திங்கள், 23 ஜூலை, 2012

ஒரே ஒரு முறை உடல் உறவுவில் கர்ப்பம் சாத்தியமா?

ஒரே ஒரு முறைதான் உறவு கொண்டேன். அதற்குள் கர்ப்பமடைந்து விட்டேன். எப்படி இது சாத்தியம்?. இந்த சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. ஒரே ஒரு உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா?. முடியும் என்கிறார்கள் டாக்டர்கள்.

பல பெண்களுக்கு முதல் உறவிலேயே கருத்தரித்து விடுவது என்பது சகஜமானதுதான் என்பது டாக்டர்களின் கருத்து. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒரு பெண் வயதுக்கு வருகிறார் என்றால், அவர் கரு முட்டைகளை உற்பத்தி செய்யும் தகுதியை அடைந்து விட்டார் என்று அர்த்தம். ஒரு பெண் முதல் முறையாக கரு முட்டையை உற்பத்தி செய்யும்போது, 2 வாரம் கழித்து அவருக்கு முதலாவது மாத விடாய் வருகிறது.

இத்தகைய தகுதியை அடையும் பெண் கர்ப்பமடையும் தகுதியைப் பெற்றவராகிறார். கர்ப்பமடையும் ஒரு பெண்ணுக்கு எத்தனை முறை உடல் உறவு கொள்கிறார் என்பது அவசியமில்லை. மாறாக முதல் உறவிலேயே கூட அவரால் கர்ப்பமடைய முடியும். 

சிலருக்கு முதல் முறையிலேயே கருத் தரிக்கும். சிலருக்கு மூன்றாவது முறையில் கர்ப்பம் தரிக்கலாம். சிலருக்கோ 57வது முறைதான் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள் டாக்டர்கள். எனவே உடலுறவின் எண்ணிக்கைக்கும், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புக்கும் சம்பந்தம் இல்லை. முதல் உறவிலும் கருத்தரிக்கலாம், பல உறவுகளுக்குப் பின்னரும் கூட கருத் தரிக்கலாம் என்பதே நிதர்சனம்.

பொதுவாக ஒரு மாதத்தில், தொடர்ச்சியான முறையில் உறவு கொள்ளும் பெண்களில் 25 சதவீதம் பேர் கர்ப்பமடைகிறார்கள். 85 சதவீத பெண்கள், உறவு கொள்ளத் தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் குழந்தைப் பேறை அடைகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.

சிலருக்கு பாதுகாப்பற்ற முறையிலான, சுதந்திரமான உறவுகளை மேற்கொண்டும் கூட கர்ப்பம் தரிக்காமல் போகலாம். அதற்கு பல காரணங்கள் உள்ளன. சிலருக்கோ முழுமையான பாதுகாப்புடன் கூடிய உறவுகளிலும் கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு உண்டு. இவர்கள் கர்ப்பம் ஆக வேண்டாம் என்று தீர்மானித்தால் மிகவும் கவனத்துடன் கூடிய உறவுகளில் ஈடுபடுவது அவசியம்.

எனவே கர்ப்பம் தரிப்பது என்பது உடலுறவு எண்ணிக்கையில் இல்லை, பெண்களின் உடல் நலனுடன், கர்ப்பம் தரிக்கும் திறனுடன் சம்பந்தப்பட்டது என்பதே நிஜம்.

வெள்ளி, 20 ஜூலை, 2012

உயிர்--------12


ஒரு நபரிடம்இன்டர்வியூவை முடிக்க ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆனது. இந்த வேகத்தில் போனால், இந்த ஒற்றை ஆராய்ச்சியை முடிக்கவே தன் வாழ்நாள்போதாது என்பதை உணர்ந்த கின்ஸி மூன்று உதவியாளர்களை செலக்ட் செய்து, அவர்களுக்கும் பயிற்சி கொடுத்துத் தன்னைப்போலவே இன்டர்வியூ செய்ய சொன்னார்.

