வெள்ளி, 29 ஜூன், 2012

உயிர்----10


தம்பதிகளாக வருகிறவர்களுக்குஇரண்டு வார சிகிச்சை ஓகே! திருமணமாகாத ஒருவரோ, மனைவியை இந்தபிரச்னையால் பிரிந்து தனியாக வாழும் நிலையிலிருக்கும் ஆணோ இந்த சிகிச்சைக்குவந்தால் என்ன செய்வது? இதற்காகவே செவிலித் துணை’ ((surrogate partner ) என்ற புதிய சிகிச்சையை அவர் ஏற்படுத்தினார்.


இதற்காகமாஸ்டர்ஸ் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து சில பெண்களையும், ஆண்களையும் தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சிகொடுத்தார். இந்த தொழிலுக்கு வரும் அவர்கள் திருமணம் ஆகாதவர்களாக இருக்க வேண்டும்அல்லது விவாகரத்து பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது அவர் விதித்த நிபந்தனை.

பிரச்னையோடுஒருவர் வந்தால் அவரிடம் டாக்டர் முதலில் விசாரிப்பார். அவருக்கு செக்ஸைஆரம்பிப்பதில் பிரச்னையா, ஆரம்பத்தில்கிளர்ந்த உணர்வுகளை அப்படியே நிலை நிறுத்துவதில் பிரச்னையா, அல்லது உச்சகட்ட இன்பம் கிடைக்கவில்லையா, வழக்கமில்லாத வலி ஏதாவது ஏற்படுகிறதா என்றுவிசாரிப்பார். அதன்பிறகு செவிலித் துணையை அழைத்து அவரை அந்த கிளையன்ட்டுக்குஅறிமுகம் செய்து வைப்பார் டாக்டர். அவருக்கு என்ன பிரச்னை... செவிலித் துணை என்னசெய்ய வேண்டும் என்பதை விளக்கமாக சொல்லி விடுவார்.

அதன்பிறகுடாக்டர் இல்லாமல் அவர்கள் சந்தித்துக் கொள்வார்கள். ஒவ்வொரு முறையும் இரண்டு மணிநேர பயிற்சி. முதலில் படுக்கை அறைக்கு ரிலாக்ஸாக போக உதவும் சில எளிமையானஉடற்பயிற்சிகள் சொல்லித் தரப்படும். பிறகு தன் அந்தரங்க பாகங்கள் எப்படிஇருக்கிறது என்பதை தன் உடலில் காட்டி விளக்கு வார் செவிலித் துணை. அதன்பிறகுசும்மா தொட்டுக் கொள்வதிலேயே எப்படி உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவது என்று பயிற்சி.இந்த பயிற்சிக்குள் இருவருமே அந்தரங்க மாக பேசிக் கொள்ளுமளவுக்கு நெருக்கமாகிவிடுவார்கள். நெருக்கம்தானே உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதில் பிரதான பங்குவகிக்கிறது!

இந்த எல்லாம்முடிந்த பிறகு கடைசியாகத்தான் ஆடைகளற்ற உறவு. எல்லாமே ஏழெட்டு தடவை நிகழும்சந்திப்புகளுக்குள் நடந்து முடிந்து அவரது பிரச்னை தீர்ந்துவிடும். மிகச் சிலருக்குமட்டுமே இன்னும் கொஞ்ச காலம் பிடிக்கும். (என்னிடம் வந்தஒருவருக்கு 52 தடவை பயிற்சி கொடுத்த பிறகுதான் பிரச்னை தீர்ந்தது என்று லிண்டா போயல்ட்ஸ் என்ற செவிலித் துணை தன்அனுபவக் கதைகளை எழுதும்போது குறிப்பிட்டு இருந்தார். அநேகமாக இவர்தான் அதிக நேரம்எடுத்துக் கொண்ட நபராக இருக்கும்!).

கொஞ்சம் மருத்துவஅறிவு, உளவியல் மற்றும் சமூகவியல் படிப்பு, சுமாரான அழகு, செக்ஸில் ஈடுபாடு, அன்பாக பழகும் குணம் இவை இருக்கும் யாரையும்இப்படி செவிலித் துணையாக பயன்படுத்தி பிரச்னைகளைத் தீர்க்கலாம் என்று நம்பினார்மாஸ்டர்ஸ்.

