வியாழன், 4 அக்டோபர், 2012

ஒரே இரவில் உடல் உறவு வைத்தால் ஆபத்தா ?


செக்ஸ் ஒரு அனுபவ ஆட்டம்.. அனுபவம் கூடக் கூட ஆட்டத்திலும் நேர்த்தி, முழுமை, நிபுணத்துவம் வந்து விடும். இதில் கற்றுத் தேரும் வரை நாம் செக்ஸுக்கு அடிமை.. கற்றுத் தெளிந்து விட்டால் செக்ஸ் நமக்கு அடிமையாகி விடும்.
ஆரம்பத்தில் பெரும்பாலானோர் வாரத்திற்கு பலமுறை செக்ஸ் வைத்துக் கொள்வது சகஜமானது. சிலர் தினசரி கூட ராத்திரி ரவுசில் இறங்குவார்கள். ஆனால் போகப் போக அது குறைந்து கொண்டே வரும்.. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக. வாரத்திற்கு சில முறை, பிறகு மாதத்திற்கு சில முறை என்று குறுகிக் கொண்டே போய் விடும்.
புதிதாக திருமணமானவர்களுக்கு எப்போதுமே செக்ஸ் நினைவுதான் கொஞ்ச நாளைக்கு அதிகமாக இருக்கும். இதற்காகத்தான் அவர்களை அடிக்கடி தொந்தரவு செய்யக் கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். ஆனால் அதுவே நாளாக நாளாக ஆர்வம் குறையும் அல்லது அதுதான் பக்கத்திலேயே இருக்கே, பிறகெதற்கு பதறியடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விடும்.
இருப்பினும் திருமணமாகி நீண்ட காலத்திற்குப் பிறகும் கூட, ஒரே நாளில் 2 அல்லது 3 முறை அல்லது அதற்கு மேலும் உறவு கொள்வது எளிதானதுதான் என்று கூறுகிறார்கள் செக்ஸாலஜிஸ்டுகள்.
செக்ஸ் என்றால் என்ன ... ஆண் பெண் இருபாலாருக்கிடையே ஏற்படும் ஈர்ப்புதான், ஹார்மோன் ரசவாதம்தான். இதில் உடம்பு மட்டுமல்ல, மனசும் கூட முக்கியக் காரணம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது போல உறவில் ஈடுபாடு கூடும்போது உறவின் எண்ணிக்கையையும் நாம் நிச்சயம் கூட்ட முடியும்.
நடுத்தர வயதைக் கடந்த சிலருக்கு, முன்பு போல நாம் இப்போதும் அதிக அளவில், அதாவது ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை உறவு கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அப்படி்த தோன்றும்போது அதை செயலாற்ற உடனே களத்தில் இறங்கி விட வேண்டும். அதற்கேற்ப மனதையும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்று இரவு நமக்கு அன்லிமிட்டெட் என்று முடிவு செய்து விட்டால் மாலையிலேயே மனதளவில் ரெடியாகி விடுங்கள். சீக்கிரமே சாப்பிட்டு விடுங்கள். படுக்கைக்குப் போகும் போது சாப்பாடு செரித்திருக்க வேண்டும். மனசை பளிச்சென வைத்துக் கொள்ளுங்கள். உடலையும் ஆயத்த நிலைக்குக் கொண்டு வாருங்கள். கூடுமானவரை இரவு 9 மணிக்குள் படுக்கை அறைக்குள் புகுந்து கொள்வது நல்லது.
முதல் உறவில் அதி வேகம் காட்டுவதைத் தவிர்க்கவும். அதற்காக சுவாரஸ்யமான தருணங்களை மிஸ் செய்ய வேண்டியதில்லை. வழக்கம் போல உற்சாகமாக ஈடுபடுங்கள். உறவை முடித்த பின்னர் இருவரும் நன்கு ரிலாக்ஸ் ஆகிக் கொள்ளுங்கள். பிறகு சூடான பால் சாப்பிட்டு விட்டு இருவரும் ஹாயாக சிறிது நேரம் படுத்தபடி பேசிக் கொண்டிருங்கள்.
சாதாரணமான முறையில் இல்லாமல் செக்ஸியாக, உறவை மையமாகக் கொண்டு பேசிக் கொண்டிருங்கள். அப்போதுதான் மூடு மாறாது. இப்படியே ஒரு ஒரு மணி நேரம் ஓடட்டும். அதன் பின்னர் அடுத்த உறவுக்குத் தயாராகலாம்.
2வது முறையை வேறு விதமாக செய்ய ஆரம்பியுங்கள். இதனால் உங்களுக்குள் சோர்வு ஏற்படாது, மாறாக புத்துணர்வும், புது அனுபவமும் கிடைக்கும்.
இந்த 2வது உறவு உங்களுக்குள் பெரும் நம்பிக்கையை மட்டுமல்லாமல், பெருத்த சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் கொண்டு வந்து சேர்க்கும். மீண்டும் தேவைப்பட்டால், மறுபடியும் ஒரு சின்ன பிரேக், பிறகு சின்னதாக ஒரு முன் விளையாட்டு என்று ஆரம்பித்து தொடருங்கள்...
மிகவும் இளம் வயதினராக இருந்தால் 4, 5 என்று கூட தாண்டிப் போக முடியும். அதுவே நடுத்தர வயதினராக இருந்தால் 2 அல்லது 3 வரை போகலாம். அதற்கு மேலும் முடிந்தால் போகலாம், தவறில்லை. அதேசமயம், உடல் சோர்வையும், வலியையும் மனதில் கொண்டு சற்றே சமர்த்தாக செயல்படுவது நல்லது.
பெண்களைப் பொறுத்தவரை 2 உறவுக்கு மேல் போகும்போது பிறப்புறுப்பில் லூப்ரிகன்ட் குறைய வாய்ப்புள்ளது. எனவே அதற்கேற்றார் போல திட்டமிட்டுக் கொள்வது நல்லது. உங்களுக்கு முடியும் என்பதற்காக அவரைப் போட்டு பாடாய்ப்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். போதிய அளவில் உங்களது துணையின் பிறப்புறுப்பில் லூப்ரிகன்ட் தன்மை இருக்கிறதா என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படவும்.

திங்கள், 10 செப்டம்பர், 2012

பெண்களுக்கு நிறைய காரணம் இருக்காம் செக்ஸ் மேல் ஈர்ப்பு வர


பாலுணர்வும், பாலியல் நினைவுகளும் இல்லாத உயிர்களே இல்லை. ஏதாவது ஒரு காரணத்திற்காக சிலருக்கு உடலுறவு பிடித்திருக்கலாம். இனப்பெருக்கத்திற்காகவும், மன அமைதிக்காவும் மட்டுமின்றி உறவானது பல நிலைகளில் நன்மை தருகிறது என்று ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பெண்களுக்கு ஏன் அதன் மேல் அத்தனை ஆர்வம் என்று கண்டறிய நடைபெற்ற ஆய்வில் தாம்பத்ய உறவை பெண்களுக்குப் பிடிக்க 237 காரணங்கள் இருக்கிறது என்று தெரியவந்துள்ளது.
டேவிட் பஸ் என்ற உளவியல் நிபுணர் இதற்கான காரணத்தை ஆராய்ந்து தனது Why Women Have Sex என்று நூலில் எழுதியுள்ளார். 1006 பெண்களை ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட நிபுணர் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளார். அதில் ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொருவிதமான பதிலளித்துள்ளனர். செக்ஸ் பற்றி பிடிக்க மொத்தம் 237 காரணங்களை கூறியுள்ளார்.
செக்ஸ் என்பது த்ரில்லான அனுபவம் என்று கூறியுள்ளனர் சிலர். அதுபோன்ற அனுபவத்திற்காகவே அடிக்கடி உறவில் ஈடுபடுகின்றனராம். தம்பதியரிடையேயான நெருக்கத்தை அதிகரிக்கிறது. இது சந்ததி உருவாக்கத்திற்கு என்பதையும் தாண்டி ஆரோக்கியத்தை அளிக்கிறது என்பதனால் செக்ஸ் விருப்பத்திற்குரியதாக இருக்கிறது.
ஆணின் வாசனையால் கவரப்பட்டு உறவில் ஈடுபடுவதாக சிலர் கூறியுள்ளனர். மேலும் உறவில் ஈடுபடுவதானல் தனக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கிறது என்று கூறியுள்ளனர் சிலர்.
காதலும், செக்ஸ்சும் நீண்டகால இன்சூரன்ஸ் பாலிசி போன்றது பாதுகாப்பானது என்று கூறியுள்ளனர். செக்ஸ் மூலம் உடல் ஆரோக்கியமடைகிறது. அழகான கூந்தல் கிடைக்கிறது, சருமம் மினுமினுக்கிறது என்று அதனால் அதில் ஆர்வம் காட்டுவதாக சிலர் கூறியுள்ளனர்.
செக்ஸ் மருத்துவ குணம் கொண்டுள்ளது. இது மைக்ரேன் தலைவலியை குணமாக்குவதோடு ரிலாக்ஸ் ஆக்குகிறது. இது சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது. மாதாந்திர வலிகளை போக்குவதில் செக்ஸ் சிறந்த மருந்துப்பொருளாக செயல்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
தூக்கக்குறைபாடு உள்ளவர்களுக்கு செக்ஸ் சிறந்த நிவாரணியாக இருந்ததாக கூறியுள்ளனர். உறவுக்குப் பின்னர் மூளை சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருப்பதால் அதனை விரும்புவதாக கூறியுள்ளனர்.
உளவியல் நிபுணரின் ஆய்வின் படி ரஷ்யாவில் 73 சதவிகித பெண்கள் அதீத காதலை விரும்புகின்றனர். ஜப்பானிய பெண்கள் 63 சதவிகிதம் பேரும், இங்கிலாந்தில் 75 சதவிகிதம் பேரும் காதலில் ஈடுபட விரும்புவதாக கூறியுள்ளனர். ஆனால் ஆண்கள் அந்த அளவிற்கு உற்சாகம் காட்டுவதில்லை. ஜப்பானில் 41 சதவிகிதம் ஆண்களும், ரஷ்யாவில் 61 சதவிகித ஆண்களும்தான் செக்ஸ் மீது அதீத ஆர்வம் கொண்டுள்ளனர்.
திருமணமான புதிதில் தொடங்கி நடுத்தர வயதை தாண்டியும் செக்ஸ் விருப்பத்திற்குரியதாக இருக்க இதுபோன்ற 237 காரணங்களை பெண்கள் கூறியுள்ளதாக தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் உளவியல் நிபுணர்கள்.