கின்ஸி ஒருநாளில்பதினாறு, பதினேழு மணி நேரம் உழைக்கிற டைப்.பல்கலைக்கழகத்துக்கு தேடிவரும் நபர்கள் குறைவாக இருந்ததால், அவர் அமெரிக்கா முழுக்க சுற்றி பலரைசந்தித்தார். குறிப்பாக சிறைக்கைதிகள். செக்ஸ் தொடர்பான குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்த பலரை அவர் சந்தித்து இன்டர்வியூ செய்தார். அதோடு ஆண்செக்ஸ் தொழிலாளர்களையும் விட்டு வைக்கவில்லை. அவரது டீம் எடுத்த மொத்தஇன்டர்வியூக்களில் இருபத்தைந்து சதவிகிதம் கைதிகளுடையது. ஐந்து சதவிகிதம் செக்ஸ்தொழிலாளிகளுடையது.


இது தவிர பலகல்லூரிகளுக்கு சென்று உரை நிகழ்த்துகிற பழக்கம் அவருக்கு இருந்தது. ஆனால், இந்த உரைகளுக்காக கட்டணம் எதையும் அவர்வாங்கியதில்லை. அதற்கு பதிலாக அதைக் கேட்கும் மாணவர் களையும் மற்றவர்களையும் வந்துதங்கள் அனுபவங்களைச் சொல்லும்படி அழைப்பு விடுத்தார்.

இவ்வளவுஅனுபவங்களையும் அவர் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்ட போதுதான் அமெரிக்கா பற்றிஎரிந்தது. அது தடிமனான புத்தகம்... சாதாரண ஆசாமிகள் படித்தாலே கொட்டாவி வருகிறஅளவுக்குக் கடினமான மருத்துவ பாஷை. பல பக்கங்களை புள்ளிவிவர வரைபடங்கள் அடைத்துக்கொண்டிருந்தன. இவ்வளவும் இருந்தும் அந்தப் புத்தகம் ஐந்து மாதங்களில் இரண்டுலட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. இதன் விற்பனை வேகம் அதிகரித்த அதே அளவுக்குஎதிர்ப்புகளும் அதிகரித்தன.
ஆனால், முரட்டுப் பிடிவாதக்காரரான கின்ஸி அசரவில்லை.ஆண்களை அம்பலப்படுத்திய அவர், அடுத்துக்குறிவைத்தது அமெரிக்க பெண்களை!
முந்தைய விவகாரம்அணுகுண்டு என்றால் இது ஹைட்ரஜன் குண்டு...

கின்ஸி, ஆண்களைப் போலவே அமெரிக்கப் பெண்களைப் பற்றியும்ஆராய்ச்சி செய்கிறார் என்ற தகவல் பரவியதும், நாடு முழுக்கப்பதற்றம் தொற்றிக் கொண்டது. தங்கள் தாயின், மனைவியின், மகள்களின் அந்தரங்க வாழ்க்கையை கின்ஸிகிளறுவதாகப் பலரும் உணர்ந்தனர். பெண்கள் இயக்கங்கள், சமூக அமைப்புகள், மதவாதிகள் என பலரும் அவருக்கு எதிராகக்கொடிபிடித்தனர்.

கின்ஸிவேலைபார்க்கும் இண்டியானா பல்கலைக்கழகத்துக்கு எதிராக அவர்கள் கொதிக்க, பல்கலைக்கழகத்தின் தலைவர் ஹெர்மன் வெல்ஸ்கவலையோடு கின்ஸியைக் கூப்பிட்டுப் பேசினார். இனிமேல் எந்தஆராய்ச்சி செய்தாலும் அதைப் புத்தகமாக வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அந்தக்
கல்விநிறுவனத்துக்கு அரசு வழங்கும் நிதியுதவியை ஒட்டுமொத்தமாக நிறுத்தவும் பலர் முயற்சிசெய்தார்கள்.