ஆனால், அவருக்கும் சறுக்கியது. அவரிடம் பயிற்சி பெற்றுசெவிலித் துணையாக பணிபுரிந்த ஒரு பெண் தன் கணவரை விவாகரத்து செய்துவிட்டே இந்தவேலைக்கு வந்ததாக சொன்னார். ஆனால், அது உண்மையில்லை.இருவருக்குள் ஏதோ சண்டை. கோபித்துக் கொண்டு பிரிந்த அந்த பெண் அப்படியே இந்தவேலைக்கு வந்துவிட்டார்.
திரும்பவும்மனைவியைத் தேடிக் கொண்டு வந்த அவருடைய கணவர், தன் மனைவிசெய்யும் வித்தியாச மான வேலையைப் பற்றிக் கேள்விப்பட்டு ஷாக் ஆகி கோர்ட்டில்வழக்கு போட்டு விட்டார். என் மனைவிக்குமாஸ்டர்ஸ் தப்பான அட்வைஸ் கொடுத்து, அவளைக்கட்டாயப்படுத்தி பல ஆண்களோடு பழகச் சொல்கிறார். படுக்கைக்கு அனுப்புகிறார் என அவர் வழக்கு போட, அமெரிக்காவே அதிர்ந்தது. இப்படிக் கூடவா சிகிச்சை தருவார்கள்?’ என பலர் முகத்தை சுளித்தனர்.

மாஸ்டர்ஸின்வழக்கறிஞர்கள் அட்வைஸ் செய்தபோதுதான் இதன் விபரீதம் அவருக்கு புரிந்தது. ‘‘இது சிகிச்சை என்று நீங்கள் சொல்லலாம் ஆனால், சட்டம் இதை அனுமதிக்கவில்லை. உங்கள் பார்வையில்இது சிகிச்சை... சட்டத்தின் பார்வையில் இது கிட்டத்தட்ட விபசாரம். வழக்கு நடந்தால்நமக்கு தோல்வி கிடைக்கும். கோர்ட்டுக்கு வெளியே சமாதானம் பேசி செட்டில் செய்துகொள்ளுங்கள்’’ என்றனர் அவர்கள். அந்ததம்பதிக்கு பெரும் தொகை கொடுத்து வழக்கை வாபஸ் பெறவைத்து நிம்மதிப் பெருமூச்சுவிட்டார் மாஸ்டர்ஸ்.

இந்த சிகிச்சையில்கொள்கைரீதியாக எனக்கு உடன்பாடு இல்லை என்று சொல்லிஅதோடு இதை நிறுத்திக் கொண்டார் அவர்.

எந்த செக்ஸ்நிபுணரும் மாஸ்டர்ஸின் இந்த பரிசோதனை முயற்சியை ஏற்கவில்லை. இதெல்லாம் அபத்தம். சமூக நியதிக்கு எதிரானது என கண்டித்து இந்தவகை சிகிச்சையை நிராகரித்துவிட்டார்கள். சட்டப்படியும் இதற்கு தடை போடப்பட்டு விட்டது.

ஆபாச அலையைவளர்த்தவர்... சமூகம் கெட்டுப் போவதற்கு காரணமானவர்... ஒழுக்கக்கேட்டைத்தூண்டியவர்... இப்படி பல பெயர்களைச் சூட்டி மாஸ்டர்ஸை அமெரிக்காவில் ஒரு குழுவினர்திட்டினாலும் கலிலியோ, டார்வின் போன்றஅறிஞர்களுக்கு நிகராக அவரை மதிக்கும் பலர் அங்கே உண்டு. ஆனால், கின்ஸியோடு ஒப்பிடும்போது - மாஸ்டர்ஸ் சந்தித்தஎதிர்ப்புகள் ரொம்ப குறைவு. மாஸ்டர்ஸ் ஆராய்ச்சியை நடத்துவதற்கு பல ஆண்டுகளுக்குமுன்பே அமெரிக்க சமூகத்தின் ஒழுக்கக்கேட்டை அம்பலப்படுத்திய கின்ஸி, தினம் தினம் நரக வேதனையை அனுபவித்தார்...


77 வயதில்திருமணம்!

