சனி, 26 ஜனவரி, 2013

பெண் உடல் முழுமையான விளக்கம்

பெண்

ஆணும் பெண்ணும் பல வழிகளில் உடலமைப்பில் ஒன்று போலவே உள்ளனர். இருவருக்குமே இதயம், சிறுநீரகம், நுரையீரல் என்று பல உறுப்புகள் ஒரே மாதியாகவே உள்ளது. இவர்களுக்கிடையே உள்ள ஒரே வித்தியாசம் இவர்களின் பாலியல் மற்றும் இனவிருத்திக்கான உடலுறுப்புகள் வெவ்வேறு விதமாக அமைந்துள்ளதுதான். ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து குழந்தையை உருவாக்க இந்த உறுப்புகள் மூலம்தான் சாத்தியம் ஆகிறது. பெண்களின் பல ஆரோக்கியப் பிரச்சினைகள் இந்த உறுப்புகளை பாதிப்பதாய் அமைந்துள்ளது.

பாலியலுடன் சம்பந்தப்பட்ட நம் உடலுறுப்புகளை குறித்து பேசுவது சற்று கடினமான காரியம்தான். குறிப்பாக நீங்கள் வெட்கப்படுபவராக இருந்தால் இதை குறித்து விவாதிப்பது ரொம்பவே கஷ்டம். உடலின் பல்வேறு இனப்பெருக்க உறுப்புகளின் பெயர்கள் உங்களுக்கு தெரியவில்லை என்றாலும் விவாதிப்பது கஷ்டம்தான். இன விருத்திக்கான உடலுறுப்புகள் பொதுவாகவே அந்தரங்கமான ஒன்றாகவே எங்கும் கருதப்படுகிறது.

நம் உடல் எப்படி இயங்குகிறது என்று நமக்கு தெரிந்தால் நம் உடலை நம்மால் மேலும் நன்றாக பார்த்துக் கொள்ளமுடியும். பிரச்சினைகள் வரும்பொழுது அதற்கான காரணங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அந்த அடிப்படையில் பிரச்சினை யின் காரணத்தை அறிந்து, எது சிறந்த சிகிச்சை என முடிவெடுக்க முடியும். நம்மை பற்றி மேலும் மேலும் அறியும் பொழுது மற்றவர்களின் அறிவுரை (நல்லதோ, கெட்டதோ எதுவாய் இருந்தாலும்)யையும் மீறி நம்மால் சொந்த முடிவு எடுக்க முடியும்.

ஒரு பெண்ணுக்கு பெண் என்பதற்கு அடையாளமான இனவிருத்தி உறுப்புகள் உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் அமைந் துள்ளன. இவை பிறப்புறுப்புகள் அல்லது இனவிருத்திக்கான உறுப்புகள் என அழைக்கப் படுகின்றன. வெளிப்பாகத்தை உல்வா என்றழைப்பர். இந்த பாகம் முழுவதையும் சிலர் யோனி என்றழைப்பதுண்டு. ஆனால் யோனி என்பது உல்வாவின் திறப்பிலிருந்து உள்ளே கர்ப்பப்பை வரை போகின்ற வழி யாகும். யோனியை சில நேரங்களில் பிறப்பு வழி என்றும் அழைப்பதுண்டு.

கீழேஉள்ள வரைபடத்தில் உல்வா விளக்கப்பட்டுள்ளது. அதன் பல்வேறு பாகங்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. ஆனால், பெண்ணுக்கு பெண் உடல் வித்தியாசப்படும். உறுப்புகளின் அளவு, வடிவம் நிறம்கூட வித்தியாசப்படும். குறிப்பாக வெளி மற்றும் உள் மடிப்புகள் ஒருவருக்கு ஒருவர் வித்தியாசப்படும்.

மார்பகங்கள்

மார்பகங்கள் எல்லா வடிவிலும் எல்லா அளவிலும் காணப்படும். ஒரு பெண்ணுக்கு 10 முதல் 15 வயது ஆகும் போது இது வளர ஆரம்பிக்கிறது. அதாவது சிறுமியாயிருந்து பூப்படையும் பருவத்தில் இது வளர ஆரம்பிக்கிறது. கருத்தரித்த பின் குழந்தைக்கான பால் இங்குதான் உற்பத்தியாகிறது. உடலுறவின் போது இதைத் தொட்டால் பெண்ணின் யோனிக் குழாய் ஈரமாகி பெண்ணை உடலுறவுக்கு தயார்படுத்துகிறது.

