வியாழன், 26 செப்டம்பர், 2013

விந்தணு குறைபாடு குழந்தை பிறப்பை தடுக்கும்



பண்டைய காலங்களில் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டால் பெண்களுக்கு மட்டுமே குறை இருப்பதாக கருதப்பட்டது. இதனால் குழந்தை பிறக்காததை காரணம் காட்டி பெண்ணை ஒதுக்கி வைத்து விட்டு இரண்டாம் தாரம் கூட ஆண்கள் திருமணம் செய்து கொண்டனர். தற்போது விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக சோதனை செய்யப்பட்டதில் ஆண்களின் விந்தணுக்களில் குறைபாடு இருந்தாலும் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படும் என்று கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சை முறைகளும் வந்து விட்டன. எனவே சரியான அளவில் விந்தணுக்களை அதிகரிக்க உளவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்களேன்.
நமது கற்பனைக்குக் கூட எட்டாத கடவுளின் அற்புதங்களின் ஒன்று மகப்பேறு. ஆணின் விந்துவும், பெண்ணின் முட்டையும் சேர்ந்தால் கரு உண்டாகும். இந்த சேர்க்கை நிகழாவிட்டால், கருத்தரிப்பு ஏற்படாது. மாதவிடாய் முடிந்த 14 அல்லது 15 நாளில், பெண்ணின் சினைப்பைகளிலிருந்து சினைமுட்டை (Ovum) வெளிபடும். இது ஒரு நாள் தான் உயிரோடு இருக்கும். அதற்குள் உடலுறவு நிகழ்ந்தால் கர்ப்பம் உண்டாகும்.
உடலுறவிற்கு பின் கோடிக்கணக்கான ஆணின் விந்து அணுக்கள் பெண்ணுறுப்பில் விழும். இவை ஆவேசத்துடன் முன்நோக்கி நகர்ந்து கர்பப்பையை நோக்கி நீந்தி ஒடும். ‘ஸ்பீட்' என்ன தெரியுமா? ஒரு செ.மீ. கடக்க கிட்டத்தட்ட 3.2 நிமிடங்கள் (8 நிமிடங்களில் 1 அங்குலம்) ஆகும். கடக்க வேண்டிய தூரம் (பெண்ணுறுப்பிலிருந்து கர்பப்பையின் தூரம்) 15 லிருந்து 25 செ.மீ. இருக்கும். இவை கர்பப்பையை அடைய நீந்துவதற்கு உதவுவது வழவழப்பான விந்து திரவம். இலக்கை அடையும் முன்பே லட்சக்கணக்கான விந்தணுக்கள் சோர்வடைந்து விழுந்து விடும். வலிமையும், நகரும் துடிப்பும் உடைய விந்தணுக்கள் தான் முட்டையை அடையும். இந்த மிகச் சிறிய (புள்ளி அளவே உள்ள) முட்டையை உயிரணுக்கள் முட்டி, முட்டி மோதும். இவற்றில் சிறந்த ஒரே ஒரு உயிரணு தான் முட்டையின் வெளிச் சவ்வை துளைத்து உள்ளே நுழையும். நுழைந்த உடனே, வேறு அணுக்கள் உள்ளே புகாதபடி சினை முட்டையில் சவ்வுப் பகுதி கதவு போல் மூடிக் கொண்டு விடும்! ஒரே ஒரு விந்தணுக்குத் தான் அனுமதி!
சாதாரணமாக ஒரு ஆணின் ஒரு மில்லி லிட்டர் விந்தில் குறைந்த பட்சம் 4 கோடி விந்தணுக்கள் இருக்க வேண்டும். அதிக பட்சமாக 12 கோடி கூட இருக்கும். இந்த குறைபாடு தான் முக்கியமான பிரச்சனை. ஆண்களின் விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுவதற்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. உடலில் சூடு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை சோதனை செய்து கண்டறியலாம். புற்றுநோய் அறிகுறிகள் இருந்தாலோ, மூளையில் குறைபாடு இருந்தாலோ விந்தணு உற்பத்தி பாதிக்கும். அதேபோல் மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, சரியான உடற்பயிற்சி இன்மை, டெஸ்டோஸ்டிரன் சுரப்பு குறைபாடினாலும் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும்.
முருங்ககாயை நன்கு வேக வைத்து சாப்பிட்டு வந்தால் காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து ஒரு அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும். நெய், மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும். அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடவேண்டும். பின்னர் ஒரு டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும். அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும். கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.
ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும். காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.
வெள்ளைப்பூண்டு விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும். இதேபோல் தர்பூசணி பழம் சாப்பிடுவதன் மூலம் விந்தணு உற்பத்தி பெருகும் என்று ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. தினசரி ஒருமணிநேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும். இது உடலில் ரத்த ஒட்டத்தின் அளவை அதிகரிக்கிறது. இதனால் டெஸ்டோடிரன் ஹார்மோன் சுரப்பும் அதிகரிக்கும். அதேபோல் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியும் அதிகரிக்கும். இது விந்தணு உற்பத்தியை அதிகரிக்கிறது.