மாஸ்டர்ஸ்ஏற்கெனவே திருமணமானவர். வர்ஜீனியா ஜான்சனும் ஏற்கெனவே திருமண பந்தத்தில்இருந்தவர். ஆனால், மாஸ்டர்ஸ§ம் வர்ஜீனியா ஜான்சனும் பல வருடங்களாக இணைந்துசெக்ஸ் பற்றி செய்த ஆராய்ச்சி, அவர்களுக்குள்நெருக்கத்தை ஏற்படுத்தி விட்டது. தங்கள் முதல் துணைகளை இருவருமே விவாகரத்துசெய்துவிட்டு, 1969-ம் ஆண்டு திருமணம்செய்து கொண்டனர். அப்போது மாஸ்டர்ஸ§க்கு 53 வயது.அதன் பிறகு 23 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த அவர்கள், கடந்த 92-ம்ஆண்டு விவாகரத்து செய்து கொண்டு பிரிந்த னர். அதோடு அவர்களது ஆராய்ச்சி, சிகிச்சை எல்லாமே முடிவுக்கு வந்துவிட்டது. ‘‘செக்ஸ் ஆராய்ச்சி செய்து பல குடும்பங்களில்படுக்கை அறையில் சந்தோஷம் நிலவ காரணமான ஜோடி இது. இவர் களாலேயே சேர்ந்து வாழமுடியவில்லை என்றால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்? திருமண அமைப்பின்மீதே சந்தேகம் வரும் அல்லவா?’’ என அப்போது பலசெக்ஸ் நிபுணர்கள் வெளிப்படையாகவே கவலைப்பட்டார்கள். ஆனால், அந்த 77 வயதில் மூன்றாவதாக ஜெரால்டின் என்றபெண்மணியைத் திருமணம் செய்து கொண்ட மாஸ்டர்ஸ் 85 வயதில் இறக்கும் வரை அந்தப்பெண்ணோடு வாழ்ந்தார்.

நம்ப முடியாதஉண்மை!

திங்கள், 25 ஜூன், 2012

உயிர்-----9


இதற்கு என்றும், பெண்களை கிளர்ச்சியற்ற தன்மை உள்ளவர்கள்' எனவும் வகை பிரித்திருந்தனர். சிகிச்சையும்அவர்களுக்கு ஒரே முன்புவரை செக்ஸ் பிரச்னைகளுக்கு ஒரே பெயர்தான். பிரச்னையுள்ள ஆண்களை ஆண்மையற்ற வர்கள் விதமானதுதான். காரில் நான்கு டயர்கள். அதில் ஏதாவது ஒன்றுபஞ்சராகி இருக்கும். பஞ்சரை ஒட்டாமல் நான்கு டயர்களுக்கும் சும்மா காற்றடித்துக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? அந்த மாதிரிதான்செய்தார்கள். அதனால் பலனும் இல்லாமல் போனது. இப்போது இந்த இரண்டு வார்த்தைகளும்செல்லாதவை ஆகிவிட்டன.

உலகம் முழுக்கஇனம், நிறம், நாடு, மொழி என பலவிதங்களில் மனித இனம்வித்தியாசப்பட்டு இருந் தாலும் அவர்கள் எல்லோருக்கும் செக்ஸைப் பொறுத்தவரை ஒரேமாதிரியான உணர்வுகளே இருக்கும். இதில் ஒருவருக்கு பிரச்னை என்றால் ஒட்டுமொத்தமாகவேஅவருக்கு எல்லாம் முடியாமல் இருக்க முடியாது. சிலருக்கு செக்ஸ் ஆசையில் தான்பிரச்னை இருக்கும். ஆசை அதிகமாக இருக் கும் அல்லது குறைவாக இருக்கும். சிலருக்குஉணர்ச்சிவசப்பட்ட தன்மையை அப்படியே நிலைநிறுத்தி பரவசநிலைக்கு போக முடியாமல்இருக்கும். சிலருக்கு பரவச நிலையில் பிரச்னை இருக்கும். துரித ஸ்கலிதம் ஆகிவிடும்.அவரை விசாரித்து இந்த நான்கில் எந்த கட்டத்தில் அவருக்கு பிரச்னை என்று கேட்டு, அதற்கு தகுந்த சிகிச்சை கொடுத்தால் போதும்...பிரச்னை தீர்ந்துவிடும் என்பது இந்த ஜோடி சொன்ன விஷயம்.