வியாழன், 6 செப்டம்பர், 2012

எப்படி ஆரம்பிப்பது முதல் உறவை ?


படுக்கை ரெடி, துணையும் ரெடி, மூடும் ஓ.கே... எல்லாம் ஆயத்தமான நிலையில் இருந்தாலும், சிலருக்கு எப்படித் தொடங்குவது, எங்கிருந்து தொடங்குவது, எப்படித் தொடருவது என்பதில் குழப்பம் வரும். அப்படிப்பட்ட குழப்பத்தை ரொம்ப ஈசியாக சமாளிக்கலாம்.. எப்படின்னு கேட்கறீங்களா.. தொடர்ந்து படியுங்கள்.
அருமையான செக்ஸ் இன்று நமக்குத் தேவை என்று நீங்கள் முடிவு செய்து விட்டால் முதலில் அமைதியாக வேலைகளைத் தொடங்க வேண்டும். ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கலையா என்ற பழமொழி செக்ஸுக்கும் பொருந்தும். எவன் ஒருவன் நிதானமாக செயல்படுகிறானோ அவனுக்கே அட்டகாசமான செக்ஸ் அமையும் என்கிறார்கள் அனுபவஸ்தர்கள்.
தொடுதல்தான் செக்ஸ் உணர்வுகளை தீ போல கொளுந்து விட்டு எரியச் செய்ய நல்லதொரு ஊடகமாகும். எனவே இருவரது உடல்களிலும் உங்களது தொடுதல்கள் எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கு உணர்வுகளும் பற்றிக் கொண்டு எரியும், தொட்டுத் தொடருவதில் ஒரு பெரும் சுவாரஸ்யம் உருவாகும்.
தொடுதலை இரண்டு வழிகளில் செய்யலாம். உதடுகள் மூலமாகவும் செய்யலாம், விரல்கள் மூலமாகவும் செய்யலாம். இதில் உங்களது துணைக்கு எது ஓ.கே. என்பதை தெரிந்து கொண்டு, வெட்கப்படாமல் வாய் விட்டுக் கேளுங்கள், நீங்களும் உங்களுக்கு எது சவுகரியம் என்று சொல்லுங்கள், தப்பில்லை.
சிலருக்கு உதடுகள் மூலம் உடல் எங்கும் கோலம் போடுவது பிடிக்கும். துணைக்கும் கூட அது பிடித்திருந்தால் உதடுகளிலேயே ஆரம்பியுங்கள். சிலருக்கு தலையிலிருந்து கீழே போவது பிடிக்கும், சிலருக்கு காலிலிருந்து தொடங்குவது பிடித்திருக்கும்.
நாம் காலிலிருந்து தொடங்குவோம். முதலில் துணையின் கால் விரல்களை மென்மையாகப் பிடித்து சொடுக்கு எடுங்கள். சொடுக்கெடுக்கும்போது வலிக்கக் கூடாது, மென்மையாக, சுகமாக இருக்க வேண்டும். சொடுக்கு எடுக்கும்போதே பலருக்கு சொக்க ஆரம்பித்து விடும். அப்படி ஒரு சுகத்தை உங்களது கை விரல்கள் துணையின் கால் விரல்களுக்குப் பாய்ச்ச வேண்டும்.
பிறகு உள்ளங்காலை மெதுவாக வருடிக் கொடுங்கள். கூடவே செல்ல மொழிகளையும் பேசுங்கள். பாதம் ரொம்ப வலிக்குதாடா செல்லம், இப்ப நல்லாருக்கா, சுகமா இருக்கா என்று கொஞ்சியபடியே தொடருங்கள்.
பாதம் முடிந்து விட்டதா.. அப்படியே மெதுவாக மேலே வாருங்கள். இப்போது காலுக்கு வந்து விட்டோம். கால் பகுதியைப் போல ஒரு சுவாரஸ்யமான ஏரியா எதுவுமே கிடையாது. பார்க்க சாதாரணமாக இருக்கும். ஆனால் ஏகப்பட்ட முருங்கைக்காய் சமாச்சாரம் காலில்தான் உள்ளது.
குறிப்பாக காலின் பின்புறம் ஏகப்பட்ட உணர்ச்சி நரம்புகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அதாவது கெண்டைக்காலில். இந்தப் பகுதியில் உங்களது உதடுகளால் மெதுவாக முத்தமிட்டு அப்படியே தொடருங்கள். உணர்ச்சிகளின் உந்துதலால் உங்களது துணை நெளிவதைப் பார்க்கலாம்.
காலில் தொடங்கி அப்படியே தொடைப் பகுதிக்கு வாருங்கள். இந்த இடமும் உணர்ச்சிகரமான ஒரு பகுதிதான். தொடையில் உங்களது உதடுகள் விளையாடும் விதத்தைப் பொறுத்து துணையின் கொதிப்பு கூடும். தொடைகளில் பற்றிக் கொண்ட தீ அணைவதற்கு முன்பு அப்படியே இரு கால்களின் மையப்பகுதிக்கு அதாவது முக்கியப் பகுதிக்குச் செல்லுங்கள்.
இந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. அதை நீங்களாகவே செய்ய முடியும். அந்த இடத்தில் நீங்கள் என்ன செய்தாலும் அது லாபமாகவே முடியும். விரல்களையும் கூட முடிந்தவரை பயன்படுத்தலாம், பாதுகாப்பாக இருக்கட்டும் எது செய்தாலும்.
பின்னர் வயிற்றுக்கு வாருங்கள். தொப்புளில் முத்தமிடுங்கள். வயிற்றுப் பகுதி முழுவதும் உங்கள் உதடுகள் மற்றும் நாவால் வருடுங்கள், முத்தமிடுங்கள், விரல்களால் கோலம் போடுங்கள்.
பிறகு இடுப்புப் பகுதி. இங்கு முத்தமிடும்போது உங்களது துணை மின்னல் தாக்கியதைப் போல நெளிவதைப் பார்க்கலாம். முத்தமிடுவதன் மூலம் இடுப்பின் வழியாக உணர்ச்சிகளுக்கு மொத்தமாக நீங்கள் அறைகூவல் விடுக்கலாம்.
பிறகு மார்பு. பெண்களின் மார்புப் பகுதிகளும் உணர்ச்சிகளின் கொந்தளிப்புக் கூடம்தான். இந்த உறுப்புகளில் உங்களது விளையாட்டு எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து நீங்கள் காமத்தில் வெல்லலாம்.
பிறகு முகத்திற்குப் போங்கள். உதடுகளில் உதடுகளைப் பொருத்தி இதழ் அமுதம் பருகுங்கள். கன்னத்தில் முத்தமிடுங்கள். காதுகளில் மென்மையாக முத்தமிடுங்கள், நாவால் வருடுங்கள். விரல்களால் தலைமுடி கோதுங்கள், கண்களில் முத்தமிடுங்கள். தலையில் முத்தமிடுங்கள்.
இப்படி ஒவ்வொன்றாக செய்து வரும்போதே உங்களது துணை முழுமையான உறவுக்குத் தயாராகி விடுவார். எல்லாம் சரியான நிலைக்கு வந்து விட்டது என்பதை உணரும்போது உறவுக்குள் புகுங்கள்...

புதன், 29 ஆகஸ்ட், 2012

பெண்களுக்கு உச்ச கட்டத்தை வர வைக்க என்ன செய்யலாம்?


கலவியில் ஈடுபட்ட பெண் இன்பமும் திருப்தியும் அடையவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளவும் சில வழிகள் உள்ளன.
தன்னுடைய காம இச்சை அடங்கும் முன்பே ஆணுக்கு விந்து வெளிப்பட்டு விட்டால் அவளே கலவித்தொழில் செய்வது போல தன் இடுப்பை மேலும் கீழும் அசைப்பாள். ஏன் இப்படியென்றால் புறத்தொழில்களால் பெண்ணை உச்சநிலை அடையச் செய்து அதன்பின் அவளுடன் சேராமல் எடுத்த எடுப்பிலேயே கலவியில் ஈடுபடுவதால் இப்படி நேரிடுகிறது. ஆண் பெண் இருவருக்கும் ஒரே சமயத்தில் இச்சை அடங்குவதாக இருக்க வேண்டும். ஆண் அவசரப்பட்டால் அதனால் பெண்ணுக்கு கலவியில் திருப்தி ஏற்படாமல் போகும். தனக்கு இச்சை பூர்த்தியானதும் பெண்ணுக்கும் அதே சமயம் பூர்த்தியானதாக ஆண் நினைப்பது தவறாகும். கலவியில் இருவருடைய இன்பத்தையும் திருப்தியையும் கவனிப்பது மிக முக்கியம் என்பதை மறந்து விடக்கூடாது. பெண்ணுடைய திருப்தி அவசியமாகக் கவனிக்கப்பட வேண்டும்.
பெண்ணினுடைய காம இச்சையை உச்ச கட்டத்தை அடையச் செய்வதற்கு பல வழிகள் உள்ளன. 
ஆலிங்கனம் எனப்படும் தழுவுதல், பிடித்து விடுதல் அல்லது கசக்குதல், முத்தமிடுதல், நகக்குறி பதித்தல், பற்குறி பதித்தல், தட்டுதல் அல்லது தடவுதல், மாற்றுப்புணர்ச்சி, வாய் சேர்க்கை போன்ற புறத்தொழில்களை முதலில் செய்து அதன் பின்னர் கலவியில் ஈடுபடுவதன் மூலம் ஒரு பெண்ணை உச்ச கட்டத்தை அடையச் செய்யலாம். ஆண் தன் விரல்களால் பெண்ணின் அல்குலைத் தேய்த்து விடுவதால் அவளின் இச்சை அதிகரிக்கும். அதைச் சுற்றி சுற்றித் தேய்த்து உணர்வூட்ட வேண்டும். பிறகு ஒரு விரலை மட்டும் யோனிக்குள் நுழைத்துப் பார்க்கவேண்டும். உள்ளே தொடுவதற்கு மென்மையாக இருந்தால் அதன் பின் லிங்கத்தை உள்ளே செலுத்தலாம்.
யோனியின் தன்மையை ஆண் சோதித்துத் தெரிந்து கொள்வது இன்பம் பெருகுவதற்கு உதவியாக இருக்கும். பெண்ணின் யோனியின் ஸ்பரிசத் தன்மையை நான்கு விதமாகச் சொல்லலாம்.
1.தாமரை இதழ் போன்று மென்மையானது
2.முண்டும் முடிச்சுமானது
3.மடிப்புகளாக தளர்ச்சியடைந்திருப்பது
4.பசுவின் நாக்கைப் போல சொர சொரப்பானது.