மார்பகத்தின் உள்பாகம்



சுரப்பிகள் :

குழந்தைக்கான பாலை உற்பத்தி செய்கிறது.

சுரப்பி குழாய்கள் :

இவை பாலை மார்புக் காம்புக்கு கொண்டு செல்கிறது.

திறவு (Sinuses) :

குழந்தை பால் குடிக்கும் வரை பால் இங்குதான் சேமித்து வைக்கப்படுகிறது.

மார்புக்காம்பு : இதன் வழியே பால் வெளிவருகிறது. சில நேரம் இது விரைத்து வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். சில நேரம் இது தட்டையாக இருக்கும்.

ஏரியோலா (Areola) :

மார்புக் காம்பை சுற்றிய கருத்த மேடான பகுதி. கருவட்டத்தில் உள்ள மேடுகள் எண்ணெய் பசையை உற்பத்தி செய்கின்றன. அவை மார்புக்காம்பை சுத்தமாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது.

பருவமாற்றங்களும் ஹார்மோன்களும்

ஹார்மோன்கள் உடலில் சுரக்கும் விஷேச வேதிப்பொருட்களாகும். இவை உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுப்படுத்துகிறது. ஒரு பெண்ணுக்கு முதல் மாதவிடாய்க்கு சற்று முன்பு எஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டெரோன் என்ற இரு ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை இரண்டும் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்கள். இந்த இரு ஹார்மோன்களால் தான் பெண் பருவமடைகிறாள்.

பருவமடைந்த பின் மாதவிடாய் நிற்கும் வரை, ஹார்மோன்கள் பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தரிப்பதற்கான வாய்ப்பிற்கு தயார்படுத்துகிறது. இந்த ஹார்மோன்களின் ஆணைப்படிதான் ஒவ்வொரு மாதமும் சினைப்பைகள் ஒரு முட்டையை வெளியிடுகின்றன. ஒரு பெண் கருத்தரிக்க இந்த ஹார்மோன்கள் முக்கிய காரணமாய் விளங்குகின்றன. பல குடும்ப கட்டுப்பாட்டு வழிமுறைகள் இந்த ஹார்மோன்களை கட்டுப்படுத்துவது மூலம் நடக்கிறது. கருத்தரித்த பின்பும், தாய்பால் ஊட்டும் போதும் கூட ஹார்மோன்கள் பல மாற்றத்தை உண்டாக்குகின்றன. இந்த ஹார்மோன்களால் தான் கர்ப்பமாயிருக்கும்போது மாதவிடாய் வருவதில்லை. குழந்தை பிறந்த உடனே பால் சுரக்க வைப்பதும் இந்த ஹார்மோன்கள்தான்.

ஒரு பெண் இன விருத்திக்கான கட்டத்தை கடக்கும்பொழுது, இந்த இரு ஹார்மோன்களும் சுரப்பது படிப்படியாக குறையும். சினைப்பைகளும் முட்டையை வெளியிடாது. அவள் உடலில் கருத்தரித்த லுக்கான நிலை முடிந்து போகும். மாதவிடாய் முற்றிலுமாக நின்று போகும். இதற்கு பெயர் தான் மாதவிடாய் நின்றுவிடுதல்” (Menopause)

அதைத் தொடர்ந்து பெண்ணின் உட லில் சுரக்கும் ஹார்மோன்களின் தன்மை மற்றும் அளவுக்கேற்ப அவளின் மனநிலை, காம உணர்வு, எடை, உடல்சூடு, பசி மற்றும் எலும்பின் சக்தி ஆகியவற்றிலும் மாற்றம் ஏற்படும்.

மாதவிடாய்


ஒரு பெண் இனவிருத்திக்கான காலக்கட்டத்தில் இருக்கும்பொழுது, ஒவ்வொரு மாதமும் சில நாட்கள் அவளின் கர்ப்பப் பையிலிருந்து இரத்தம் யோனிக் குழாய் வழியாக உடலை விட்டு வெளியேறு கிறது. இதற்கு பெயர்தான் மாதவிடாய். மாதவிடாய் நடப்பது உடல் நல்ல நிலையில் இருப்பதற்கு அடையாளம். இதன் மூலம் உடல் கருத்தரித்தலுக்கு தயாராகிறது. இந்த மாதவிடாயை பல பெண்கள், தங்கள் வாழ்வின் ஒரு அம்சமாக ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் பலநேரங்களில் அவர்களுக்கு இது ஏன் நிகழ்கிறது? இந்த மாற்றம் ஏன் ஏற்படுகிறது என்றெல்லாம் தெரிவதில்லை.