ஹெலன் சிங்கர்கெப்ளான் என்ற உளவியல் நிபுணர், ‘‘எல்லாம் சரி...ஆசையை விட்டுட்டீங்களே! மனதில் ஆசை இல்லாமல் இரண்டு பேருக்கு மத்தியில் உறவுநடந்தால் அதில் பரவச நிலை வராது. அந்த ஆசையை மாஸ்டர்ஸ் முழுமையாக தன்ஆராய்ச்சியில் புறக்கணித்து விட்டார்’’ என்றுவேகப்பட்டார்.

ஆனால், இந்த வகை சிகிச்சையில் செக்ஸ் தொடர்பானபிரச்னைகளில் 99 சதவிகிதத்துக்கு தீர்வு இருக்கிறது என்ற மாஸ்டர்ஸும், வர்ஜினியா ஜான்சனும் இதற்காக ஒரு மையத்தையும்தொடங்கினர். அங்கு அவர் தந்த ஒரு அதிரடி சிகிச்சை இன்னும் பலத்த சர்ச்சையைஏற்படுத்தியது.

அது...தாயால்வளர்க்க முடியாத குழந்தையை செவிலித் தாய் வளர்ப்பது மாதிரி, செக்ஸ் அனுபவிப்பதில் பிரச்னை உள்ள ஆண்களுக்குசெவிலித் துணையாக பெண் ஒருவரை அனுப்பி படுக்கையில் செக்ஸை கற்றுத்தரும் சிகிச்சை.

இதில்தான்வாழ்க்கையில் பெரும் எதிர்ப்பை சந்தித்தார் மாஸ்டர்ஸ்.


வரலாற்றில்முதல்முறையாக பரிசோதனைக் கூடத்தில் செக்ஸை நிகழ்த்த வைத்து, அதில் ஆராய்ச்சிகள் செய்த கையோடுசிகிச்சையிலும் இறங்கினார் மாஸ்டர்ஸ். ஆராய்ச்சி நடந்த அதே செயின்ட் லூயிஸ் நகரில்கடந்த 70-ம் ஆண்டு அவரது மருத்துவ மனை துவங்கியது. அங்கு செக்ஸ் குறைபாடுகளுக்குஅவர் தந்த இரண்டு வார சிகிச்சை, பயங்கர பாப்புலர்ஆனது.

‘‘ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ படுக்கையில் செக்ஸ் உணர்வுஇயல்பாகவே கிளர்ந்தெழும். ஆனால், ஏதோ ஒருகுறுக்கீடு ஏற்படும் போதுதான், அதில் குறைபாடுஏற்படுகிறது. அதற்கு சமூகம் காரண மாக இருக்கலாம். மதம் காரணமாக இருக்கலாம்.அனுபவங் கள் காரணமாக இருக்கலாம். ஏதாவது மூட நம்பிக் கைகள்கூட காரணமாக இருக்கலாம்.அதை சரிசெய்யத் தான் சிகிச்சை. எப்படி செய்வது என எதையும் டாக்டர் கற்றுத்தரமுடியாது. அந்த தடைகளை அகற்றி அவர்களை இயல்பாக்கி விட்டால் போதும். அவர்களேஇயற்கையாக நடந்து கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்’’ என்றுவெளிப்படையாகவே தனது சிகிச்சை அணுகுமுறை பற்றி சொன்னார் மாஸ்டர்ஸ்.

பெரும்பாலானவர்களுக்குபிரச்னை ஏதாவது தப்பான முன்அனுபவங்களாகவே இருக்கும். திருமணத்துக்கு முன் செக்ஸ்தொழிலாளிகளிடம் போயிருப்பார்கள். பதற்றமும், பயமும், முதல் தடவை என்கிற உணர்வும் ஏராளமானவியர்வையைக் கிளப்பிவிட்டு எல்லாவற்றையும் தப்பாக்கி இருக்கும். அந்த தருணத்தில், ‘நான் இதற்கெல்லாம் லாயக்கில்லை என்கிற மாதிரியான உணர்வு மனதில் ஆழமாகப்பதிந்து விட்டி ருக்கும். அதை அகற்றுவது கஷ்டமான விஷயம். திருமணத்துக்கு பிறகுமனைவியைத் தொடும்போதெல்லாம் அந்த உணர்வு மேலெழும்பி வர, செக்ஸ் உணர்வு இல்லாமல் போய் விடும். இதேபோலசிறுவயதில் பார்த்த செக்ஸ் காட்சிகள், நேர்ந்த துயரமான