யோனியானது தொடுவதற்கு மென்மையாக இருந்தால் அத்தகைய பெண்கள் விரைவாக காம உணர்ச்சி கிளர்ந்து எழுந்து உச்ச கட்டத்தை அடைந்து விடுவார்கள். கலவிக்கு அவர்களை தயார்படுத்துவது மிகவும் எளிது. எனவே அத்தகைய யோனியை தேய்த்து விட வேண்டிய அவசியமில்லை. மற்ற மூன்று வகையான யோனி உடையவர்களுக்கு லிங்கம் அதிகமாக உள்ளே நுழைந்து உராய்ந்தால்தான் காம இச்சை உச்ச கட்டத்தை அடைந்து திருப்தியடைவார்கள்.
பெண்கள் வெளிப்படுத்தும் செய்கைகளிலிருந்து கலவியின் போது எந்த விதமாக நடந்து கொண்டால் அவளுக்குத் திருப்தியளிக்கும் என்பதை ஆண் தெரிந்து கொள்ள முடியும். ஆண் கலவியில் ஈடுபட்டிருக்கும் போது பெண்ணின் பார்வையானது உடலின் ஏதாவதொரு பாகத்தின் மீது விழலாம். அப்பொழுது அந்தப்பகுதியில் ஸ்பரிசத்தை அவள் விரும்புகிறாள் என்று அர்த்தமாகும். இதையெல்லாம் கவனித்து ஆண் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டு பெண்ணின் இன்பத்தை அதிகரிக்கத் தகுந்தவற்றை செய்து அவளையும் கலவியில் திருப்திப் படுத்த வேண்டும்.
கலவித் தொழில் செய்யும் ஆணுக்கு விந்து வெளிப்படப் போகிறது என்பதை உணர்ந்து கொண்ட பெண் நீட்டிய விரல்களுடன் ஆணினுடைய புட்டத்தில் தட்டலாம். இதைப் பலமாகச் செய்தால் விந்து வெளிப்படுவதைத் தடுக்கலாம். காம உச்ச நிலையை தான் அடையும் வரை பெண் இப்படியே தட்டிக் கொண்டிருந்தால் இருவரும் சமமான இன்பம் துய்க்க வழி ஏற்படும்.
கலவிக்குப் பின் 
கலவித்தொழில் முடிந்ததும் ஆணும் பெண்ணும் அடக்கமாகப் படுக்கையிலிருந்து எழுந்து ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்காமல் குளிக்கச் செல்ல வேண்டும். கலவியின் போது உடல் தளர்ந்து உடையெல்லாம் கசங்கியிருக்கும். சோர்ந்தும், களைத்தும், நலுங்கியும் உள்ள உடலோடு காட்சியளித்தால் இருவருக்குமே ஒருவர் மீது ஒருவருக்குள்ள கவர்ச்சியானது குறைந்து விடும். இதற்காகத்தான் கலவி முடிந்ததும் ஒருவரையொருவர் பார்க்காமல் சென்று குளித்து விட்டு வரவேண்டும் என்பது.
குளித்து முடிந்ததும் புதிய உடை அணிந்து கொண்டு இருவரும் ஒரு இடத்தில் வந்து அமர வேண்டும்.
பெண்ணை ஆண் தன் இடக்கரத்தால் அணைத்துக் கொண்டு இனிய பானம் குடிக்குமாறு கேட்க வேண்டும். ருசியான இனிப்புகளை அவளை அச்சமயம் உண்ணச் செய்து தானும் உண்ண வேண்டும். சூடான பால், மாம்பழம், ஆரஞ்சு முதலான சாறுகளையும் அல்லது தங்களுக்கு விருப்பமான பானங்கள் எதையும் பருகலாம்.
ஏதேனும் அறைக்குள் இருந்தால் வராந்தாவுக்கோ மாடிக்கோ சென்று நிலவொளியின் அழகை அனுபவிக்க வேண்டும். இனிய காதல் பேச்சுகள் பேச வேண்டும். இதனாலும் உணர்வூட்டும் பானங்கள், உணவு வகைகள் உட்கொண்டதாலும் மீண்டும் காம இச்சை கிளர்ந்து எழும்
நன்றி- இளமை

உயிர்


ஆனால், மாஸ்டர்ஸ் காலத்தில் இவ்வளவு மருந்துகள்கிடையாது. அதனால் ஒரு டாக்டருக்குரிய தொழில் தர்மத்தை மீறி, அவரது கௌரவத்துக்கே களங்கம் நேர்கிற ஒருவிஷயத்தை அவர் முயன்று பார்த்தார்.



கம்யூனிசசெல்வாக்கோடு வல்லரசாகி அமெரிக்காவை ரஷ்யா மிரட்டிக் கொண்டிருந்த சமயம் அது!கம்யூனிச தத்துவம் அமெரிக்க ஆட்சியாளர்களுக்குப் பிடிக்கவில்லை. அமெரிக்காவிலும்அந்த சித்தாந்தம் நுழைந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் அமெரிக்காவை ஆட்டிப்படைத்தது. அப்போது அரசுக்கு எதிராகச் செயல்பட்ட பலரையும் கம்யூனிஸ்ட்கள் எனசந்தேகித்து, கேள்வி கேட்காமல்சிறையில் அடைக்கும் பழக்கம் இருந்தது. ஜோ மெக்கார்தி என்ற செனட்டருக்கு இதுதான்வேலை. கின்ஸியின் ஆராய்ச்சி அவரை கொதிக்க வைத்தது. ‘‘கின்ஸியைஆராய்ச்சி செய்ய வைத்தது கம்யூனிஸ்ட்கள்தான். அமெரிக்க சமூகத்தை அழிக்கதிரைமறைவில் கம்யூனிஸ்ட்கள் செய்த சதிதான் இது’’ என்றார் அவர். ரஷ்ய கம்யூனிஸ்ட் தலைவர்கள் யாரையாவது கின்ஸிதற்செயலாக எப்போதாவது ரோட்டில் பார்த்து சும்மா ஹலோ சொன்னார் என செய்திகிடைத்திருந்தால்கூட போதும்... கின்ஸியை சிறையில் தள்ளி கொன்றே போட்டிருப்பார்கள்.ஆனால், கின்ஸியை சிறையில் அடைக்கும் அளவுக்குமெக்கார்திக்கு ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் கின்ஸி தப்பித்தார்.

இருந்தாலும் மதத்தலைவர்கள் அவரை சும்மா விடவில்லை. ஏற்கெனவேஒழுக்கக் கேடு மலிந்திருக்கும் நாட்டில், இந்தப்புத்தகங்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என கொதித்தார்கள். கின்ஸி அவர்களை அலட்சியம் செய்தார். ‘‘என்னுடையஆராய்ச்சியை விமரிசனம் செய்யும் தகுதி உங்களுக்கு இல்லை. விஞ்ஞானிகள் சமுதாயம் அதைமதிப்பீடு செய்யட்டும். அவர்கள் என் ஆராய்ச்சியில் தவறு இருப்பதாக சொன் னால் நான்ஏற்றுக் கொள் கிறேன்’’ என்றார்.
மார்கரெட் மீட்என்ற பெண்மணி அந்த சமயத்தில் அமெரிக்காவே மதித்த மானுடவியல் அறிஞர். அவர்தான்அறிஞர் சமூகத்திலிருந்து முதன்முதலாக கின்ஸிக்கு எதிராகக் குரல் கொடுத் தவர்."கின்ஸியின் புத்தகங் களை தடை செய்ய வேண்டும்.அதற்காக நான் போராடுவேன்" என அவர்குரல்கொடுக்க,
பெண்கள்அமைப்புகள், தங்களுக்கு வலுவான ஆதரவுகிடைத்த தெம்பில் இன்னும் ஆக்ரோஷம் காட்டின.

மார்கரெட்கூடகின்ஸியின் புத்தகங்களில் புள்ளிவிவரக் குறைகளையோ, அறிவியல் ரீதியானதவறுகளையோ சொல்லவில்லை. சமுதாயத்தில் தவறான பழக்கங்களை இது வளர்த்துவிடும்என்றுதான் அவர் கவலைப்பட்டார். ‘‘நிறைய பெண்கள்தப்பு செய்யலாம். நான் இல்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால், அவர்கள் பயந்துகொண்டுதான் தப்பு செய்கிறார்கள்.மற்ற பெண்கள் எல்லாம் கற்புநெறியோடு வாழும்போதுநான் மட்டும் ஏன் இப்படி மாறிவிட்டேன் என்ற குற்றஉணர்ச்சி தப்பு செய்யும் பெண்களை அடிக்கடி முள்ளாகக் குத்துகிறது. இதனால் அவர்கள்காலப்போக்கில் திருந்த வாய்ப்பிருக்கிறது. ஆனால், இந்தப் புத்தகம்அந்த குற்ற உணர்ச்சியைப் போக்கிவிடும்.