இண்டியானாகத்தோலிக்க பெண்கள் அமைப்பு, கின்ஸிக்குஎதிராகக் காட்டமாக அறிக்கை விட்டது. ஆராய்ச்சி என்றபெயரில் தப்புத்தப்பாக எதையோ செய்கிறார் கின்ஸி. இதனால் எங்கள் பெண்கள்கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது. அவர் அந்த ஆராய்ச்சியை நிறுத்திவிட்டு, பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால்தான்எங்கள் பெண்களை அங்கு படிக்க அனுப்புவோம் என்று அறிவித்தது, அந்த அமைப்பு. ஆனால், இதற்கு கின்ஸி அசரவில்லை. கடைசியில் போராட்டம்பிசுபிசுத்துப் போனது.

ஆனால், அவருக்கு அடுத்த சோதனை, அமெரிக்க கஸ்டம்ஸ் ரூபத்தில் வந்தது. செக்ஸ்தொடர்பான ஓவியங்கள், புத்தகங்கள், வரைபடங்கள் என பலவற்றை பல நாடுகளிலிருந்துவரவழைத்துத் தன் ஆராய்ச்சிக் கூடத்தில் வைத்திருந்தார்

கின்ஸி. 1950&ம் ஆண்டு அவரது ஆராய்ச்சிக் கூடத்தை அமெரிக்ககஸ்டம்ஸ் அதிகாரிகள் ரெய்டு செய்தனர். அவர் ஆபாசமான பொருட்களை சேகரித்துவைத்திருப்பதாகச் சொல்லி, எல்லாவற்றையும்அள்ளிக்கொண்டு போய்விட்டனர் (கின்ஸி பொங்கி எழுந்து கஸ்டம்ஸ் மீது வழக்குபோட்டார். ஏழு ஆண்டுகள் சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, ‘அவை ஆராய்ச்சி நோக்கில் கொண்டு வரப்பட்டவை.ஆபாச எண்ணம் இல்லை. அதனால் எல்லாப் பொருட்களையும் திருப்பிக் கொடுங்கள் என கோர்ட் உத்தரவிட்டது. அவை திரும்பிவரும்போது கின்ஸி உயிருடன் இல்லை!).

எரிவதைப் பிடுங்கினால்கொதிப்பது நிற்கும் என கணக்குப் போட்டனர், கின்ஸிக்கு எதிரானவர்கள். இந்த ஆராய்ச்சிக்குநிதியுதவி செய்யும் ராக்ஃபெல்லர் அறக்கட்டளைக்கு எதிராகவும் அவர்கள் பிரச்னை செய்ய, அந்த அறக்கட்டளை கின்ஸியின் ஆராய்ச்சிக்குநிதியுதவி தருவதை நிறுத்தியது. ஆனால், அதற்குள் கின்ஸிஆராய்ச்சியை முடித்துவிட்டார்.

சுமார் ஆறாயிரம்பெண்களிடம் இன்டர்வியூ செய்து முடித்த அவரது குழு, புத்தகத்தைத்தயாரிக்கும் வேலையில் இறங்கியது. ஆனால், அதற்குவேட்டுவைக்கும் விதமாக ஒரு காரியம் நடந்தது. கின்ஸி தனதுஆராய்ச்சியை முடித்து விட்டார். அவரது கணிப்பின்படி பல பெண்கள் விதம்விதமான தப்புசெய்கிறார்கள். அமெரிக்க பெண்களின் மோசமான நடத்தை பற்றி ஷாக் தகவல்கள் அடங்கியஅவர் புத்தகம் விரைவில் வரப் போகிறது என்கிறரீதியில்பயங்கரமான யூகங்களை பல பத்திரிகைகள் விதம்விதமாக அள்ளிவிட்டுக் கொண்டிருந்தன.இப்படி ஒவ்வொரு செய்தி வரும்போதும் பெண்கள் அமைப்புகள் கோபத்தில் கொதித்தன.