மாதாந்திர சுற்று (மாதவிடாய் சுற்று)

மாதாந்திரச் சுற்று ஒவ்வொரு பெண் ணுக்கும் வித்தியாசப்படும். இரத்தப்போக்கு வரும் முதல் நாள் இது தொடங்குகிறது. பெரும்பாலான பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை இந்த ரத்தப்போக்கு ஏற்படும். சில பெண்களுக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை கூட இது ஏற்படும். சில பெண்களுக்கோ 45 நாட்களுக்கு ஒருமுறைதான் இது நிகழும். மாதவிடாய் சுற்றின்போது, ஒவரியில் சுரக்கும் எஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ் டெரான் ஹார்மோன்களின் அளவு மாறிக் கொண்டேயிருக்கும். மாதச்சுற்றின் முதல் பாதியில் பெரும்பாலும் சினைப்பையில் ஈஸ்ட்ரோஜன்தான் சுரக்கும். இதனால் கருப்பையின் உட்சுவரில் ரத்தம் மற்றும் திசுக்களாலான மிருதுவான படலம் உருவா கிறது. ஒரு வேளை பெண் கருத்தரித்தால் உருவாகும் குழந்தை இந்த மிருதுவான கூட்டில் சுகமாக இருக்கும்.

மாதச்சுற்றின் மத்தியில், கருப்பையின் மிருதுவான உட்சுவர் தயார் ஆன உடன், ஏதாவது ஒரு சினைப்பையில் இருந்து முட்டை ஒன்று வெளியேறும். இம்முட்டைஃபெலோப்பியன் குழாய் வழியாக கருப்பையை அடையும். அப்போது பெண் கருத்தரிக்க ஆயத்த நிலையில் இருப்பாள். அப்போது பெண் உடலுறவுக் கொண்டாள், ஆணின் உயிரணு முட்டையோடு சேர வாய்ப்புண்டு. இதற்கு கருத்தரித்தல் எனப்பெயர். அது கர்ப்ப காலத்தின் தொடக்கமும் ஆகும். மாதச்சுற்றின் இரண்டாம் பாகத்தில், அதாவது அவளது அடுத்த மாதவிடாய் தொடங்கும் வரை அவள் உடல் புரோஜெஸ்டொரோன் ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹர்மோனும் கருத்தரிதலுக்கு ஏதுவாக கருப்பையின் மிருதுவான உட்சுவரை உருவாக்குகிறது.

பெரும்பாலான மாதங்களில் பெண்ணின் முட்டை கருத்தரிக்காது. எனவே கருப்பையின் சுவர்ப்படலத்துக்கு தேவையிருக் காது. சினைப்பைகளும், ஹார்மோன்கள் சுரப்பதை நிறுத்தி விடும். இதன் விளைவாய் சுவர்படலமானது உடைந்து சிதையும். உடைந்து சிதைந்த இரத்தக்குழம்பு கருப்பையிலிருந்து மாதவிடாயின்போது, உடலை விட்டு வெளியேறும். இதனோடு கூடவே முட்டையும் வெளியேறும். இது புதியமாதாந்திர சுற்றின் தொடக்கமாகும். மாதவிடாய் நின்ற உடன் சினைப்பைகள் சுவர்ப்படலம் உருவாகும். பெண்களுக்கு வயதாகி, மாதவிடாய் முற்றிலுமாக நிற்பதற்கு முன்பு இரத்தப்போக்கு அடிக்கடி ஏற்படலாம். இரத்தப்போக்கின் அளவும், இளமையாய் இருந்தபோது உண்டானதைவிட அதிகமாக இருக்கலாம். மாதவிடாய் நிற்கப் போகும் காலத்தில் (மெனோபாஸை நெருங்கும் சமயத்தில்), மாதவிடாய் சில மாதங்கள் நின்று மீண்டும் தொடங்கலாம்.

பெண்ணின் இனவிருத்தி உறுப்பின் வெளிப்பாகங்கள்




உல்வா :

உங்கள் இரு தொடைகளுக்கு இடையே காணப்படும் இனவிருத்தி உறுப்புகள்

வெளிமடிப்புகள் :

தடித்த சதைப் பகுதி கால்கள் ஒன்றாக இருக்கும்பொழுது இவை மூடிக்கொள் ளும். இது உள் பாகங்களை பாதுகாக்கிறது.