கணவனை விட்டுஅடுத்த ஆணுடன் முறைகேடான தொடர்பு வைத்திருக்கும் ஒவ்வொரு பெண்ணும், ‘நான் மட்டுமா தப்பு செய்கிறேன்? அமெரிக்க பெண்களில் நான்கில் ஒருத்தி செய்யும்அதே விஷயம்தானே இது! என நினைக்க ஆரம்பித்துவிட்டால், அவ்வளவுதான்... அமெரிக்காவில் குடும்ப அமைப்பேஉடைந்து சிதறிவிடும். இதைத்தான் கின்ஸி விரும்புகிறாரா?’’ என்று கேள்வி எழுப்பினார் மார்கரெட்.


ஆனால் கின்ஸிதெளிவாக இருந்தார். ‘‘அமெரிக்கர்களைஅசிங்கப்படுத்தவோ, குடும்ப அமைப்பைசிதைக்கவோ நான் ஆசைப்படவில்லை. நானும் அன்பான மனைவி, மூன்றுகுழந்தைகள் என இனிமையான குடும்ப வாழ்க்கை நடத்தும் அமெரிக்கன்தான். ஆனால், குடும்பம் வேறு... ஆராய்ச்சி வேறு. சமூகத்தில்அமைதியாக நிகழ்ந்து வரும் மாற்றங்களையும், அவலங்களையும்கண்டும் காணாமல் விட்டு, ‘எல்லோரும்ஒழுக்கமான பாதையில் போகிறார்கள் என்று குருட்டுத்தனமாக நம்புவது, அறிஞர்களின் வேலை இல்லை.மக்கள்தொகை கணக்கில்லாமல் பெருகுவது, புதிது புதிதாகபால்வினை நோய்கள் வருவது, இளம் வயதிலேயேபெண்கள் கர்ப்பமாவது, பிஞ்சுக் குழந்தைகள் மீதுசெக்ஸ் சித்ரவதை என ஏராளமான விஷயங்கள் தப்புத்தப்பாக நடக்கின்றன. எதிர்காலத்தில்இவை இன்னும் மோசமாகலாம். இதற்கெல்லாம் என்ன காரணம்... யார் குற்றவாளி... இந்தத்தவறுகளை தவிர்க்க என்ன வழி என ஆராய்ச்சி செய்யாமல் விட்டால், இன்னும் சில தலைமுறைகள் தாண்டி உலகமேவெறியர்களின் கூடாரமாகி விடும். மனிதர்களின் செக்ஸ் பழக்கங்கள் பற்றிஆராய்ந்தால்தான் இதன் பின்னணி புரியும். அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து நன்மைசெய்யும் ஆராய்ச்சியைத்தான் நான் செய்தேன்’’ என்றார் அவர்.

செக்ஸாலஜியின்தந்தை என்று இப்போது கின்ஸி புகழப்படுகிறார். பக்தர்கள் புண்ணியத் தலங்களுக்குயாத்திரை போவதுபோல, உலகெங்கும் இருக்கும்செக்ஸாலஜி நிபுணர்கள் வாழ்க்கையில் ஒரு தடவையாவது போக நினைப்பது, அவர் நிறுவிய கின்ஸி ஆராய்ச்சிநிலையத்துக்குதான்! அமெரிக்க சமூகம் பற்றி அவர் சொன்ன எல்லாமே, உலகத்துக்கே பொருந்தும் உண்மை என்பது ஐம்பதுஆண்டுகள் கழித்து இப்போது புரிகிறது.

ஆனால், அவர்மீது செக்ஸ்வெறிபிடித்த மனநோயாளி’, ‘குழந்தைகளைசெக்ஸ் கொடுமைக்கு ஆளாக்கியவர் என ஏகப்பட்டகுற்றங்களை பலர் சுமத்த, இன்றைய தேதிவரைஅதற்கெல்லாம் பதில் சொல்லியபடி இருக்கிறது கின்ஸி நிலையம்.
    
எல்லாஎதிர்ப்புகளையும் சமாளிக்கிற ஒருவர், அவரது குடும்பம்தாக்கப்படும்போது நிலைகுலைந்து போவார். கின்ஸியை அப்படித்தான் அழிக்கப்பார்த்தார்கள்.
‘‘செக்ஸைப் பற்றி இவ்வளவுஅருவருப்பான ஆராய்ச்சியை கின்ஸி செய் யக் காரணம் இருக்கிறது. அடிப்படையில் அவர்செக்ஸ் பற்றிய விபரீதமான கற்பனைகளைக் கொண்ட ஒரு மனநோயாளி. அவருக்கு எந்நேரமும்செக்ஸைப் பற்றிய நினைப்புதான். திருமணமாகி மூன்று குழந்தைகள் இருந்தாலும், அவர் ஹோமோசெக்ஸ் பிரியராக இருந்தார்.அதனால்தான் அமெரிக்கர்கள் எல்லாம் அதே பழக்கம் உள்ளவர்களாக அவருக்குத்தெரிந்தார்கள். அது மட்டுமில்லை... தன் மனைவியையே விநோதமான செக்ஸ் உறவுகளில் ஈடுபடவைத்து, ஆபாசப்படம் எடுக்க முயன்றார் கின்ஸி. இதனால்அவருக்கும் அவருடைய மனைவிக்கும் சரியான உறவு இல்லாமல் போனது. தன் உதவியாளர்கள்சிலரையும் கூப்பிட்டு, ‘உன் மனைவியோடு செக்ஸ்உறவில் ஈடுபடுவதை ஆராய்ச்சிக்காகப் படமெடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார் கின்ஸி. இதனால் பலர்அவரிடமிருந்து விலகிவிட்டார்கள்!’’

இப்படி ஒருவதந்தி திட்டமிட்டுக் கிளப்பப் பட்டது. இது பத்திரிகைகளில்கூட செய்தியாகவெளியானது. கின்ஸியிடம் இதுபற்றி சிலர் கேட்டனர். ‘‘விலங்குகள்எப்படி உறவு வைத்துக் கொள்கின்றன என்பது பற்றிய படங்கள்தான் இப்போது உள்ளன.மனிதர்கள் உறவு கொள்வது பற்றிய டாகுமென்டரி படங்களை எடுப்பது சாத்தியமில்லை.உறவுக்காட்சிகள் பற்றிய சில புகைப்படங்கள்தான் என்னிடம் உள்ளன. அதுகூட வேறுசிலர்எடுத்துக் கொடுத்தது’’ என்று வெளிப்படையாகப்பதில் சொல்லி இந்த வதந்தியை சாகடித்தார் கின்ஸி.

ஆனால், அமெரிக்காவில் சமூக ஒழுக்கத்தைக் காக்கும் ஓர்அமைப்பை நடத்திவரும் ஜூடித் ரீஸ்மேன் என்ற பெண்மணி, கின்ஸி பற்றிஎழுப்பி வரும் கேள்விகளுக்கு இன்றுவரை பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது, கின்ஸி நிலையம். ஆர்.எஸ்.வி.பி. (Restoring Social Virtue and Purity in America) என்ற அமைப்பின்தலைவராக இருக்கிறார் ரீஸ்மேன். ‘‘நடுத்தரவர்க்கத்தின் மனோபாவத்தைக் களங்கப்படுத்த அறிவியலை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொண்டார் கின்ஸி. முறைகேடான செக்ஸ் உறவுகளை அமெரிக்க மக்களுக்கு அறிமுகம் செய்தவர்அவர்தான். அமெரிக்காவில் செக்ஸ் தொடர்பான கலாசார நம்பிக்கை, சட்டங்கள், குற்றங் கள்எல்லாமே மோசமானதற்கு காரணம் அவர்தான். திருமணத்துக்கு முன்பே இளம்பெண்கள்கர்ப்பமாவது, இளம் குழந்தைகள் செக்ஸ்வெறியர்களால் சிதைக்கப் படுவது என எல்லா செயல்களுக்கும் காரணமான நரகத்தின் கதவுகளைஅமெரிக்காவில் திறந்துவிட்டவர் கின்ஸி’’ என கடுமையாகக்குற்றம் சாட்டினார் அவர். மற்றவர்கள் மாதிரி வெறுமனே அவர் பேச்சோடு நிற்கவில்லை.கின்ஸியின் ஆராய்ச்சி குறித்து இரண்டு புத்தகங்கள் எழுதினார். கின்ஸி செய்தஆராய்ச்சியைக் குற்றவியல் நோக்கோடு பார்த்தன அந்தப் புத்தகங்கள். ஆனால், அவை வெளிவந்தபோது கின்ஸி உயிரோடு இல்லை. அதனால்கின்ஸிக்குப் பிறகு அவரது நிலையத் தின் இயக்குநராகப் பணிபுரிந்த பால் கெப்பார்ட், அவற்றுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலைக்குஆளானார். ஆண்கள் தொடர்பான தன்னுடைய செக்ஸ் ஆராய்ச்சி முடிவுகளில், ஆண் சிறுவர்கள் பற்றிய விவரங்களையும்குறிப்பிட்டு இருந்தார் கின்ஸி.