இதை இப்படியேவிட்டால், தன் புத்தகமே வரவிடாமல் செய்து விடுவார்கள்என்பதை உணர்ந்த கின்ஸி, முன்னணிப் பத்திரிகைகளின்நிருபர்களை ஒருநாள் தன் ஆராய்ச்சிக் கூடத்துக்குக் கூப்பிட்டார். ஆராய்ச்சி முடிவுகளை உங்களிடம் வெளிப்படையாகச்சொல்கிறேன். அதற்கான ஆதாரங்களையும் நீங்கள் பார்க்கலாம். இதை அடிப்படையாக வைத்துநீங்கள் அதிகபட்சம் ஐயாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை எழுதிக் கொள்ளலாம்.ஆனால், புத்தக ரிலீ்ஸுக்கு ஒருநாள் முன்னதாகத்தான்உங்கள் கட்டுரை வெளியாக வேண்டும் என நிபந்தனைகளைவிதித்தார். உஷாராக அதை அப்படியே ஒரு ஒப்பந்தமாக டைப் அடித்து அவர்களிடம்கையெழுத்தும் வாங்கிக் கொண்டார். அதன்பிறகே பத்திரிகைகள் அந்த ஆராய்ச்சி பற்றியயூகங்களை எழுதுவதை நிறுத்தின.

1953&ம் ஆண்டு செப்டம்பர் 14&ம் தேதி. ‘Sexual behaviour in Human Female’’என்ற அந்தப் புத்தகம் வெளிவந்தது. பெண்களும் திருமணத்துக்கு முன்பே செக்ஸ்அனுபவங்களைத் தேடுகிறார்கள். திருமணமான அமெரிக்க பெண்களில் இருபத்தைந்து சதவிகிதம்பேர் தங்கள் கணவனுக்கு உண்மையாக இல்லை. திருமண பந்தத்துக்கு வெளியே அவர்கள் வேறுயாரோ ஓர் ஆணுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்றஅதிரவைக்கும் உண்மையை சொன்னது, அந்தப் புத்தகம்.அதோடு மட்டுமில்லை... அமெரிக்க பெண்களில் 62சதவிகிதம் பேர் திருமணத்துக்கு முன்போ, திருமணமானபின்னரோ சுயஇன்பம் அனுபவித்து இருக்கிறார்கள். கணிசமானவர்கள் இதைத் தொடர்ச்சியானபழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஓரினச்சேர்க்கையில் நாட்டமுள்ள பெண்களும் நிறையபேர் உண்டு என்பதையும்அம்பலப்படுத்தினார் கின்ஸி. குறிப்பாக, அதிகம் படித்தபெண்கள்தான் விதம்விதமான செக்ஸ் அனுபவங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றார்கின்ஸி. சுயஇன்பம் அனுபவிக்க அவர்கள் பயன்படுத்திய முறைகள் குறித்தும் கின்ஸிசதவிகித வாரியாக பட்டியலிட்டு விலாவாரியாக எழுதியிருக்க, அமெரிக்க சமூகம் கோபத்தின் உச்சிக்கே போனது.அமெரிக்கா மட்டுமில்லை... அவரது ஆராய்ச்சி முடிவுகள் பல நாடுகளுக்கும் போக, அமெரிக்க மக்கள் தாங்கள் அவமானப்படுவதாகஉணர்ந்தனர். புகழ்பெற்ற பிரிட்டன் பத்திரிகையான தி பீப்புள்’& கின்ஸியின் புத்தகம் வெளியானதும் அவசரமாக ஒருசர்வே எடுத்தது. பதினெட்டு முதல் ஐம்பது வயது வரையிலான பிரிட்டன் பெண்கள் ஆயிரம்பேரிடம் எடுக்கப்பட்ட சர்வே அது! தனது சர்வே முடிவுகளை வெளியிட்ட அந்தப் பத்திரிகை, ‘அமெரிக்க பெண்களைப் போல பிரிட்டன் பெண்கள்மோசமானவர்கள் இல்லை. நம் பெண்கள் இன்னமும் ஒழுக்கத்தோடுதான் இருக்கிறார்கள்.குடும்ப அமைப்பு, கற்புநெறி போன்றபாரம்பரியமான மதிப்பீடுகள் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். கணவனுக்குவிசுவாசமாக இருக்கிறார்கள். திருமணமாகாத பெண்கள் கன்னித்தன்மையைக் காக்கிறார்கள் என்று எழுதி, எரிகிறஅமெரிக்கக் கொள்ளியில் எண்ணெய் வார்த்தது.