உள்மடிப்புகள் :

இது மிருதுவான தோல்பகுதி. இதில் முடி இருக்காது. தொட்ட உடனே உணர்ச்சி வரும். உடலுறவின் போது இப்பாகம் விரிவடையும். இதன் நிறம் கருமையாகும்.

யோனிக் குழாயின் திறப்பு :

யோனியின் திறப்பு வாயில்

ஹைமன் (Hymen) :

யோனியின் திறப்பில் உள்ளே அமைந்துள்ள மெல்லிய சதைப் பகுதி. கடின வேலை விளையாட்டு போன்ற நடவடிக்கைகளின் போது இத்தோல் பகுதி விரிவடையும் அல்லது கிழிபடலாம். அப்போது லேசாக இரத்தம் வரும். முதன்முறையாக உடலுறவின் போதும் இது கிழிபடலாம். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஹைமன் வித்தியாசப்படும். சில பெண்களுக்கு ஹைமன்னே இருக்காது.

மோன்ஸ் (Mons) :

முடிகள் அடர்ந்த, உல்வாவின் தடித்த மேல் பகுதி.

கிளிட்டோரிஸ் :

மலர்மொட்டு போன்று சிறு பாகம். உல்வாவின் பாகங்களிலேயே மிகுந்த உணர்ச்சி தரக்கூடியது. இதையும் இதைச் சுற்றியுள்ள பகுதியையும் தேய்த்தால் பெண்ணுக்கு பாலியல் வேட்கை அதிகமாகி உச்சக் கட்டத்தை அடைவாள்.

சிறுநீர்த்துவாரம் :

சிறுநீர் குழாயின் வெளித்திறவு வாயில். சிறுநீர்ப் பையில் சேமிக்கப்பட்டுள்ள சிறுநீர் இக்குழாய் வழியேதான் உள்ளிருந்து வெளியே வருகிறது.

ஆசனவாய் (Anus) : குடல்வாய் திறப்பு, கழிவு (மலம்) இதன் வழியாக வெளியேறும்

பெண்ணின் இனவிருத்தி உறுப்புகளின் உட்பாகங்கள்

சினைப்பை:

ஒவ்வொரு மாதமும் சினைப்பையிலிருந்து ஒரு முட்டை பெலோப்பியன் குழாய்க்கு அனுப்பப்படுகிறது. ஒரு ஆணின் விந்தணு இதோடு இணையும் பொழுது அது குழந்தையாக உருப்பெற துவங்கு கிறது. ஒரு பெண்ணுக்கு இரு சினைப்பைகள் இருக்கும் கருப்பையின் இரு புறமும் ஒவ்வொன்றும் இருக்கும். ஒவ்வொரு சினைப்பையும் ஒரு திராட்சைப்பழ அளவில் இருக்கும்.

கர்ப்பப்பைவாய் :

கருப்பையின் வாயைத் தன் கர்ப்பப்பைவாய் என சொல்கிறோம். கருப்பையின் இத்திறப்பு யோனிக்குள் செல்கிறது. ஆணின் உயிரணு கர்ப்பப்பைக்குள் கர்ப்பப்பை வாயில் உள்ள சிறுதுவாரம் வழியே உள்ளே நுழைகிறது. அதே நேரத்தில் ஆண்குறி போன்ற மற்றவை கருப்பையில் நுழைய முடியாதபடி இது தடுக்கிறது. குழந்தைப் பிறப்பின்போது, இது திறந்து குழந்தை வெளியே வர உதவுகிறது.

.
ஃபெலோப்பியன் குழாய்கள் :

இக்குழாய்கள் சினைப்பையையும் கர்ப்பப்பையையும் இணைக்கிறது. சினைப்பை ஒரு முட்டையை வெளியிடும் போது, அம்முட்டை இக்குழாயில் பயணம் செய்து கருப்பையை அடைகிறது.

கர்ப்பப்பை :

உள்ளே வெற்றிடத் தைக் கொண்ட தசையாலான பகுதி மாதவிடாயின் போது இங்கிருந்து தான் இரத்தம் வெளியேறுகிறது. கருத்தரித்த பின் குழந்தை இங்குதான் வளர்கிறது.