இதைத்தான்ரீஸ்மேன் வகையாகப் பிடித்துக் கொண்டார். ‘‘இந்தப்பட்டியலில் 317 சிறுவர்களைப் பற்றிய விவரங்கள் இருக்கின் றன. இதில் சில நிகழ்வுகளைநிமிடக் கணக்கில் விவரிக்கிறார் கின்ஸி. பக்கத்திலேயே கடிகாரத்தோடுஉட்கார்ந்துகொண்டு கணக் கெடுத்தால் தவிர, இவ்வளவுதுல்லியமாக இதை எழுத முடியாது. அந்த சிறுவர்களின் உணர்வுகளை விவரிப்பதும்பக்கத்தில் இருந்து பார்த்தால்தான் சாத்தியம். கின்ஸி இந்தக் குற்றத்தைச்செய்திருக்கிறார்’’ என்று தன் புத்தகத்தில்கடுமையாகத் தாக்கி எழுதினார் ரீஸ்மேன்.

அதே சமயத்தில்அமெரிக்காவில் இருக்கும் குடும்ப ஆராய்ச்சி கவுன்சில் என்ற அமைப்பு, வீடியோ படம் ஒன்றை எடுத்து, கின்ஸி மீது தாக்குதல் தொடுத்தது. பிரிட்டனில்இருக்கும் யார்க்ஷயர் டெலிவிஷன்

நெட்வொர்க், ‘கின்ஸியின் குழந்தை செக்ஸ் வெறியர்கள் என்ற பெயரில் பரபரப்பான டாகுமென்டரி படம் ஒன்றைஎடுத்து ஒளிபரப்பியது.

இந்த எல்லாகுற்றச்சாட்டுகளுக்கும் தெளிவாகப் பதில் சொன்னது கின்ஸி நிலையம். கின்ஸி பல சிறுவர்களை இன்டர்வியூ செய்தபோதுகூடஅந்த சிறுவர்களின் பெற் றோர்கள் முன்னிலையில்தான் செய்தார். அது மட்டுமில்லை... பலஆண்கள் தங்களது சிறுவயது அனுபவங்களை அவரிடம் சொன்னார்கள். அதுவும் இதில் தொகுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில தகவல்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் தாங்கள் நேரடியாகப் பார்த்தசிறுவர்களைப் பற்றிச் சொன்னவை.

இதுதவிர, ஒன்பது குற்றவாளி கள் தாங்கள் சிறுவர்கள் மீதுமேற்கொண்ட செக்ஸ் வன்முறை களைப் பற்றி சொன்னார்கள். இதில் மிஸ்டர் கிரீன் என்றுபுனைப்பெயர் தரப்பட்ட ஒருவன், தன் டைரியைகின்ஸியிடம் கொடுத்தான். அவன் 1917ல் ஆரம்பித்து 48ம் ஆண்டு வரை கிட்டத்தட்டஎண்ணூறு சிறுவர் களிடம் செக்ஸ் உறவு கொண்டான். அந்த எல்லா உறவுகளையும் ஆரம்பத்தில் இருந்து முடிக்கும் வரை நேரத்தைக் குறிப்பிட்டுத் துல்லியமாக வர்ணித்துஇருந்தான். கின்ஸி அவனது செயலை மன்னிக்க முடியாத குற்றம் என கண்டித்து இருக்கிறார்.அந்தக் குற்றங்களுக்காகத் தண்டிக்கப் பட்டுதான் அவன் சிறையில் இருந் தான். அவன்கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவன் பெயரை மட்டும் மறைத்தார் கின்ஸி. தன்னுடையஆராய்ச்சி முடிவுகளில் அவர் சொல்லியிருந்த பெரும்பாலான விஷயங்கள் "மிஸ்டர்கிரீன்" சொன்னதுதான் என்றுவிலாவாரியாக விளக்கியது கின்ஸி நிலையம்.

அடுத்ததாகஇன்னொரு விஷயம் கிளம்பியது. இரண்டாம் உலகப் போரின்போது போலந்து நாட்டை ஹிட்லரின்ஜெர்மன் படை ஆக்கிர மித்து இருந்தது. அந்த சமயத்தில் போலந்து மக்கள் கடும்சித்ரவதைக்கு ஆளானார்கள். இந்த சித்ரவதை படையில் இருந்த ஜெர்மன் தளபதி ஒருவர், கிட்டத்தட்ட 800 போலந்து சிறுவர்களை பாலியல்பலாத்காரம் செய்தார். கின்ஸியின் ஆராய்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்ட அவர், தனது அனுபவங்களை எழுதி அனுப்பி வைத்தார். அதைப்படித்த கின்ஸி அவருக்கு, ‘உங்கள் அனுபவக்குறிப்புகள் என் ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாக இருந்தன. அவற்றைப் படித்து மகிழ்ச்சிஅடைந்தேன்என பதில் எழுதியதாகஅடுத்தக் குற்றச்சாட்டு. சிறுவர்கள்செக்ஸ் சித்ரவதைக்கு ஆளானதைப் படித்து மகிழ்ச்சி அடையும் ஒரே ஆள் இந்த உலகத்தில்கின்ஸியாகத்தான் இருக்க முடியும் என்றனர் எதிர்ப்பாளர்கள்.

கின்ஸி நிலையம், அந்தத் தளபதிக்கு கின்ஸி எழுதிய கடிதத்தின்பிரதியை வெளியிட்டது. உங்கள் கடிதம் கிடைக்கப்பெற்றது என வெறும் ஒப்புகை வாசகம் மட்டுமே அதில்எழுதியிருந்தார் கின்ஸி. அதோடு இந்தக் குற்றச்சாட்டு பிசுபிசுத்தது.

கடைசியாக இன்னொருவிஷயமும் சொல்லப்பட்டது. கின்ஸிஇன்டர்வியூ செய்ததில் 25 சதவிகிதம் குற்றவாளிகள், ஐந்து சதவிகிதம்செக்ஸ் தொழிலாளிகள். இப்படி சமூகத்தில் ஒழுக்கக்கேடானவர்களை விசாரித்து, அவர்கள் சொல்வதை வைத்து ஒட்டுமொத்தஅமெரிக்கர்களின் பழக்கம் இதுதான் என்று எப்படி வரையறுக்க முடியும்? அவர் சந்தித்த நபர்களில் கிராமத்து மக்கள், படிக்காதவர்கள் என யாருமே இல்லை. சமூகவிரோதிகள்செய்யும் தவறுகளை அமெரிக்கர்களின் ஒட்டுமொத்த பழக்கமாக அவர் காட்டிவிட்டார் என்றார்கள் அவரை எதிர்ப்பவர்கள்.

இதற்காககின்ஸியின் ஆராய்ச்சிப் படிவங்களை சுத்தம் செய்யும் வேலையில் இறங்கினார், கின்ஸி நிலைய இயக்குநரான பால் கெப்பார்ட்.1979ம் ஆண்டு இப்படி திருத்தப்பட்ட கின்ஸியின் ஆராய்ச்சி அறிக்கை வெளியானது.சிறைக்கைதிகள் கொடுத்த வாக்குமூலங்களை அகற்றிவிட்டு, மற்றவர்களின்தகவல்களை மட்டும் வைத்துப் புள்ளிவிவரங்களைத் தொகுத்தபோது ஆச்சர்யம்தான். கின்ஸிஏற்கெனவே சொல்லியிருந்த புள்ளிவிவரங்களில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாகவேஇப்போது வித்தியாசம் வந்தது. அதாவது, சிறைக்கைதிகளாகஇருக்கட்டும் அல்லது அமெரிக்க மக்களாக இருக்கட்டும்... செக்ஸ் மனோபாவம் என்பதுஒரேமாதிரியாகத்தான் இருக்கிறது என்பதை பால் கெப்பர்ட் உறுதிப்படுத்தினார்.

கின்ஸியின்வாழ்க்கை, நாவலாக வந்தது. கடந்த 2004ம் ஆண்டு கின்ஸி என்ற பெயரிலேயேஹாலிவுட் படமாகவும் வெளியானது. அப்போது இதே பழைய சர்ச்சைகள் மறுபடியும் விஸ்வரூபம்எடுத்தன. தங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுவதோ, அட்வைஸ் செய்வதோயாருக்குமே பிடிக்காது. அந்த வகையில் அமெரிக்கர்களுக்கு கின்ஸியைப் பிடிக்காமல்போனதில் ஆச்சர்யமில்லை.

ஆனால், இன்றைக்கு... அறியாமை என்ற எதிரியை வீழ்த்த அறிவு ஆயுதத்தோடு போராடியபோராளியாக அவர் உலகெங்கும் செக்ஸாலஜி நிபுணர்களால் கருதப்படுகிறார்.

திங்கள், 23 ஜூலை, 2012

ஒரே ஒரு முறை உடல் உறவுவில் கர்ப்பம் சாத்தியமா?

ஒரே ஒரு முறைதான் உறவு கொண்டேன். அதற்குள் கர்ப்பமடைந்து விட்டேன். எப்படி இது சாத்தியம்?. இந்த சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. ஒரே ஒரு உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா?. முடியும் என்கிறார்கள் டாக்டர்கள்.

பல பெண்களுக்கு முதல் உறவிலேயே கருத்தரித்து விடுவது என்பது சகஜமானதுதான் என்பது டாக்டர்களின் கருத்து. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒரு பெண் வயதுக்கு வருகிறார் என்றால், அவர் கரு முட்டைகளை உற்பத்தி செய்யும் தகுதியை அடைந்து விட்டார் என்று அர்த்தம். ஒரு பெண் முதல் முறையாக கரு முட்டையை உற்பத்தி செய்யும்போது, 2 வாரம் கழித்து அவருக்கு முதலாவது மாத விடாய் வருகிறது.

இத்தகைய தகுதியை அடையும் பெண் கர்ப்பமடையும் தகுதியைப் பெற்றவராகிறார். கர்ப்பமடையும் ஒரு பெண்ணுக்கு எத்தனை முறை உடல் உறவு கொள்கிறார் என்பது அவசியமில்லை. மாறாக முதல் உறவிலேயே கூட அவரால் கர்ப்பமடைய முடியும். 