புதன், 11 ஜூலை, 2012

உயிர்--------11


கர்ப்பம்’ - இந்த வார்த்தையை உச்சரிக்கவும், ஒரு கர்ப்பிணியை டி.வி-யில் காட்டவும்அமெரிக்காவில் தடை இருந்தது. லூசில்லே பால் அமெரிக்காவின் புகழ்பெற்ற டி.வி.நடிகை. கடந்த 53-ம் ஆண்டு இவர் தயாரித்து நடித்த ஐ லவ் லூசி என்ற தொடர் பரபரப்பாக போய்க் கொண்டிருந்தபோதுஇவர் கர்ப்பமானார். தொடரை நிறுத்த விரும்பாமல், இவரது கேரக்டரேகர்ப்பமாவது மாதிரி கதையை மாற்றினார் டைரக்டர். ஆனால், ‘கர்ப்பம் என்ற வசனமும், கர்ப்பிணியின் திரைத் தோற்றமும் ஆபாசமானதுஎன்று தடை செய்தார்கள் டி.வி. நிலையத்தினர். பாதிரியார்கள், யூத மதகுருக்கள் பலரை சந்தித்து, ‘கர்ப்பம் என்பது ஆபாசமான விஷயம் இல்லை. இது மதநம்பிக்கைகளுக்கு எதிரானதும் இல்லை. இதை தாராளமாக டி.வி-யில் காட்டலாம் என லூசில்லே பால் விளக்கம் கொடுத்தார். இதைதொடர்ந்து லூசில்லேவுக்கு ஆதரவாக கருத்து சொன்னார்கள் - பாதிரியார்களும் மதகுருமார்களும். இதன்பின் லூசில்லே கர்ப்பிணியாக தோன்றுவதற்கு அனுமதித்த டி.வி.நிலையம், ‘கர்ப்பம் என்ற வசனத்தைமட்டும் சென்ஸார் செய்துவிட்டது. அதற்கு பதிலாக, ‘நான்எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன் என்ற வசனத்தைபயன்படுத்தச் சொன்னது. அதை திக்கித் திக்கி பேசி காமெடி ஆக்கினார் அவர். உலகிலேயேடி.வி-யில் தோன்றிய முதல் கர்ப்பிணி அவர்தான்!

கிட்டத்தட்டபதினான்காயிரம் ஆண்களிடம் இன்டர்வியூ நடத்தி, அவர்களதுபழக்கவழக்கங்களைத் தொகுத்து, ஆண்களின் செக்ஸ்பழக்கம் எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் ஒரு புத்தகத்தை எழுதினார், டாக்டர் ஆல்ஃபிரட் சார்லஸ் கின்ஸி. ‘Sexual behaviour in HumanMale’ என்ற அந்தப் புத்தகம்1948-ல் வெளிவந்தது.

கின்ஸி அதில்சொல்லியிருந்த எல்லாமே வெடிகுண்டு சமாசாரங்கள். புத்தகம் வெளியான அடுத்த நொடி, அமெரிக்காவே பற்றி எரிந்தது.