நன்றி: மருத்துவம் நாளிதழ் 

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

உடல் உறவினால் என்ன நன்மைகள் ?மேலும் உண்மைகள்




காமம் என்ற மூன்றெழுத்து வார்த்தையைச் சுற்றித்தான் உலகமே இயங்குகிறது. முற்றும் துறந்த முனிவர்கள் கூட காமனின் அம்புக்கு தப்பமுடியாமல் தடுமாறித்தான் போயிருக்கிறார்கள். சிற்றுயிர்கள் முதல் ஆறு அறிவு படைத்த மனிதர்கள் வரை அனைவரின் வாழ்வும் காமத்தில்தான் முற்றுப்பெருகிறது.

இரு உடல்கள் இணைவது இனப்பெருக்கத்திற்கு மட்டும்தான் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர் ஆனால் அது உண்மையில்லை என்று அறிவியலாளர்கள் நிரூபித்துள்ளனர். செக்ஸ் என்பது சிறந்த உடற்பயிற்சி என்றும் இதனால் உடலில் தேவையற்ற இடங்களில் உள்ள கொழுப்புகள் குறையும் என்றும் உறுதிபட தெரிவித்துள்ளனர். அதைப்போல கலவியில் ஈடுபடுவதன் மூலம் இன்னும் பல நன்மைகள் கிடைக்கும் என்று பல்வேறு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த பட்டியலில் உள்ள தகவல்கள் சுவாரஸ்யமானவை படியுங்களேன்.

சிறந்த பேச்சாளராக்கும்

படுக்கை அறையில் தம்பதிகளிடையே ஏற்படும் ஆத்மார்த்தமான உறவு அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறதாம். மிகப்பெரிய கூட்டத்தில் தைரியமாக பேசக்கூடிய அளவிற்கு மனதைரியத்தை தருகிறது என்று ஆய்வுகள் மூலம் நிரூபித்துள்ளனர் ஆய்வாளர்கள். இதனால் மனஅழுத்தம், மேடைக்கூச்சம் நீங்கி தைரியமாக தங்களின் கருத்துக்களை முன்வைக்க முடியும் உறுதியாக கூறுகின்றனர் நிபுணர்கள்.

நோய் எதிர்ப்பு திறன் கொண்ட முத்தம்

உறவின் தொடக்கம் முத்தம்தான். இது சாதாரண சமாச்சாரமல்ல. முத்தத்தின் மூலம் நோய் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறதாம். மூளையின் செல்கள் சுறுசுறுப்படைகின்றனவாம். முகத்தின் அத்தனை தசை நரம்புகளும் இயங்குவதோடு முகத்தை சுருக்கமின்றி பாதுகாக்கிறதாம்.

ரத்த அழுத்தம் சரியாகும்

உறவின் வகைகள் பல உண்டு. அதில் ஒன்றான வாய்வழிப் புணர்ச்சியும் பல நன்மைகளை செய்கின்றதாம். பெண்ணை நுகர்ந்து, நாவின் மூலம் கிளர்ச்சியூட்டும் ஆண்கள் உள்ளனர். இதனால் பெண்களுக்கு குறைந்த ரத்த அழுத்த நோய் இருந்தால் குணமாகும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் வழக்கமாக உடலுறவின் மூலம் உயர்ரத்த அழுத்த நோய் இருந்தால் குணமாகும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முகத்தை பொலிவாக்கும் விந்தணு