சிலருக்கு முதல் முறையிலேயே கருத் தரிக்கும். சிலருக்கு மூன்றாவது முறையில் கர்ப்பம் தரிக்கலாம். சிலருக்கோ 57வது முறைதான் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள் டாக்டர்கள். எனவே உடலுறவின் எண்ணிக்கைக்கும், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புக்கும் சம்பந்தம் இல்லை. முதல் உறவிலும் கருத்தரிக்கலாம், பல உறவுகளுக்குப் பின்னரும் கூட கருத் தரிக்கலாம் என்பதே நிதர்சனம்.

பொதுவாக ஒரு மாதத்தில், தொடர்ச்சியான முறையில் உறவு கொள்ளும் பெண்களில் 25 சதவீதம் பேர் கர்ப்பமடைகிறார்கள். 85 சதவீத பெண்கள், உறவு கொள்ளத் தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் குழந்தைப் பேறை அடைகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.

சிலருக்கு பாதுகாப்பற்ற முறையிலான, சுதந்திரமான உறவுகளை மேற்கொண்டும் கூட கர்ப்பம் தரிக்காமல் போகலாம். அதற்கு பல காரணங்கள் உள்ளன. சிலருக்கோ முழுமையான பாதுகாப்புடன் கூடிய உறவுகளிலும் கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு உண்டு. இவர்கள் கர்ப்பம் ஆக வேண்டாம் என்று தீர்மானித்தால் மிகவும் கவனத்துடன் கூடிய உறவுகளில் ஈடுபடுவது அவசியம்.

எனவே கர்ப்பம் தரிப்பது என்பது உடலுறவு எண்ணிக்கையில் இல்லை, பெண்களின் உடல் நலனுடன், கர்ப்பம் தரிக்கும் திறனுடன் சம்பந்தப்பட்டது என்பதே நிஜம்.

வெள்ளி, 20 ஜூலை, 2012

உயிர்--------12


ஒரு நபரிடம்இன்டர்வியூவை முடிக்க ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆனது. இந்த வேகத்தில் போனால், இந்த ஒற்றை ஆராய்ச்சியை முடிக்கவே தன் வாழ்நாள்போதாது என்பதை உணர்ந்த கின்ஸி மூன்று உதவியாளர்களை செலக்ட் செய்து, அவர்களுக்கும் பயிற்சி கொடுத்துத் தன்னைப்போலவே இன்டர்வியூ செய்ய சொன்னார்.

கின்ஸி ஒருநாளில்பதினாறு, பதினேழு மணி நேரம் உழைக்கிற டைப்.பல்கலைக்கழகத்துக்கு தேடிவரும் நபர்கள் குறைவாக இருந்ததால், அவர் அமெரிக்கா முழுக்க சுற்றி பலரைசந்தித்தார். குறிப்பாக சிறைக்கைதிகள். செக்ஸ் தொடர்பான குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்த பலரை அவர் சந்தித்து இன்டர்வியூ செய்தார். அதோடு ஆண்செக்ஸ் தொழிலாளர்களையும் விட்டு வைக்கவில்லை. அவரது டீம் எடுத்த மொத்தஇன்டர்வியூக்களில் இருபத்தைந்து சதவிகிதம் கைதிகளுடையது. ஐந்து சதவிகிதம் செக்ஸ்தொழிலாளிகளுடையது.


இது தவிர பலகல்லூரிகளுக்கு சென்று உரை நிகழ்த்துகிற பழக்கம் அவருக்கு இருந்தது. ஆனால், இந்த உரைகளுக்காக கட்டணம் எதையும் அவர்வாங்கியதில்லை. அதற்கு பதிலாக அதைக் கேட்கும் மாணவர் களையும் மற்றவர்களையும் வந்துதங்கள் அனுபவங்களைச் சொல்லும்படி அழைப்பு விடுத்தார்.

இவ்வளவுஅனுபவங்களையும் அவர் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்ட போதுதான் அமெரிக்கா பற்றிஎரிந்தது. அது தடிமனான புத்தகம்... சாதாரண ஆசாமிகள் படித்தாலே கொட்டாவி வருகிறஅளவுக்குக் கடினமான மருத்துவ பாஷை. பல பக்கங்களை புள்ளிவிவர வரைபடங்கள் அடைத்துக்கொண்டிருந்தன. இவ்வளவும் இருந்தும் அந்தப் புத்தகம் ஐந்து மாதங்களில் இரண்டுலட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. இதன் விற்பனை வேகம் அதிகரித்த அதே அளவுக்குஎதிர்ப்புகளும் அதிகரித்தன.
ஆனால், முரட்டுப் பிடிவாதக்காரரான கின்ஸி அசரவில்லை.ஆண்களை அம்பலப்படுத்திய அவர், அடுத்துக்குறிவைத்தது அமெரிக்க பெண்களை!
முந்தைய விவகாரம்அணுகுண்டு என்றால் இது ஹைட்ரஜன் குண்டு...

கின்ஸி, ஆண்களைப் போலவே அமெரிக்கப் பெண்களைப் பற்றியும்ஆராய்ச்சி செய்கிறார் என்ற தகவல் பரவியதும், நாடு முழுக்கப்பதற்றம் தொற்றிக் கொண்டது. தங்கள் தாயின், மனைவியின், மகள்களின் அந்தரங்க வாழ்க்கையை கின்ஸிகிளறுவதாகப் பலரும் உணர்ந்தனர். பெண்கள் இயக்கங்கள், சமூக அமைப்புகள், மதவாதிகள் என பலரும் அவருக்கு எதிராகக்கொடிபிடித்தனர்.

கின்ஸிவேலைபார்க்கும் இண்டியானா பல்கலைக்கழகத்துக்கு எதிராக அவர்கள் கொதிக்க, பல்கலைக்கழகத்தின் தலைவர் ஹெர்மன் வெல்ஸ்கவலையோடு கின்ஸியைக் கூப்பிட்டுப் பேசினார். இனிமேல் எந்தஆராய்ச்சி செய்தாலும் அதைப் புத்தகமாக வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அந்தக்
கல்விநிறுவனத்துக்கு அரசு வழங்கும் நிதியுதவியை ஒட்டுமொத்தமாக நிறுத்தவும் பலர் முயற்சிசெய்தார்கள்.

இண்டியானாகத்தோலிக்க பெண்கள் அமைப்பு, கின்ஸிக்குஎதிராகக் காட்டமாக அறிக்கை விட்டது. ஆராய்ச்சி என்றபெயரில் தப்புத்தப்பாக எதையோ செய்கிறார் கின்ஸி. இதனால் எங்கள் பெண்கள்கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது. அவர் அந்த ஆராய்ச்சியை நிறுத்திவிட்டு, பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால்தான்எங்கள் பெண்களை அங்கு படிக்க அனுப்புவோம் என்று அறிவித்தது, அந்த அமைப்பு. ஆனால், இதற்கு கின்ஸி அசரவில்லை. கடைசியில் போராட்டம்பிசுபிசுத்துப் போனது.

ஆனால், அவருக்கு அடுத்த சோதனை, அமெரிக்க கஸ்டம்ஸ் ரூபத்தில் வந்தது. செக்ஸ்தொடர்பான ஓவியங்கள், புத்தகங்கள், வரைபடங்கள் என பலவற்றை பல நாடுகளிலிருந்துவரவழைத்துத் தன் ஆராய்ச்சிக் கூடத்தில் வைத்திருந்தார்

கின்ஸி. 1950&ம் ஆண்டு அவரது ஆராய்ச்சிக் கூடத்தை அமெரிக்ககஸ்டம்ஸ் அதிகாரிகள் ரெய்டு செய்தனர். அவர் ஆபாசமான பொருட்களை சேகரித்துவைத்திருப்பதாகச் சொல்லி, எல்லாவற்றையும்அள்ளிக்கொண்டு போய்விட்டனர் (கின்ஸி பொங்கி எழுந்து கஸ்டம்ஸ் மீது வழக்குபோட்டார். ஏழு ஆண்டுகள் சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, ‘அவை ஆராய்ச்சி நோக்கில் கொண்டு வரப்பட்டவை.ஆபாச எண்ணம் இல்லை. அதனால் எல்லாப் பொருட்களையும் திருப்பிக் கொடுங்கள் என கோர்ட் உத்தரவிட்டது. அவை திரும்பிவரும்போது கின்ஸி உயிருடன் இல்லை!).

எரிவதைப் பிடுங்கினால்கொதிப்பது நிற்கும் என கணக்குப் போட்டனர், கின்ஸிக்கு எதிரானவர்கள். இந்த ஆராய்ச்சிக்குநிதியுதவி செய்யும் ராக்ஃபெல்லர் அறக்கட்டளைக்கு எதிராகவும் அவர்கள் பிரச்னை செய்ய, அந்த அறக்கட்டளை கின்ஸியின் ஆராய்ச்சிக்குநிதியுதவி தருவதை நிறுத்தியது. ஆனால், அதற்குள் கின்ஸிஆராய்ச்சியை முடித்துவிட்டார்.

சுமார் ஆறாயிரம்பெண்களிடம் இன்டர்வியூ செய்து முடித்த அவரது குழு, புத்தகத்தைத்தயாரிக்கும் வேலையில் இறங்கியது. ஆனால், அதற்குவேட்டுவைக்கும் விதமாக ஒரு காரியம் நடந்தது. கின்ஸி தனதுஆராய்ச்சியை முடித்து விட்டார். அவரது கணிப்பின்படி பல பெண்கள் விதம்விதமான தப்புசெய்கிறார்கள். அமெரிக்க பெண்களின் மோசமான நடத்தை பற்றி ஷாக் தகவல்கள் அடங்கியஅவர் புத்தகம் விரைவில் வரப் போகிறது என்கிறரீதியில்பயங்கரமான யூகங்களை பல பத்திரிகைகள் விதம்விதமாக அள்ளிவிட்டுக் கொண்டிருந்தன.இப்படி ஒவ்வொரு செய்தி வரும்போதும் பெண்கள் அமைப்புகள் கோபத்தில் கொதித்தன.