அனுபவங்கள், அதனால் எழுந்த பாதிப்புகள்... இப்படி பலவிஷயங்கள் ஆண்களையும், பெண்களையும் பாதித்துஅவர்களை நோயாளிகள் ஆக்குகின்றன. மாஸ்டர்ஸ் வெளிப்படையான சிகிச்சை முறையைத்துவக்கியதற்கு முன்பெல்லாம் உளவியல் நிபுணர்கள் தான் இந்த மாதிரியானபிரச்னைகளுக்கு சிகிச்சை தருவார்கள். பிரச்னை உள்ள ஆசாமி ரகசியமாக தனியாக வருவார்.அவரின் மனைவிக்குக்கூட கணவனின் பிரச்னை தெரியாது, ஆண்டுக்கணக்கில்நீளும் சிகிச்சையில் பலன் பெரும்பாலும் இருக்காது. மாஸ்டர்ஸ் புகுத்தியசிகிச்சைமுறை இதிலிருந்து வித்தியாசமானது. பிரச்னை உள்ளவர் தனியாக வரக் கூடாது.தன் மனைவி அல்லது கணவனோடு வர வேண்டும். இரண்டு வாரங்களும் தினமும் மருத்துவமனைக்குவர வேண்டும். செக்ஸ் சிகிச்சை தருவதில் பயிற்சி பெற்ற ஒர் ஆணும், பெண்ணும் ஜோடியாக அவர்கள் முன் அமர்ந்துபேசுவார்கள். இயல்பாக இரண்டு ஜோடிகளும் பேசிக் கொண்டிருக்கும்போது பிரச்னை எங்கேஎன்பது புரிந்துவிடும். கொஞ்சம் உளவியல் சிகிச்சை, கொஞ்சம் மருத்துவசிகிச்சை என இரண்டையும் கலந்து கொடுத்தார் மாஸ்டர்ஸ். கிட்டத்தட்ட எண்பது சதவிகிதஜோடிகளுக்கு இதிலேயே பிரச்னை தீர்ந்து, அவர்கள்வாழ்க்கையில் முதல்முறையாக படுக்கை அறை சந்தோஷத்தை அனுபவித்தனர். பலருக்குகுழந்தையும் பிறந்தது.

இன்றுஉலகெங்கிலும் பல நாடுகளிலும் செக்ஸ் பிரச்னைகளுக்கு தரப்படும் சிகிச்சைக்குஅடிப்படை இதுதான்! ஆனால், அவரைப் போலஇரண்டு வாரம் வந்து தங்கச் சொல்லி யாரும் வற்புறுத்துவதில்லை. அந்த காலத்திலேயேஇந்த சிகிச்சைக்கு அவர்கள் 5000 டாலர் கட்டணம் வசூலித்தார்கள்.

இரண்டு வாரம் வேலைக்குப்போகாமல் பெட்டி படுக்கையைக் கட்டிக் கொண்டு வந்து நான் சொல்லும் இடத் தில்தங்கு... இவ்வளவு ஃபீஸ் கொடு என்றெல்லாம் நம்மஊரில் சொல்ல முடியாது. இரண்டு வாரம் சம்பாதிக்கா மல் இருந்தால் அப்புறம் அவர்கள்டாக்டருக்கு எப்படி ஃபீஸ் கொடுப்பார்கள்? அது தவிர ஒரு செயற்கையானசூழ்நிலையில் இரண்டு வாரம் தங்கும்போது அவர்களுக்குள் எப்படியாவது நெருக்கத்தைஏற்படுத்தி உறவை சாத்தியமாக்கி விடும். ஆனால், திரும்பவும்வீட்டுக்கு போனதும் பழையபடி பிரச்னைதான்.