யோனிக் குழாய் அல்லது பிறப்புவழி :

உல்வா (Vulva)விலிருந்து கர்ப்பப்பைக்கு செல்லும் பாதைதான் யோனிக் குழாய். இதன் தோல் பகுதி விஷேசமானது. உடலுறவின் போதும் குழந்தைப் பிறப்பின்போது இத்தோல் பகுதி சுலபமாக விரிவடை கிறது. இதிலிருந்து வெளிப்படும் திரவம் அல்லது ஈரம் யோனிக்குழாயை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், கிருமிகள் தாக்காமலும் பாதுகாக்கிறது.

நன்றிகள்:தமிழ் சூத்ரா


வெள்ளி, 4 ஜனவரி, 2013

கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிப்து எப்படி?



பதில்: எனது சிகிச்சைக் கூடத்துக்கு குழந்தையொன்றைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று பல் வருகின்றார்கள். ஏறக்குறைய 60வீதமான ஐரோப்பா வாழும் புலம்பெயர்ந்த பெண்களிலே மகப்பேறின்மைநிலை காணப்படுகின்றது. இது பெரும்பாலும் உடலில் சுரக்கப்படும் ஓமோன்களின் சமநிலைக் குழப்பம் காரணமாக மாதவிடாய்ச் சக்கரம் ஒழுங்கீனமாக நடைபெற முட்டை குறைவாகவே வெளிவருகிறது. சொந்த நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து அந்நிய நாட்டில் வாழ்வதால் ஏற்ப்படும் மனவழுத்தமும் உடலில் ஏற்ப்படும் பாதிப்புக்களுமே காரணமென எண்ணுகின்றேன். புகலிட நாடுகளில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களில சிக்கித் தவிக்கும்போது இவை தவிர்க்கமுடியாகவாறு உடல், உளத் தாக்கங்களை ஏற்ப்படுத்துகின்றன. இந்நிலை நீடிக்கும்போது நோய்நிலை தோன்றுகின்றது. இங்கு நான் மகப்பேறின்மையை ஒரு நோய்நிலையென எவ்வகையிலும் குறிப்பிடவில்லை, ஆயினும் இது எமது புகலிட நாட்டு வாழ்க்கை முறையினால் கிடைக்குமொரு இயல்பற்ற வாழ்க்கை முறையென்றே குறிப்பிட விரும்புகின்றேன். ஏனெய 40வீதம் மகப்பேறின்மைக்கு ஆண்களில் காணப்படும் விந்தெண்ணிக்கைக் குறைவு, ஆண்குறி விறைப்புத்தன்மை குறைபாடு போன்றன காரணங்களாகலாம். மேலும் புகலிட நாடுகளில் எமது உணவுகளில் மாற்றம், முன்தயாரிக்கப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்ளுதல, அதகளவில் சிவப்பு இறைச்சி, சீனி மற்றும் மதுபானம், ஏனைய செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட பானங்கள், காற்றூட்டப்பட்ட பானங்கள் போன்றன எமது சமூதாயத்தில் மகப்பேறின்மையை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.

புகலிட நாடுகளில, உழைப்பதற்காக ஆண்கள் நீண்டநேரம் வேலைத்தளங்களிலிருக்க, பெண்கள் தனிமையில் வீட்டிலிருக்கிறார்கள். தாய் நாட்டில் பெரியதொரு கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த நிலைமாறி, உற்றாரும் உனவினருமின்றிஇ நண்பர்களும் தோழருமின்றி தனிமைதரும் வெறுமை மனச்சோர்வை தருவதால் ஒருவரின் உடல் மனநலம் பாதிப்புள்ளாகிறது.

எனதனுபவங்களில் சில:
முப்பத்தெட்டு வயதுடைய பெண், திருமணமாகி ஆறு வருடங்களாயிருக்கும். இவர் மூன்று தடவைகளில் முயற்சித்திருந்த ஐ.வி.எவ். என்னும் கருத்தரிக்கும் முறையினாலும் கருத்தரிக்க கூடாமல் போயிற்று. இவரினால் முட்டையை உருவாக்க முடியவில்லையென வைத்தியர்கள் முடிவாக கூறினார்கள். இறைவனின் அருளும் கூடுவிருக்க, இந்நிலையை என்னால் மாற்றமுடிந்தது. இவர் இப்பொழுது ஆரோக்கியமான ஒரு மகவைப் பெற்றெடுத்துள்ளார்.