இதை இப்படியேவிட்டால், தன் புத்தகமே வரவிடாமல் செய்து விடுவார்கள்என்பதை உணர்ந்த கின்ஸி, முன்னணிப் பத்திரிகைகளின்நிருபர்களை ஒருநாள் தன் ஆராய்ச்சிக் கூடத்துக்குக் கூப்பிட்டார். ஆராய்ச்சி முடிவுகளை உங்களிடம் வெளிப்படையாகச்சொல்கிறேன். அதற்கான ஆதாரங்களையும் நீங்கள் பார்க்கலாம். இதை அடிப்படையாக வைத்துநீங்கள் அதிகபட்சம் ஐயாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை எழுதிக் கொள்ளலாம்.ஆனால், புத்தக ரிலீ்ஸுக்கு ஒருநாள் முன்னதாகத்தான்உங்கள் கட்டுரை வெளியாக வேண்டும் என நிபந்தனைகளைவிதித்தார். உஷாராக அதை அப்படியே ஒரு ஒப்பந்தமாக டைப் அடித்து அவர்களிடம்கையெழுத்தும் வாங்கிக் கொண்டார். அதன்பிறகே பத்திரிகைகள் அந்த ஆராய்ச்சி பற்றியயூகங்களை எழுதுவதை நிறுத்தின.

1953&ம் ஆண்டு செப்டம்பர் 14&ம் தேதி. ‘Sexual behaviour in Human Female’’என்ற அந்தப் புத்தகம் வெளிவந்தது. பெண்களும் திருமணத்துக்கு முன்பே செக்ஸ்அனுபவங்களைத் தேடுகிறார்கள். திருமணமான அமெரிக்க பெண்களில் இருபத்தைந்து சதவிகிதம்பேர் தங்கள் கணவனுக்கு உண்மையாக இல்லை. திருமண பந்தத்துக்கு வெளியே அவர்கள் வேறுயாரோ ஓர் ஆணுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்றஅதிரவைக்கும் உண்மையை சொன்னது, அந்தப் புத்தகம்.அதோடு மட்டுமில்லை... அமெரிக்க பெண்களில் 62சதவிகிதம் பேர் திருமணத்துக்கு முன்போ, திருமணமானபின்னரோ சுயஇன்பம் அனுபவித்து இருக்கிறார்கள். கணிசமானவர்கள் இதைத் தொடர்ச்சியானபழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஓரினச்சேர்க்கையில் நாட்டமுள்ள பெண்களும் நிறையபேர் உண்டு என்பதையும்அம்பலப்படுத்தினார் கின்ஸி. குறிப்பாக, அதிகம் படித்தபெண்கள்தான் விதம்விதமான செக்ஸ் அனுபவங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றார்கின்ஸி. சுயஇன்பம் அனுபவிக்க அவர்கள் பயன்படுத்திய முறைகள் குறித்தும் கின்ஸிசதவிகித வாரியாக பட்டியலிட்டு விலாவாரியாக எழுதியிருக்க, அமெரிக்க சமூகம் கோபத்தின் உச்சிக்கே போனது.அமெரிக்கா மட்டுமில்லை... அவரது ஆராய்ச்சி முடிவுகள் பல நாடுகளுக்கும் போக, அமெரிக்க மக்கள் தாங்கள் அவமானப்படுவதாகஉணர்ந்தனர். புகழ்பெற்ற பிரிட்டன் பத்திரிகையான தி பீப்புள்’& கின்ஸியின் புத்தகம் வெளியானதும் அவசரமாக ஒருசர்வே எடுத்தது. பதினெட்டு முதல் ஐம்பது வயது வரையிலான பிரிட்டன் பெண்கள் ஆயிரம்பேரிடம் எடுக்கப்பட்ட சர்வே அது! தனது சர்வே முடிவுகளை வெளியிட்ட அந்தப் பத்திரிகை, ‘அமெரிக்க பெண்களைப் போல பிரிட்டன் பெண்கள்மோசமானவர்கள் இல்லை. நம் பெண்கள் இன்னமும் ஒழுக்கத்தோடுதான் இருக்கிறார்கள்.குடும்ப அமைப்பு, கற்புநெறி போன்றபாரம்பரியமான மதிப்பீடுகள் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். கணவனுக்குவிசுவாசமாக இருக்கிறார்கள். திருமணமாகாத பெண்கள் கன்னித்தன்மையைக் காக்கிறார்கள் என்று எழுதி, எரிகிறஅமெரிக்கக் கொள்ளியில் எண்ணெய் வார்த்தது.

புதன், 11 ஜூலை, 2012

உயிர்--------11


கர்ப்பம்’ - இந்த வார்த்தையை உச்சரிக்கவும், ஒரு கர்ப்பிணியை டி.வி-யில் காட்டவும்அமெரிக்காவில் தடை இருந்தது. லூசில்லே பால் அமெரிக்காவின் புகழ்பெற்ற டி.வி.நடிகை. கடந்த 53-ம் ஆண்டு இவர் தயாரித்து நடித்த ஐ லவ் லூசி என்ற தொடர் பரபரப்பாக போய்க் கொண்டிருந்தபோதுஇவர் கர்ப்பமானார். தொடரை நிறுத்த விரும்பாமல், இவரது கேரக்டரேகர்ப்பமாவது மாதிரி கதையை மாற்றினார் டைரக்டர். ஆனால், ‘கர்ப்பம் என்ற வசனமும், கர்ப்பிணியின் திரைத் தோற்றமும் ஆபாசமானதுஎன்று தடை செய்தார்கள் டி.வி. நிலையத்தினர். பாதிரியார்கள், யூத மதகுருக்கள் பலரை சந்தித்து, ‘கர்ப்பம் என்பது ஆபாசமான விஷயம் இல்லை. இது மதநம்பிக்கைகளுக்கு எதிரானதும் இல்லை. இதை தாராளமாக டி.வி-யில் காட்டலாம் என லூசில்லே பால் விளக்கம் கொடுத்தார். இதைதொடர்ந்து லூசில்லேவுக்கு ஆதரவாக கருத்து சொன்னார்கள் - பாதிரியார்களும் மதகுருமார்களும். இதன்பின் லூசில்லே கர்ப்பிணியாக தோன்றுவதற்கு அனுமதித்த டி.வி.நிலையம், ‘கர்ப்பம் என்ற வசனத்தைமட்டும் சென்ஸார் செய்துவிட்டது. அதற்கு பதிலாக, ‘நான்எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன் என்ற வசனத்தைபயன்படுத்தச் சொன்னது. அதை திக்கித் திக்கி பேசி காமெடி ஆக்கினார் அவர். உலகிலேயேடி.வி-யில் தோன்றிய முதல் கர்ப்பிணி அவர்தான்!

கிட்டத்தட்டபதினான்காயிரம் ஆண்களிடம் இன்டர்வியூ நடத்தி, அவர்களதுபழக்கவழக்கங்களைத் தொகுத்து, ஆண்களின் செக்ஸ்பழக்கம் எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் ஒரு புத்தகத்தை எழுதினார், டாக்டர் ஆல்ஃபிரட் சார்லஸ் கின்ஸி. ‘Sexual behaviour in HumanMale’ என்ற அந்தப் புத்தகம்1948-ல் வெளிவந்தது.

கின்ஸி அதில்சொல்லியிருந்த எல்லாமே வெடிகுண்டு சமாசாரங்கள். புத்தகம் வெளியான அடுத்த நொடி, அமெரிக்காவே பற்றி எரிந்தது.

நான் பேசிய அத்தனைஆண்களில் 95 சதவிகிதம் பேர் வாழ்க்கையில் ஒரு தடவையாவது சுயஇன்பம் அனுபவித்ததாகஒப்புக்கொண்டார்கள். மீதி ஐந்து சதவிகிதம் பேர் அவசரமாக, ‘சேச்சே! எனக்கு அப்படி எந்த பழக்கமும் இல்லை என்று மறுத்தார்கள். அநேகமாக, அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்றுதான் எனக்குத்தோன்றுகிறது’.
அதேபோலவே ஆண்களில்பெரும்பாலானவர்கள் ஓரினச் சேர்க்கை எப்படிப்பட்ட உணர்வுகளைத் தரும் என ஒருதடவையாவது முயற்சித்துப் பார்த்ததாகச் சொன்னார்கள். இதுதவிர, அமெரிக்க ஆண்களில் பத்து சதவிகிதம் பேர்பெரியவர்கள் ஆனதும், ஓரினச்சேர்க்கைப்பிரியர்களாக இருக்கிறார்கள்.

ஆண்களில் எண்பத்தைந்துசதவிகிதம் பேர் கல்யாணத்துக்கு முன்பே செக்ஸ் உறவை அனுபவித்து இருக்கிறார்கள்.தங்கள் மனைவி கற்போடு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் இவர்கள் அப்படி இல்லை.

முப்பது முதல்நாற்பத்தைந்து சதவிகித ஆண்கள் திருமணத்துக்குப் பிறகு மனைவியைத் தவிர வேறுபெண்களோடு உறவு வைத்திருக்கிறார்கள்.
& யாருக்கும் தெரியக்கூடாது என்று மனசுக்குள் பொத்திப் பொத்தி வைத்திருந்த அழுக்கான ரகசியங்கள் வெளியேதெரிந்தால் அளவிட முடியாத கோபமும், அதிர்ச்சியும்பொங்கி வழியும்! அப்படித்தான் ரியாக்ட் செய்தது அமெரிக்க சமுதாயம்.