விந்தணு என்பது ஆண்மையின் அடையாளம். ஒரு துளியில் லட்சக்கணக்கான விந்தணுக்கள் காணப்படுகின்றன. இதன் எண்ணிக்கையை வைத்துதான் அவர்களின் ஆரோக்கியம், குழந்தை பேறு போன்றவை முடிவு செய்யப்படும். இந்த விந்தணு சிறந்த மாய்ஸ்சரைசிங் கிரீம் ஆக செயல்படுகிறதாம். இதில் உள்ள புரதச் சத்து சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி இறுக்கமாக மாற்றுகிறதாம். விந்தணுவில் துத்தநாகம், மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், ப்ரக்டோஸ் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. காண்டம் உபயோகிக்காமல் உறவில் ஈடுபடுபவர்களுக்கு மன அழுத்தம் மூலம் ஏற்பட்ட காய்ச்சல் இருந்தால் குணமடையும் என்கின்றனர் நிபுணர்கள்.

-










செவ்வாய், 3 செப்டம்பர், 2013

உடல் பற்றிய தவறான எண்ணங்கள்





மார்பகங்கள் சிறிதாக இருக்கும் சில பெண்கள் தம்மிடம் பெண்களின் அம்சங்கள் இல்லையென்றும், உடலுறவில் தம்மால் ஆண்ளைத் திருப்பிப் படுத்த முடியாது என்றும் கவலை கொண்டு ஒரு வித தாழ்வு மனப் பான்மைக்குத் தள்ளப் படுகிறார்கள்.

கிராமத்து பெண்களிடம் மட்டுமல்ல, நகரத்து பெண்களிடமும் இதுபோல் தங்களது உடல் அமைப்பு குறித்த தவறான எண்ணங்கள் உள்ளன. இதைத்தான் Body இமேஜ் என்று சொல்கிறோம். அதாவது, நம்முடைய உடல் பற்றி நமக்கிருக்கும் எண்ணங்கள் மற்றும் நம் உடல் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய நம் கற்பனை இரண்டும் சேர்ந்து, இது உருவாகிறது. முக்கியமாக உடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கையும், இதுபோல் பெண்ணைத் திருப்திப்படுத்த, ஆணுக்கு பிறப்புறுப்பு பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கையும் உள்ளன. இந்த நம்பிக்கைகள் எந்த அளவுக்குச் சரியானவை என்பது பற்றித்தான் நாம் பார்க்கப் போகிறோம்.

இந்த நம்பிக்கைகள் எந்த காலகட்டத்தில் உருவானவை என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. விஞ்ஞானரீதியான சிந்தனைகளும், கண்டுபிடிப்புகளும் இல்லாத காலகட்டத்தில் மக்கள் தங்களுடைய எல்லா சந்தேகங்களுக்கும் கற்பனையில்தான் விடைகளை கண்டுபிடித்தார்கள். இதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம், பெரியம்மை நோய். இது ஒரு வைரஸ் கிருமியால்தான் வருகிறது என்பது கண்டறியப்படாத காலகட்டத்தில், அம்மை என்றொரு தெய்வத்தின் கோபத்தால்தான் இது வருகிறது என்று உலகம் முழுவதும் நம்பினார்கள். இதுபோல் பல நூற்றுக்கணக்கான நம்பிக்கைகள். ஆனால் இன்று விஞ்ஞானம் வளர்ச்சியடைந்து, இதற்கெல்லாம் விடை கிடைத்துவிட்ட பிறகும், தலைமுறை தலைமுறையாக நன்றாக காலூன்றியிருக்கும் இந்த நம்பிக்கைகள் அப்படியேதான் இருக்கின்றன. இதுபோல்தான் பாடி இமேஜ் பற்றிய நம்பிக்கைகளும். ஏதோவொரு காலகட்டத்தில் தோன்றி, இன்றுவரை வந்திருக்கின்றன. இண்டெர்நெட்டில் நூற்றுக்கணக்கான சைட்கள் இதுபற்றி இருக்கின்றன என்றால், உலகம் முழுக்க இந்த நம்பிக்கை எந்த அளவுக்கு காலூன்றியுள்ளது பாருங்கள்.