முப்பத்திரண்டு வயதுடைய பெண், திருமணமாகி 4 வருடங்களாகியிருந்தன. மூன்று தடவைகளில் கருச்சிதைவடைந்து போனதாவும், ஒழுங்கான மாதவிடாய்ச் சக்கரம் நடைபெறாமல் போனதாகவும் எனது சிகிச்சைக் கூடத்திற்கு வந்திருந்தபோது கூறினார். ஒழுங்கான மாதவிடாய்ச் சக்கரத்தை மீளப்பெறுவதே எனது சிகிச்சைத் திட்டத்தில் முதன்மையாகவிருந்தது. 5 மாதங்களில் சக்கரம் வழமைக்குத் திரும்பியது.இதன் பின்னர் இவரின் கருப்பையை வலுபடுத்தி காத்திரமாக்கியதோடு, முட்டையுற்பத்தியையும் ஒழுங்காக ஏற்படுமாறு சிகிச்சைத் திட்டம் வகுக்கப்பட்டது. இப்பொழுது இவர் ஒரு ஆறுமாதக் குழந்தையின் தாயாவார்.

முப்பத்தாறு வயதுடைய பெண் பொலிசிஸ்ரிக் ஓவறி சின்றம் எனக்கண்டு பிடிக்கப்பட்டிருந்தது. லேசான மாதவிடாய் போக்கு, எடை அதிகரித்தல், ஆண்கள் போன்று நாடி, மேலுதட்டின் மேல், முளைக்காம்பைச் சூழ ஆகியவிடங்களில் மயிர்வளர்ச்சி போன்றன இவரில் காணப்பட்ட நோய்நிலைக் குறிகளாகும். பல தடவைகளில் குளோமிட் சிகிச்சை பயனளிக்காதபோது மெற்போமின்என்னும் மாத்திரை இவரது சிகிச்சை நிபுணரால் வழங்கப்பட்டது. 83கி.கி. எடையுடனிருந்தவரை நான்கு மாதங்களினுள் 70கி.கி. நிறைக்கு வெற்றிகரமாக குறைவடைந்தார்இ அத்துடன் அவரின் மாதவிடாய் போக்கில் முன்னேற்றம் காணப்பட்டது. இதன் பின்னர் ஆறு மாதத்திற்குள்ளாகவே கருத்தரித்துஇ இன்னுமொரு மாதத்தினுள் ஒரு குழந்தையைப் பிரசவித்துள்ளார்.

இருபத்தொன்பது வயது நிரம்பிய ஆண் என்னைச் சிகிச்சைக் கூடத்தில் சந்தித்திருந்தபொழுது திருமணமாகி மூன்று வருடங்களாகியிருந்திருந்தன. இவருக்கு உடலுறவின் பொழுது ஆண்குறியின் விறைப்புத்தன்மையை தக்கவைக்க முடியாதநிலையிலிருந்தது. திருமணமான காலத்திலிருந்து ஒரு தடவை கூட இது நடைபெறவில்லை. இலங்கையிலிருந்தபோது நடைபெற்ற சில துன்பமான நிகழ்ச்சிகளின் பின்விளைவாக (போஸ்ற் றொமற்ரிக் ஸ்றெஸ் டிஸ்ஓடர்) இந்நிலை ஏற்ப்பட்டிருந்தது. இது அவரின் உடல், உளநிலைகளை பெரியளவில் பாதித்திருந்தது. மூலிகை போசாக்குக் குறைநிரப்பிகள் போனறவற்றின் உடலுதவியினால, ஆண்குறியின் விறைப்புத்தன்மை நீடிக்கப்பட, தற்பொழுது இவர் இரண்டு குழந்தைகளின் தந்தையாவர். மேலும் பல குழந்தைச் செல்வம் கிடைக்கும் என்பது எனதவா.


நோய்க்கான அறிகுறிகள்:
ஆண்களின் (மகப்பேறின்மை) மலடு நிலைசம்பந்தமான அறிகுறிகள் பெரிதாக தென்படுவதில்லை. ஓமோன் சுரப்பில் குழறுபடிகள் கொண்ட ஆண்களில் குரலில் மாற்றம, தலைமயிர் வளர்ச்சியில் மாற்றம், மார்பு வளர்ச்சி அல்லது உடலுறவில் ஈடுபடமுடியாமை போன்றன விருத்தியடைகின்றன. பெண்களில் மாதவிடாய் சக்கரத்தில் ஒழுங்கீனங்கள, இனப்பெருக்க தொகுதிசார் ஏனையநோய் நிலைகள் போன்றன மாதவிடாய் போக்கின் பொழுதும் உடலுறவின் பொழுதும் நோவைத் தருகின்றன.