இப்போதுபோலஅமெரிக்கர்கள் அப்போது எதையும் டேக் இட் ஈஸி என அலட்சியப்படுத்தும் மனோபாவத்தில் இல்லை.இரண்டாம் உலகப் போர் அப்போதுதான் முடிந்திருந்தது. போரில் லட்சக்கணக் கானவர்கள்இறந்து போயிருக்க, குடும்பப் பிணைப்பு, அன்பு, பாசம் என எல்லாஉணர்வுகளும் உச்சத்தில் இருந்த நேரம் அது!
அதோடுகாலம்காலமாக செக்ஸ் விஷயத்தில் மதம் புகுத்திய கட்டுப்பாடுகள் தளராமல் அப்படியேஇருந்துவந்தது. செக்ஸைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதே பாவ காரியமாக கருதப்பட்டநேரம் அது! கணவனுக்கும், மனைவிக்கும் இடையே நிகழும் தாம்பத்ய உறவைத்தவிர, யாரும் எதையும் தப்பாக செய்வதில்லை... சமுதாயம்நேர்மையான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது என பொதுவானநம்பிக்கை இருந்த காலம்!

அந்த சமயத்தில்போய் அவர்களின் அசிங்கமான மறுபக்கத்தை அம்பலப்படுத்தி, ‘உங்கள் புருஷன் கல்யாணத்துக்கு முன்பும் சரி, பின்னாலும் சரி, உங்களிடம்உண்மையாக இல்லை. அது மட்டுமில்லை... அவர் சுய இன்பம் அனுபவித்தார். ஓரினச்சேர்க்கை அனுபவத்துக்கும் அவர் ஆசைப்பட்டார் என்று சொன்னால்எப்படி இருக்கும்?
அமெரிக்காவேஆத்திரத்தில் பொங்கியது. கின்ஸிசெய்திருக்கும் வேலை அமெரிக்காவில் குடும்ப அமைப்பையே சிதைத்துவிடும். அவர்ஒழுக்கக் கேட்டை பரப்புகிறார். காலம்காலமாக இருந்துவரும் ஒழுக்க மதிப்பீடுகளை ஒரேநொடியில் தகர்த்துத் தரை மட்டமாக்கி விட்டார். இளைய சமுதாயத்தைத் தவறான பாதையில்திருப்பி விடுகிறார். கலாசார சீரழிவை தொடங்கி வைக்கிறார் என்றெல்லாம் அவரைத் திட்டினார்கள். அவர் இறந்துஐம்பது வருஷங்கள் ஆகின்றன. ஆனால், இன்னமும்கூடஅவரைத் திட்டுபவர்கள் உண்டு. குழந்தைகளைக்கூட சிதைக்கும் செக்ஸ் வக்கிரம், எய்ட்ஸ் என்ற எமன்... இப்படி அமெரிக்காவைஇப்போது அச்சுறுத்தும் பல விஷயங்களுக்கும் அவரைக் குற்றம்சாட்டும் மனோபாவம்குறிப்பிட்ட சதவிகித மக்களிடம் இருக்கிறது.

கின்ஸி, அடிப்படையில் ஒரு விலங்கியல் ஆராய்ச்சி யாளர்.அவர் செக்ஸைப் பற்றி ஆராய வந்ததே தனிக் கதை. பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே அவரைஈர்த்த விஷயம் அது! பள்ளியில் அவர் சாரணர் படையில் சேர்ந்தார். அதில் சேரும்விடலைப் பள்ளிப் பையன்களுக்கு ஒரு ஒழுக்கக் கையேடு கொடுப்பார்கள். அதில் ஒரு பாராஅவரைக் குழப்பியது.

மீசை அரும்பும்வயதில் பையன்கள் தப்பான வழிகளில் போகக் கூடாது என்பதற்காக கொடுக்கப்படும் கையேடுஅது! அதில், ‘பையன்கள் விடலைப்பருவத்தைத் தொடும் சமயத்தில் கடவுள் அவர்களுக்கு ஓர் அற்புதமான திரவத்தைப்பரிசாகக் கொடுப்பார். அது அவர்கள் உடம்பில் சுரக்க ஆரம்பிக்கும். அவர்கள்வேகமாகவும், உயரமாகவும் வளர்ந்துதிடகாத்திரமான வாலிபன் ஆவதற்கு, இந்தத்திரவம்தான் உதவுகிறது. அதை எந்த வழியிலும் வீணாக்காமல் பத்திரமாக சேமித்துவைத்தால், மட்டுமே அவர்கள் வளரமுடியும். அதை வீணாக்குபவர்களைகடவுள் தண்டித்து விடுவார் என்றிருந்தது.

வளர்ந்துகல்லூரிக்குப் போனபிறகு அதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார் கின்ஸி. ஆனால், விலங்குகளின் செக்ஸ் உறுப்புகள், பழக்கங்கள் பற்றிய புத்தகங்கள்தான் அவருக்குக்கிடைத்தன. மனிதர்கள் பற்றிய புத்தகங்களைத் தேடிய அவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

ப்ளூமிங்டன்நகரில் இருக்கும் இண்டியானா பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பேராசிரியராக வேலைக்குசேர்ந்தபிறகு, அவர் தனது பாடத்துக்குவெளியிலும் ஆர்வம் காட்டத் தொடங்கினார். திருமணம் மற்றும்குடும்ப உறவு என்ற தலைப்பில் செக்ஸ்உணர்வுகள் பற்றி அவர் கொடுக்கும் உரை, இண்டியானாபல்கலைக்கழகத்தில் ரொம்ப பாப்புலர். மாணவர்கள் மட்டுமின்றி, வெளிநபர்களும்கூட வந்து கேட்குமளவு அவரது உரைசுவாரஸ்யமானது. தனது உரையைக் கேட்க வருகிறவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசிஅவர்களது செக்ஸ் அனுபவங்களை விசாரிப் பார் கின்ஸி. அப்போதுதான் அவருக்கு அந்தஉண்மை புரிந்தது. முறைகேடான செக்ஸ் உறவுகள் பற்றி மக்கள் நினைப்பதற்கும், நிஜமாக நடப் பதற்கும் இடையே ஏகப்பட்ட இடைவெளிஇருந்தது.

ராக்ஃபெல்லர் அறக் கட்டளை அப்போது செக்ஸ் தொடர்பான ஆராய்ச்சி களுக்குநிதியுதவி செய்து கொண்டிருந்தது. தனது ஆராய்ச்சி குறித்து அந்த அறக் கட்டளைக்குஎழுதி நிதியுதவி கேட்டார் கின்ஸி. உடனே அது கிடைத்தது. பல்கலைக்கழகத்தின் தலைவர்ஹெர்மன் வெல்ஸ் அனுமதி கொடுக்க, ஆராய்ச்சியைஆரம்பித்து விட்டார் கின்ஸி. 1938&ம் ஆண்டுதொடங்கிய அந்த ஆராய்ச்சி அவர் இறக்கும் வரை தொடர்ந்தது.


கின்ஸியின்ஆராய்ச்சி,மாஸ்டர்ஸ் செய்ததைப் போலபரிசோதனைக்கூட செக்ஸ் இல்லை. அவரது காலத்தில் அதைச் செய்திருக்கவும் முடியாது.அவர் மனிதர்களின் செக்ஸ் மனோபாவத்தை அம்பலப்படுத்த விரும்பினார். அதனால் முழுக்கஇன்டர்வியூக்கள்தான்!

அதற்கு முன்நடந்த செக்ஸ் சர்வேக்கள் வேறுவிதமாக இருந்தன. ஆராய்ச்சியாளர் ஆணாக இருந்தால், பெண்களை முகத்துக்கு நேரே பார்த்து அந்தரங்கமானகேள்விகள் கேட்க கூச்சப்படுவார். ஆண்களிடமே ஆண்கள் கேட்கத் தயங்கும்சந்தர்ப்பங்களும் உண்டு. இதற்காக பொத்தாம் பொதுவாகக் கேள்விகள் அடங்கிய ஒருபடிவத்தைக் கொடுத்து, அதில் டிக் அடிக்கச்சொல்வார்கள். இப்படி பலரும் டிக் அடித்துக் கொடுக்கும் படிவங்களை வைத்துஆராய்ச்சி இறுதி செய்யப்படும்.

ஆனால், கின்ஸிக்கு இந்த டைப் ஆராய்ச்சியில் விருப்பம்இல்லை. அவர் ஒவ்வொருவரையும் முகத்துக்கு நேரே பார்த்துக் கேள்விகள் கேட்டு தகவல்திரட்ட விரும்பினார். இப்படிப்பட்ட நேரடி இன்டர்வியூக்களில் யாரும் பொய்சொல்லமாட்டார்கள் என அவர் நம்பினார். மொத்தம் 521 கேள்விகள் அடங்கிய படிவத்தை அவர்வடிவமைத்தார். அதில் முந்நூறு கேள்விகள் செக்ஸ் தொடர்பானவை... மற்றவை, தகவல் கொடுப்பவர் பற்றிய தகவல் குறிப்புகள்.தகவல் தரும் யாருடைய பெயரையும் அவர் பதிவு செய்யவில்லை. வயது, இனம், தொழில், குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேர்... என்கிறமாதிரி தகவல்களாகத்தான் அவை இருக்கும். இப்படி ரகசியம் காக்கப்படும் என நம்பினால்தான்அவர்கள் உண்மை பேசுவார்கள் என்பது கின்ஸிக்கு தெரியும் (இண்டியானாபல்கலைக்கழகத்தில் கின்ஸி ஆராய்ச்சி நடத்திய மையம் இன்னமும் கின்ஸி செக்ஸ், பாலினம் மற்றும்மகப்பேறு ஆராய்ச்சி நிலையம் என்ற பெயரில்இயங்கிவருகிறது. அங்கு இந்த எல்லா படிவங்களும் பொக்கிஷம் போலபாதுகாக்கப்படுகின்றன. யார் வேண்டுமானாலும் போய் இவற்றைப் படிக்கலாம்).