிள்ளைகளுக்கு பிஸ்கட் கொடுத்து, இரவு உணவு தயாரித்து எல்லோருக்கும் பரிமாறிவிட்டு உணர்ச்சியற்ற பிணமாய்ப் படுக்கையில் சாய்பவள்-

உனக்கு, ஊர்வசி ரம்பை போல் காட்சியளிக்க வேண்டும்- தாசி போல் இன்பம் தர வேண்டும் என்று நினைப்பது என்ன நியாயம்?

ஓய்ந்து களைத்து உறக்கத்துக்கு ஏங்கும் உடம்பு ஒருபோதும் செக்ஸுக்குத் தயாராய் இராது.
இன்றைய வாழ்க்கை அமைப்பில் கணவன் மனைவி சேர்ந்தாற்போல் இரண்டு மணிநேரம் வீட்டில் இருக்க வாய்ப்பில்லை. இருவரும் வேலைப் பார்க்கிறார்கள். பெரும்பகுதி அலுவலகத்திலும் பஸ் பயணத்திலுமே கழிந்துவிடுகின்றன. மிச்சமிருக்கிற சொற்ப நேரத்தில் பிள்ளைகள் படிப்பு, வீட்டு வாடகை, ரேஷன், பெட்ரோல் என்று பற்றாக்குறை பட்ஜெட் பற்றிப் பேசி டென்ஷனாகவே இருக்கிறோம்.

கணவன் மனைவி வாரத்தில் கடைசி ஒருநாளாவது வீட்டைவிட்டு எங்காவது வெளியில் சென்றுவர வேண்டும். வசதி இல்லாதவர்களுக்கு சென்னையில் கடற்கரை இருக்கிறது. பாம்புப் பண்ணை, மிருகக் காட்சி சாலை இருக்கின்றன. வெளியூர் தம்பதிக்கு இருக்கவே இருக்கிறது சினிமா. அதைவிட்டால் அருகில் ஏதாவது ஒரு கோயில். இப்படி அன்றாடப் பிரச்சினைகளை மறக்க ஒரு நாளையாவது ஒதுக்குங்கள்.

கணவன் மனைவியரிடையே விரிசல் ஏற்பட புறக்காரணங்களைவிட, உடல் ரீதியான உறவில் ஏற்படும் குறைபாடு மற்றும் விரக்தியே அடிப்படைக் காரணம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு அனுசரித்து வாழவேண்டும்

போகப்பொருளாக- துய்த்தபின் தூக்கி எறியும் வஸ்துவாக, பெண்களை நினைப்பதை நாம் மறந்து, அவளும் நம்மைப்போல் ஒரு ஜீவன். நமக்கு இருக்கும் விருப்பு, பொறுப்பு, ஆசாபாசம் அவளுக்கும் உண்டு. அவளில்லாமல் குடும்பத்தை ஒரு ஆண் உருவாக்கிவிட முடியாது. பரம்பரைத் தழைக்க முடியாது. நம்மைப் பெற்று வளர்ப்பவள் பெண். நம் வெற்றிக்குத் துணை நிற்பவள் பெண். நம் வயோதிகக் காலத்தில் பாசத்தைப் பொழிபவள் பெண்....என்பதை உணர்ந்து நடந்தால் பூமியில் சொர்க்கத்தை அனுபவிக்கலாம்.

நன்றி ; ராணி வார இதழ்.