- பெண்களில் மகப்பேறின்மைக்காரண காரணிகள்:
(சூல்கொள்ளல், கருத்தரித்தல், கற்பம்பேணி குழந்தை பெறுதல்)

வயது
– 30 வயதுகளின் கடைக்கூற்றிலிருக்கும் பெண்கள் 20வயதுகளின் ஆரம்பத்திலிருப்பவர்களைக் காட்டிலும் 30வீதம் குறைவாகவே கருத்தரிக்கக்கூடும்.
– கருப்பைச் சுவர் குழறுபடிகள்
– நீண்ட நாள் நோய்நிலைகள் (உ+ம் நீரிழிவு, லுபஸ், மூட்டுவீக்கம், உயர்ந்த இறுக்கம், ஆஸ்மா (தொய்வு).
– சூழல் காரணிகள் (உ-ம் புகை பீடித்தல், மதுவருந்தல், வேலைத்தள நிலைகள் அல்லது சூழல், தொழில்சார் நஞ்சுகள்)
– உடலிலுள்ள மிககுறைந்த அல்லது அதிகூடிய கொழுப்பளவு
– கற்பகாலத்தில் டி.ஈ.எஸ். எடுத்தல்.
– உடலுறவினால் கடத்தப்படும் நோய்கள்
– பலோப்பியன் குழாயிலேற்படும் நோய்கள்
– பலதடவை கருச்சிதைவு

- ஆண்களில் மகப்பேறின்மைக்கான காரணிகள் :
மகப்பேறின்மை என்பது பெண்களுக்கு மட்டுமானதன்று ஆண்களின் பங்களிப்பில் ஏற்ப்படக்கூடிய குறைபாடுகள அல்லது காரணிகள்:
- ஆண் இனப்பெருக்க தொகுதிலமைந்த புறஸ்ரேற் சுரப்பியில் நோய், ஆண்குறியின் விறைப்புத்தன்மையைப் பேணமுடியாமை, உடலுறவினால் கடத்தப்படும் நோய்கள்.
- சூழலில் அல்லது வேலைத்தலத்தில் ஆபத்துவிளைவிக்கும் இரசாயனங்கள் (கதிர்வீச்சு, கதிர்த்தாக்கம் கொண்டவை, ஈயம், எதிலின் டைபுறோமின், வைனைல் குளோரைட் போன்றன)
- புகையிலை, மாஜவான ஏனைய போதைப் பொருட்களின் பாவனை.
- ஆதிகளவு மது உட்கொள்ளல்
- விதைப்பைகள் வெப்பநிலை அதிகமாகவிருத்தல் (உ-ம் இறுக்கமான, செயற்கை நூல்வகைத் துணிகளாலான கச்சை, வேலைத்தள வெப்பநிலை அளவுகள்)
- குடலிறக்க (கேணியா) சத்திரசிகிச்சை.
- விதைகள் விதைப்பையினுள் இறங்காமலிருத்தல்
- சொறாசிஸ் (தோல் நோய்) நோய்க்கான சிபார்சிக்கப்பட்ட மருந்துகள்
- விடலைப்பருவத்தில் கூவைக்கட்டு வந்திருத்தல்.

ஒரு வருட காலமாகவோ அல்லது அதற்கு சற்று அதிகமாகவோ சூல்கொள்ளும் பெண். உடலுறவின் போது கருத்தரியாமல் போதல் மகப்பேறின்மை எனக்கொள்ளப்படும். இது கருத்தரித்த பின் பிரசவம் வரையில் சென்றடையாத நிலையையும் குறிக்கும்.

சூல்கொள்ளல், சூல் விந்தினால் கருக்கட்டப்படுதல, கருக்கட்டப்பட்ட முட்டை பலோப்பியன் குழாயினூடு நகர்ந்து கருப்பையை அடைந்து வளர்ச்சியடைதல் போன்ற சிக்கலான நிலைகளை இது கொண்டிருக்கின்றது. ஏறக்குறைய 40வீதம் குழந்தைப்பேறற்ற தம்பதியினரில், இந்நிலைக்கு ஆணே பகுதியாகவோ முழுமையாகவோ காரணமாகின்றார். ஆண்களின் மகப்பேறின்மைக்கு குறைவான எண்ணிக்கையில் விந்து உற்பத்தி செய்யப்படடுதல் முதன்மையான காரணமாகும். இச்சமயங்களில் உடற்கூற்றமைப்பில் ஏதாவது மாறுபாடுகள் காரணமாகலாம்.