நான் பேசிய அத்தனைஆண்களில் 95 சதவிகிதம் பேர் வாழ்க்கையில் ஒரு தடவையாவது சுயஇன்பம் அனுபவித்ததாகஒப்புக்கொண்டார்கள். மீதி ஐந்து சதவிகிதம் பேர் அவசரமாக, ‘சேச்சே! எனக்கு அப்படி எந்த பழக்கமும் இல்லை என்று மறுத்தார்கள். அநேகமாக, அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்றுதான் எனக்குத்தோன்றுகிறது’.
அதேபோலவே ஆண்களில்பெரும்பாலானவர்கள் ஓரினச் சேர்க்கை எப்படிப்பட்ட உணர்வுகளைத் தரும் என ஒருதடவையாவது முயற்சித்துப் பார்த்ததாகச் சொன்னார்கள். இதுதவிர, அமெரிக்க ஆண்களில் பத்து சதவிகிதம் பேர்பெரியவர்கள் ஆனதும், ஓரினச்சேர்க்கைப்பிரியர்களாக இருக்கிறார்கள்.

ஆண்களில் எண்பத்தைந்துசதவிகிதம் பேர் கல்யாணத்துக்கு முன்பே செக்ஸ் உறவை அனுபவித்து இருக்கிறார்கள்.தங்கள் மனைவி கற்போடு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் இவர்கள் அப்படி இல்லை.

முப்பது முதல்நாற்பத்தைந்து சதவிகித ஆண்கள் திருமணத்துக்குப் பிறகு மனைவியைத் தவிர வேறுபெண்களோடு உறவு வைத்திருக்கிறார்கள்.
& யாருக்கும் தெரியக்கூடாது என்று மனசுக்குள் பொத்திப் பொத்தி வைத்திருந்த அழுக்கான ரகசியங்கள் வெளியேதெரிந்தால் அளவிட முடியாத கோபமும், அதிர்ச்சியும்பொங்கி வழியும்! அப்படித்தான் ரியாக்ட் செய்தது அமெரிக்க சமுதாயம்.

இப்போதுபோலஅமெரிக்கர்கள் அப்போது எதையும் டேக் இட் ஈஸி என அலட்சியப்படுத்தும் மனோபாவத்தில் இல்லை.இரண்டாம் உலகப் போர் அப்போதுதான் முடிந்திருந்தது. போரில் லட்சக்கணக் கானவர்கள்இறந்து போயிருக்க, குடும்பப் பிணைப்பு, அன்பு, பாசம் என எல்லாஉணர்வுகளும் உச்சத்தில் இருந்த நேரம் அது!
அதோடுகாலம்காலமாக செக்ஸ் விஷயத்தில் மதம் புகுத்திய கட்டுப்பாடுகள் தளராமல் அப்படியேஇருந்துவந்தது. செக்ஸைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதே பாவ காரியமாக கருதப்பட்டநேரம் அது! கணவனுக்கும், மனைவிக்கும் இடையே நிகழும் தாம்பத்ய உறவைத்தவிர, யாரும் எதையும் தப்பாக செய்வதில்லை... சமுதாயம்நேர்மையான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது என பொதுவானநம்பிக்கை இருந்த காலம்!

அந்த சமயத்தில்போய் அவர்களின் அசிங்கமான மறுபக்கத்தை அம்பலப்படுத்தி, ‘உங்கள் புருஷன் கல்யாணத்துக்கு முன்பும் சரி, பின்னாலும் சரி, உங்களிடம்உண்மையாக இல்லை. அது மட்டுமில்லை... அவர் சுய இன்பம் அனுபவித்தார். ஓரினச்சேர்க்கை அனுபவத்துக்கும் அவர் ஆசைப்பட்டார் என்று சொன்னால்எப்படி இருக்கும்?
அமெரிக்காவேஆத்திரத்தில் பொங்கியது. கின்ஸிசெய்திருக்கும் வேலை அமெரிக்காவில் குடும்ப அமைப்பையே சிதைத்துவிடும். அவர்ஒழுக்கக் கேட்டை பரப்புகிறார். காலம்காலமாக இருந்துவரும் ஒழுக்க மதிப்பீடுகளை ஒரேநொடியில் தகர்த்துத் தரை மட்டமாக்கி விட்டார். இளைய சமுதாயத்தைத் தவறான பாதையில்திருப்பி விடுகிறார். கலாசார சீரழிவை தொடங்கி வைக்கிறார் என்றெல்லாம் அவரைத் திட்டினார்கள். அவர் இறந்துஐம்பது வருஷங்கள் ஆகின்றன. ஆனால், இன்னமும்கூடஅவரைத் திட்டுபவர்கள் உண்டு. குழந்தைகளைக்கூட சிதைக்கும் செக்ஸ் வக்கிரம், எய்ட்ஸ் என்ற எமன்... இப்படி அமெரிக்காவைஇப்போது அச்சுறுத்தும் பல விஷயங்களுக்கும் அவரைக் குற்றம்சாட்டும் மனோபாவம்குறிப்பிட்ட சதவிகித மக்களிடம் இருக்கிறது.