இதையெல்லாம்கணக்கில் எடுத்துக் கொண்டு இப்போதைய சிகிச்சை முறை வேறு மாதிரியான வடிவம்எடுத்திருக்கிறது. டாக்டரிடம் ஐந்து முதல் பத்து தடவை சிகிச்சைக்கு வந்தால்போதும்... அங்கு தரப்படும் சிகிச்சையை வைத்து வீட்டில் போய் அவர்கள்நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதில் சிகிச்சைஎன்பது மருந்து மற்றும் மனரீதியான மாற்றங்களை ஏற்படுத்தும் கவுன்சிலிங் ஆகியஇரண்டும் இணைந்தது. மனதில் ஆசை இருந்து உடலும் ஒத்துழைத் தால் மட்டுமே ஒருவரால்செக்ஸில் ஈடுபட முடியும். இரண்டும் இப்படி இணைந்து உறவில் ஈடுபடும் சந்தர்ப்பத்தில் மனதில் தோன்றும் பயமோ, அல்லது வேறு ஏதோஉணர்வுகளோ அவர்களது கவனத்தை திசைதிருப்புகிறது. அதை மாற்றி நூறு சதவிகிதஈடுபாட்டுடன் அவர்களை உறவு கொள்ள வைப்பதுதான் சிகிச்சை. இதில் வெறும் மாத்திரைகள்பலன் தராது. சும்மா அட்வைஸ் கொடுத்தாலும் வேலைக்கு ஆகாது. புதைகுழியில் சிக்கிஇருப்பவனுக்கு, ‘பயப்படாதே தம்பி! ஒன்றும்ஆகாது. நீ கவனமாக பார்த்து வந்திருக்கக் கூடாதா?’ என்றெல்லாம்சொல்லப்படும் அட்வைஸ்கள் தேவையில்லை. அவனை அதிலிருந்து மேலே கொண்டுவர வேண்டும்.அதுதான் முக்கியம்.
செக்ஸ்சிகிச்சையும் இது மாதிரிதான்! அதை எப்படி செய்வது என்று சொல்லித் தருவது சிகிச்சைஇல்லை... அந்த உறவைத் தடுக்கும் பயம் அல்லது தயக்கத்திலிருந்து மீண்டு வரும்வழியைக் கற்றுத் தருவதுதான் சிகிச்சை. உதாரணமாக ஒரு குழந்தை கீழே விழுந்துஅடிபட்டு சிராய்ப்பு ஏற்படுகிறது... உடனே அது அழுகிறது. அந்த வலியை மூளை உணர்வதால்அது அழுகைக்கான கட்டளைகளை பிறப்பிக்கிறது... அதனால் அழுகை வருகிறது. அதேகுழந்தைக்கு ஒரு சாக்லெட் கொடுத்தால் அதை சுவைத்ததும் அழுகை நிற்கிறது. காரணம், இந்த இனிப்பு, வலியைமறக்கடிக்கிறது.

கவனம்திசைதிரும்புவதுதான் இதற்கு காரணம். ஒவ்வொரு செயலுக்கும் என்று மூளையில் தனித்தனிபகுதிகள் உண்டு. செக்ஸ§க்கும் மூளை, தண்டுவடம் ஆகிய இரண்டு இடங்களிலும் தூண்டல்தேவை. மனதில் உணர்வு எழுந்ததும், இவை தூண்டப்பட்டுசெக்ஸ் உறுப்புகளில் அதிக ரத்த ஓட்டம் பாய்ந்து அது உறவுக்கு தயாராகிறது. இந்தசமயத்தில் வேறு ஏதோ நினைவுகள் மனதை ஆக்கிரமிக்கும்போது மூளையின் தூண்டுதல்தற்காலிகமாக தடைபடுகிறது. இதன் எதிரொலியாக எல்லாமே கெட்டு விடுகிறது. இப்படி கவனம்சிதறாமல் நிலைநிறுத்துவதுதான் சிகிச்சை. இப்போது ஒவ்வொரு குறைபாட்டுக்கும் எனபலவகை மருந்துகள் வந்து விட்டதால் எல்லாம் சுலபமாக முடிகிறது.

திங்கள், 18 ஜூன், 2012

உச்சகட்டம் என்பது பெண்களுக்கு மட்டும் தாமதம் ஏன் ?