இனி, இந்த நம்பிக்கைகள் சரியானவைதானா என்று பார்ப்போம். முதலில் ஆண் பிறப்புறுப்பு பெரிதாக இருந்தால்தான் பெண்ணை திருப்திப்படுத்த முடியும் என்பதை எடுத்துக் கொள்வோம். ஆண் பிறப்புறுப்பு விறைப்புத்தன்மை இல்லாத சாதாரண நேரங்களில் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதுபற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ஏனெனில், அப்போது அதனுடைய வேலை, சிறுநீர் கழிப்பது மட்டும்தான். ஆனால், விறைப்புத்தன்மை அடைந்த பிறகு, எந்த அளவுக்கு அது நீளமாக, தடிமனாக இருக்கிறதோ, அந்த அளவுக்குப் பெண்ணைத் திருப்திப்படுத்த முடியும் என்னும் நம்பிக்கை உள்ளதால், விறைப்புத் தன்மை அடைந்த நிலையில், ஆண் பிறப்புறுப்பு எவ்வளவு நீளம் இருக்கிறது என்பது முக்கியமாகிவிடுகிறது. அதாவது, பெண் பிறப்புறுப்பின் உட்பகுதி இடைவெளி இல்லாமல் நிரப்பப்படும்போதுதான், பிறப்புறுப்பின் உட்புறச் சுவர்களில் உராய்வு ஏற்பட்டு, அவள் உச்சகட்ட இன்பத்தைப் பெற்று திருப்தியடைகிறாள் என்பது நம்பிக்கை. அதைவிட முக்கியமானது, பெண்ணை திருப்திப்படுத்துவது என்பது ஆண்மையின் அடையாளமாகவும், வீரத்தின் அடையாளமாகவும் வேறு கொள்ளப்படுகிறது. இதனடிப்படையில்தான் இந்த நம்பிக்கை உருவாகியுள்ளது. பெண்களுக்கும் இந்த நம்பிக்கை உள்ளது என்பது இதற்கு மேலும் வலு சேர்த்துவிட்டது. இனி விஞ்ஞான ரீதியான முடிவுகளைப் பார்ப்போம்.

சாராசரியாக உணர்ச்சிவசப்படாத நிலையில், அதாவது விறைப்பற்ற நிலையில் ஆண் பிறப்புறுப்பு 2 அங்குலம் முதல் 4 அங்குலம் வரை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. விறைப்படைந்த நிலையில், 5 அங்குலம் முதல் 6 அங்குலம் வரை உள்ளது. ஆனால், பெண் பிறப்புறுப்பின் முதல் 2 இன்ச் பகுதிகளில்தான் அவள் து}ண்டப்பட்டு செக்ஸ் உணர்ச்சிகளை அடைகிறாள் என்று விஞ்ஞான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஏனெனில், பெண்ணின் செக்ஸ் உணர்ச்சி நரம்புகள் இந்த பகுதியில்தான் உள்ளன. அதையும் கடந்து உள்ளே எவ்வளவு தூரம் சென்றாலும், பிரயோஜனமில்லை. எனவே, ஒரு பெண்ணின் செக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்ட, ஒரு ஆணுக்கு விறைப்படைந்த நிலையிலும்கூட 2 இன்ச் பிறப்புறப்பு போதும். ஆனால் இதைவிட அதிகமான நீளம்கொண்டதாகத்தான் உலகம் முழுக்க ஆண்களுக்கு பிறப்புறுப்பு அமைந்துள்ளது. எனவே ஆண் பிறப்புறுப்பு சிறியதாக உள்ளதா, பெரியதாக உள்ளதா என்பது உடலுறவில் ஒரு பிரச்னையே இல்லை.

முதலில் செக்ஸ் வெறும் உடல் சம்பந்தப்பட்டது என்பதே தவறான நம்பிக்கை. உடல்தான் செயல்படுத்துகிறது என்றாலும் செக்ஸ் மனது சம்பந்தப்பட்டது என்பதுதான் உண்மை. ஒரு பெண், ஒரு ஆணுடன் எந்த அளவுக்குப் பழகி, அவன் மேல் காதல் கொண்டு, எந்த அளவுக்கு அவன் மேல் விருப்பமும் ஆசையும் கொள்கிறாளோ அந்த அளவுக்குத்தான் அவள் உடலுறவின்போது திருப்தியடைகிறாள். ஒரு பெண் ஒரு ஆணின் மேல் காதலும் ஆசையும் திருப்தியும் அடைவது அவர்கள் இரண்டு பேருக்கும் இடையேயான பழக்க வழக்கங்களைப் பொறுத்துதான் உள்ளது. எனவே பெண்ணை திருப்திப்படுத்த விரும்பும் ஆண், அவள் தன்னை விரும்பும் விதமாக, அவளது ஆசைகளையும் விருப்பங்களையும் தெரிந்து நடந்துகொள்வதுதான் முக்கியமே தவிர, ஆண் பிறப்புறுப்பின் அளவு பற்றி கவலைப்படுவது தேவையில்லாதது. எனவே, மற்ற ஆண்களின் பிறப்புறுப்புடன் ஒப்பிட்டு தனக்கு மட்டும் சிறிதாக உள்ளது. தன்னை மட்டும் கடவுள் ஏமாற்றிவிட்டான் என்று கவலைப்படுவது தேவையில்லாதது. மூக்கு பெரிதாக இருக்கிறவர்கள் அதிக அளவு காற்றை உள்ளே இழுத்து நன்றாக சுவாசிக்கிறார்கள், மூக்கு சிறிதாக இருப்பவர்களால் அந்த அளவுக்கு நன்றாக சுவாசிக்க முடிவதில்லை என்பது எவ்வளவு கேலிக்குரியதோ அதுபோல்தான் இதுவும்.