கின்ஸி, அடிப்படையில் ஒரு விலங்கியல் ஆராய்ச்சி யாளர்.அவர் செக்ஸைப் பற்றி ஆராய வந்ததே தனிக் கதை. பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே அவரைஈர்த்த விஷயம் அது! பள்ளியில் அவர் சாரணர் படையில் சேர்ந்தார். அதில் சேரும்விடலைப் பள்ளிப் பையன்களுக்கு ஒரு ஒழுக்கக் கையேடு கொடுப்பார்கள். அதில் ஒரு பாராஅவரைக் குழப்பியது.

மீசை அரும்பும்வயதில் பையன்கள் தப்பான வழிகளில் போகக் கூடாது என்பதற்காக கொடுக்கப்படும் கையேடுஅது! அதில், ‘பையன்கள் விடலைப்பருவத்தைத் தொடும் சமயத்தில் கடவுள் அவர்களுக்கு ஓர் அற்புதமான திரவத்தைப்பரிசாகக் கொடுப்பார். அது அவர்கள் உடம்பில் சுரக்க ஆரம்பிக்கும். அவர்கள்வேகமாகவும், உயரமாகவும் வளர்ந்துதிடகாத்திரமான வாலிபன் ஆவதற்கு, இந்தத்திரவம்தான் உதவுகிறது. அதை எந்த வழியிலும் வீணாக்காமல் பத்திரமாக சேமித்துவைத்தால், மட்டுமே அவர்கள் வளரமுடியும். அதை வீணாக்குபவர்களைகடவுள் தண்டித்து விடுவார் என்றிருந்தது.

வளர்ந்துகல்லூரிக்குப் போனபிறகு அதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார் கின்ஸி. ஆனால், விலங்குகளின் செக்ஸ் உறுப்புகள், பழக்கங்கள் பற்றிய புத்தகங்கள்தான் அவருக்குக்கிடைத்தன. மனிதர்கள் பற்றிய புத்தகங்களைத் தேடிய அவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

ப்ளூமிங்டன்நகரில் இருக்கும் இண்டியானா பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பேராசிரியராக வேலைக்குசேர்ந்தபிறகு, அவர் தனது பாடத்துக்குவெளியிலும் ஆர்வம் காட்டத் தொடங்கினார். திருமணம் மற்றும்குடும்ப உறவு என்ற தலைப்பில் செக்ஸ்உணர்வுகள் பற்றி அவர் கொடுக்கும் உரை, இண்டியானாபல்கலைக்கழகத்தில் ரொம்ப பாப்புலர். மாணவர்கள் மட்டுமின்றி, வெளிநபர்களும்கூட வந்து கேட்குமளவு அவரது உரைசுவாரஸ்யமானது. தனது உரையைக் கேட்க வருகிறவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசிஅவர்களது செக்ஸ் அனுபவங்களை விசாரிப் பார் கின்ஸி. அப்போதுதான் அவருக்கு அந்தஉண்மை புரிந்தது. முறைகேடான செக்ஸ் உறவுகள் பற்றி மக்கள் நினைப்பதற்கும், நிஜமாக நடப் பதற்கும் இடையே ஏகப்பட்ட இடைவெளிஇருந்தது.