தாம்பத்ய உறவின் போது பெண்களுக்கு சில சிக்கல்கள் எழுகின்றன. உச்சக்கட்டம் அடைவதில் ஏற்படும் சிக்கல் மனரீதியான சிக்கல்களை அளிக்கின்றன. உடல்ரீதியானமனரீதியாக பிரச்சினைகள் இருந்தாலும் பெண்கள் பெயிலாகிவிடுவார்கள் என்கின்றனர் நிபுணர்கள். எந்த சமயத்தில் பெண்கள் ஜெயிக்காமல் தோற்றுப்போகிறார்கள் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போதோஅல்லது பாலியல் ரீதியான நோய் தாக்கியுள்ள போதோ அவர்களுக்கு மனரீதியான ஒரு அழுத்தம் ஏற்படுகிறதாம். இதனால் அவர்களுக்கு ஆர்கஸம் ஏற்படுவதில் சிக்கல்கள் எழுகின்றன என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். எனவே கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பான உறவு முறை பற்றி மகப்பேறு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
உச்சக்கட்டம் என்பது ஒரு உணர்வு. இது அடிப்படையில்பால் உறுப்புகளின் தூண்டுதலில் தொடங்கிஉடலளவிலான பலவகையான மாற்றங்களையும்மனதளவிலான சில மாற்றங்களையும் உள்ளடக்கிய ஒரு எழுச்சி நிலை. இந்த எழுச்சி நிலைக்கு உடலின் பல்வேறு பாலுறுப்புகளிலிருந்து மூளைக்கு செல்லும் ரசாயன சமிக்ஞைகளும்அதற்கான மூளையின் எதிர்வினையாய் உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் உடலியக்க மாற்றங்களுமே காரணம்.
உலகில் எல்லாருக்குமேஉலகில் எல்லாருக்குமே, உடலுறவின்போது உச்சக்கட்டத்தை அடைவதுதான் குறிக்கோள். ஆனாலும், உச்சக்கட்டத்தை அடைவது என்பது பலருக்கு கைவராத ஒரு கலையாகத்தான் இருக்கிறது என்கிறது விஞ்ஞானம் இந்த நிலையை அடைதல் என்பது எல்லோராலும் எளிதில் முடியாது. உடல் ரீதியான கோளாறுகள், நோய் பாதிப்புகள் இருந்தாலும் பெண்களால் உச்சக்கட்டத்தை எளிதில் அடைய முடியாது. எனவே செக்ஸாலஜிஸ்ட்களை சந்தித்து ஆலோசனை பெறவும்.

உச்சக்கட்டம் தொடர்பான பிரச்சினை காரணமாக ஒருவர் மருத்துவரை அணுகினாலும், தீர்வுக்கான சிகிச்சை சிக்கலானது. காரணம், உச்சக்கட்டத்தைப் பொருத்தவரை இத்தனை நாட்களில், இத்தனை தரம் உச்சக்கட்டத்தை அடைவதுதான் இயல்பானது என்று சொல்லும் ஒரு திட்டவட்டமான வரையரை கிடையாது! ஆக, மருத்துவர்கள் நோயாளிகளின் வயது, செக்ஸ் அனுபவம் மற்றும் திருப்தி ஆகியவற்றைக் கொண்டே ஒரு தீர்வை காண முயலவேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
உச்சக்கட்டத்தை அடைவதுதான் குறிக்கோள். ஆனாலும்
உச்சக்கட்டத்தை அடைவது என்பது பலருக்கு கைவராத ஒரு கலையாகத்தான் இருக்கிறது என்கிறது விஞ்ஞானம் இந்த நிலையை அடைதல் என்பது எல்லோராலும் எளிதில் முடியாது. உடல் ரீதியான கோளாறுகள்நோய் பாதிப்புகள் இருந்தாலும் பெண்களால் உச்சக்கட்டத்தை எளிதில் அடைய முடியாது. எனவே செக்ஸாலஜிஸ்ட்களை சந்தித்து ஆலோசனை பெறவும்.
உச்சக்கட்டம் தொடர்பான பிரச்சினை காரணமாக ஒருவர் மருத்துவரை அணுகினாலும்தீர்வுக்கான சிகிச்சை சிக்கலானது. காரணம்உச்சக்கட்டத்தைப் பொருத்தவரை இத்தனை நாட்களில்இத்தனை தரம் உச்சக்கட்டத்தை அடைவதுதான் இயல்பானது என்று சொல்லும் ஒரு திட்டவட்டமான வரையரை கிடையாது! ஆகமருத்துவர்கள் நோயாளிகளின் வயதுசெக்ஸ் அனுபவம் மற்றும் திருப்தி ஆகியவற்றைக் கொண்டே ஒரு தீர்வை காண முயலவேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
பெண்களுக்கு "Female Sexual Arousal Disorder (FSAD) எனப்படும் குறைபாடுகள் இருந்தாலும் பாலுணர்வு தூண்டுதல் ஏற்படுவதில்லை. உறுப்புகளில் வலிவறட்சி போன்றவை ஏற்படும். இதுபோன்ற காரணங்களினாலும் உடலுறவினால் அவர்களுக்கு திருப்தி ஏற்படாத நிலை ஏற்படுகிறது.
சிறுநீர் தொற்றுப் பிரச்சினையினால் பெண் உறுப்புகளில் ஏற்படும் புண்களும் உடலுறவில் ஆர்வமின்மையை ஏற்படுத்துகிறது. எனவே உடல் உறவில் திருப்தி இன்மையும்உச்சக்கட்டம் ஏற்படுவதில் சிக்கல் உள்ள பெண்கள் சரியான உளவியல் நிபுணர்களையோசெக்ஸாலஜிஸ்ட்களையோ சந்தித்து ஆலோசனை பெறலாம்.
 நன்றி:indian sutra