ஆண்களில் விந்து எண்ணிக்கை குறைவாக காணப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. மதுபானம் அருந்துதல், அகச்சுரக்கும் சுரப்பிகளின் குறைபாடுகள், சூழலிலுள்ள நஞ்சுப்பதார்த்தம், பதிப்பான கதிர்கள், அதிகமான சூடு ஆகியனவும், நீண்ட நாள் காய்ச்சல் அல்லது வேறேதாவது வருத்தம், விதையில் ஏற்ப்பட்ட அடிபாடு அல்லது காயம் போன்றன காரணங்களாகின்றன. விதையில் விந்தணுக்கள் தோன்றுவதற்கு குறிப்பிட்ட ஒரு வெப்பநிலையில் விதையுறையிலுள்ள விதைகள் பேணப்படவேண்டும். விதையைச் சுற்றியுள்ள நாளங்கள், சில ஆண்களில் அதிகம் விரிவடைவதனால், குருதி விதையைச் சுற்றி நில்லாமல், வடிந்தோடுவதனால், விதையில் தோன்றும் விந்தணுக்களை இது பாதிக்கின்றது.

பெண்கனில் மகப்பேறின்மைக்கு, சூலகத்திலுள்ள குறைபாடுகள், பலோப்பியன் குழாய் அடைப்புக்கள், என்டோமீற்றியோசிஸ் எனப்படும் கருப்பையில் வழமைக்கு மாறான உட்சுவர் கட்டி வளர்ச்சிகள், யுறையின் பைபுரைட் எனப்படும் கருப்பையின் உள் வெளிச் சுவர்களில் தோன்றக் கூடிய பாதகமற்ற கட்டிகள் போன்றன காரணங்களாகின்றன. சில பெண்களில் விந்தணுவை எதிரியாக கருதி எதிர்ப்பு உடலங்கள் தோற்றுவிக்கப்படுவதனால் பெண்ணின் உடலில் விந்து ஏற்றுக்கொள்ளப்படாமல் போகின்றது. சல்லமைடியா எனப்படும் உடலுறவின்போது கடத்தப்படும் நோயும் மகப்பேறின்மைக்கு ஒரு காரணமாகும். பெற்றோர் ஆகிவிடும் பயம், வாழ்;க்கைப்பழு, மகப்பேறின்மையால் ஏற்படும் வாழ்க்கைப்பழு அல்லது சமூகப்பழி ஆகியன உளவியற் காரணங்களாகின்றன.

மகப்பேறின்மைக்கான பொதுவான காரணங்களாக பின்வருவன குறிப்பிடப்படும்:
- பெண்களில் கருப்பை உட்சுவரின் கட்டி வளர்ச்சிக்ள (என்டோமீற்றியோசிஸ்).
- ஆண்களில் மாற்;றமைந்த விந்தணுக்கள் அல்லது குறைந்த எண்ணிக்கையில் விந்தணுக்கள் தோன்றுதல், விந்தணுக்களை பெண் குறியில் செலுத்துவதற்கு தேவையான ஆண் குறியின் விறைப்புத்தன்மை இல்லாதிருத்தல் (இறக்ரையில் டிஸ்பங்சன்).
- பெண்களில் பலோப்பியன் குழாயில் தடைகள் இருத்தல்.
- பெண்களில் சூல் தோன்றாதிருத்தல் அல்லது ஒழுங்கன்றி தோன்றுதல்.
- தம்பதியினர் முழுமையான உடலுறவை செய்ய முடியாதிருத்தல்.
- பெண்களில் கருப்பை வாயிலில் தோன்றும் சளிப்படை விந்தணுக்களைக் கொன்றுவிடுதல்.
- பெண்களில் முழுமையான கர்ப்ப காலத்தைக்கொண்டு செல்வதற்கு தேவையான புறோஜெஸ்ரோன் எனப்படும் ஓமோன் போதியளவு சுரக்கப்படாமை.
- பெண்களின் வயது முப்பதுநான்கிற்கு அதிகமாக இருத்தல். பொதுவாக மகப்பேறின்மைக்கு ஒன்றிற்கு மேற்ப்பட்ட காரணிகள் காரணங்களாகின்றன.

நன்றிகள் :marunthu.com