ராக்ஃபெல்லர் அறக் கட்டளை அப்போது செக்ஸ் தொடர்பான ஆராய்ச்சி களுக்குநிதியுதவி செய்து கொண்டிருந்தது. தனது ஆராய்ச்சி குறித்து அந்த அறக் கட்டளைக்குஎழுதி நிதியுதவி கேட்டார் கின்ஸி. உடனே அது கிடைத்தது. பல்கலைக்கழகத்தின் தலைவர்ஹெர்மன் வெல்ஸ் அனுமதி கொடுக்க, ஆராய்ச்சியைஆரம்பித்து விட்டார் கின்ஸி. 1938&ம் ஆண்டுதொடங்கிய அந்த ஆராய்ச்சி அவர் இறக்கும் வரை தொடர்ந்தது.


கின்ஸியின்ஆராய்ச்சி,மாஸ்டர்ஸ் செய்ததைப் போலபரிசோதனைக்கூட செக்ஸ் இல்லை. அவரது காலத்தில் அதைச் செய்திருக்கவும் முடியாது.அவர் மனிதர்களின் செக்ஸ் மனோபாவத்தை அம்பலப்படுத்த விரும்பினார். அதனால் முழுக்கஇன்டர்வியூக்கள்தான்!

அதற்கு முன்நடந்த செக்ஸ் சர்வேக்கள் வேறுவிதமாக இருந்தன. ஆராய்ச்சியாளர் ஆணாக இருந்தால், பெண்களை முகத்துக்கு நேரே பார்த்து அந்தரங்கமானகேள்விகள் கேட்க கூச்சப்படுவார். ஆண்களிடமே ஆண்கள் கேட்கத் தயங்கும்சந்தர்ப்பங்களும் உண்டு. இதற்காக பொத்தாம் பொதுவாகக் கேள்விகள் அடங்கிய ஒருபடிவத்தைக் கொடுத்து, அதில் டிக் அடிக்கச்சொல்வார்கள். இப்படி பலரும் டிக் அடித்துக் கொடுக்கும் படிவங்களை வைத்துஆராய்ச்சி இறுதி செய்யப்படும்.

ஆனால், கின்ஸிக்கு இந்த டைப் ஆராய்ச்சியில் விருப்பம்இல்லை. அவர் ஒவ்வொருவரையும் முகத்துக்கு நேரே பார்த்துக் கேள்விகள் கேட்டு தகவல்திரட்ட விரும்பினார். இப்படிப்பட்ட நேரடி இன்டர்வியூக்களில் யாரும் பொய்சொல்லமாட்டார்கள் என அவர் நம்பினார். மொத்தம் 521 கேள்விகள் அடங்கிய படிவத்தை அவர்வடிவமைத்தார். அதில் முந்நூறு கேள்விகள் செக்ஸ் தொடர்பானவை... மற்றவை, தகவல் கொடுப்பவர் பற்றிய தகவல் குறிப்புகள்.தகவல் தரும் யாருடைய பெயரையும் அவர் பதிவு செய்யவில்லை. வயது, இனம், தொழில், குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேர்... என்கிறமாதிரி தகவல்களாகத்தான் அவை இருக்கும். இப்படி ரகசியம் காக்கப்படும் என நம்பினால்தான்அவர்கள் உண்மை பேசுவார்கள் என்பது கின்ஸிக்கு தெரியும் (இண்டியானாபல்கலைக்கழகத்தில் கின்ஸி ஆராய்ச்சி நடத்திய மையம் இன்னமும் கின்ஸி செக்ஸ், பாலினம் மற்றும்மகப்பேறு ஆராய்ச்சி நிலையம் என்ற பெயரில்இயங்கிவருகிறது. அங்கு இந்த எல்லா படிவங்களும் பொக்கிஷம் போலபாதுகாக்கப்படுகின்றன. யார் வேண்டுமானாலும் போய் இவற்றைப் படிக்கலாம்).