சிறுநீர் கழிக்கும் இடங்களில் மற்ற ஆண்களின் பிறப்புறுப்பைப் பார்க்க நேரும். சில ஆண்கள் தனது பிறப்புறுப்பு அவர்களைவிட மிகச் சிறியதாக உள்ளதாக எண்ணுகின்றனர். இதுவும் தேவையில்லாத கவலை. பொதுவாக ஒரு பொருளை பக்கத்தில் பார்ப்பதற்கும் து}ரத்தில் பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. பக்கத்தில் பார்க்கும்போது சிறிதாக இருக்கும் ஒரு பொருளை தூர விலகி நின்று பார்க்கும் போது பெரிதாகத் தெரியும். இது ஒப்ரிக்கல் இல்யூஷன் (Optical Illusion)தான். மேலும் எல்லோருக்கும் ஒரே அளவு இருக்க வேண்டும் என்று அவசியமும் இல்லை.

போலி டாக்டர்களும் மருந்து தயாரிப்பவர்களும் இந்த பயத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் பயன்படுத்திக் கொண்டு ‘‘சிறு வயதில் செய்த கோளாறுகள் காரணமாக ஆணுறுப்பு சுருங்கி விடுகிறது’’ என்று மேலும் அதிகம் பயங்காட்டி காசு சம்பாதிக்கிறார்கள். ஆனால் 18 வயதுக்கு மேல் உடல் உறுப்புகளின் வளர்ச்சி நின்றுவிடுகிறது. அதற்குப் பிறகு சிறிதாகாது என்பதுதான் உண்மை. மேலும் எந்த மருந்து மாத்திரைகள் மூலமும் உடற்பயிற்சி மூலமும் ஆண் பிறப்புறுப்பை வளர்க்க முடியாது என்பதும் விஞ்ஞான ரீதியான உண்மை.

இதேநிலைதான் பெண்ணின் மார்பகங்களுக்கும். அது சிறிதாக இருப்பதற்கும் பெரிதாக இருப்பதற்கும் செக்சுக்கோ அல்லது குழந்தைக்கு பாலூட்டுவதற்கோ சம்பந்தமில்லை. ஒரு ஆண், அவள் மேல் எவ்வளவு ஆசையுடன் காதலுடன் நெருங்குகிறான் என்பதுதான் முக்கியம். நடிகைகள் சர்ஜரி செய்து கொள்வது சினிமாவின் காட்சி தேவைகளுக்காக. அதை ஒரு சாதாரணப் பெண் செய்ய வேண்டும் என்று அவசியமே இல்லை.

பொதுவாக இதுபோன்ற பயங்களும் தாழ்வு மனப்பான்மையும் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, அவர்களுக்கே அவர்கள்மீது நம்பிக்கை இல்லாமல் ஆகும்போதுதான் ஏற்படுகிறது. தன் உடலை காதலிக்க வேண்டும். என்ன இருக்கிறது என்பதல்ல, அதை நான் எப்படி பயன்படுத்திக் கொள்கிறேன் என்பதுதான் முக்கியம் என்கிற தன்னம்பிக்கை வேண்டும். இந்த இரண்டுடன், தன்னுடைய இணை மீது காதலும் விருப்பமும் சேர்ந்தால் போதும். பரிபூரண இன்பம் என்பதை யாராலும் தடுக்க முடியாது.

தொகுப்பு : தளவாய் சுந்தரம்,
நன்றி - குமுதம்