வியாழன், 14 ஜூன், 2012

இன்பத்தின் திறவுகோலான முத்தம்

முத்தமும் நம்பிக்கையும்

முத்தம் குறித்த பல்வேறு நம்பிக்கைகளும் உலக மக்களிடம் உலவி வருகின்றன. முத்தம் கொடுப்பதன் மூலம் நமது உடலில் கலோரிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைகிறதாம். எவ்வளவு குறைகிறது என்பதை அறுதியிட்டுக் கூற முடியாவிட்டாலும் கூட, முத்தம் கொடுக்கப்படுவதைப் பொறுத்து நிமிடத்திற்கு 4 முதல் 6 கலோரி வரை குறையுமாம். அதேசமயம், விநாடிக்கு 12 கலோரி வரை குறைகிறது என்று இன்னொரு சாரார் கூறுகின்றனர்.

ரோமானிய முத்தம்

முத்தத்திற்கு வரலாறுகளில் ஒவ்வொரு விதமான அர்த்தம் கூறியுள்ளனர். ரோமானியர்கள், கல்யாண நிகழ்ச்சிகளின் முடிவில் ஒருவருக்கொருவர் முத்தத்தை அன்புப் பரிமாற்றமாக பகிர்ந்து கொள்வார்களாம்.

ஆன்மாக்கள் சங்கமிக்கும் பிரெஞ்ச் கிஸ்

ப்ரெஞ்ச் கிஸ் உலகப் புகழ் பெற்றது. இந்த முத்தத்திற்கு ஆன்மாவின் முத்தம் என்று பிரெஞ்சுக்காரர்கள் பெயர் வைத்துள்ளனர். இரு நாவுகள் சம்பந்தப்பட்டது இது. இந்த முத்தத்தின் மூலம் இருவரின் ஆன்மாவும் ஒன்றாக சங்கமிப்பதாக பிரெஞ்சுக்காரர்கள் நம்புகிறார்கள். இதற்குப் பிரெஞ்சு முத்தம் என்று பெயர் இருந்தாலும் கூட பிரான்ஸில் இதை ‘இங்கிலீஷ் கிஸ்’ என்றுதான் அழைக்கிறார்களாம்.

உணர்ச்சியை தூண்டும் முத்தம்

முத்தம் கொடுப்பதற்கு முன்பு உங்களது துணையின் உதடை, மெதுவாக உங்களது உதட்டால் தடவிக் கொடுங்கள். உணர்ச்சிகள் தூண்டப்படுவதை அனுபவிப்பீர்கள். பிறகு முத்தத்திற்குப் போகலாம்.

நெக் கிஸ்

இது கழுத்தை கவரும் முத்தம். உதடுகளில் முத்தமிடுவதற்கு முன்பு உங்களது துணையின் கழுத்தை மென்மையான முத்தத்தால் ஒரு ‘சுற்று சுற்றி’ விட்டு பின்னர் உதடுகளுக்கு போங்கள். உற்சாகம் கொப்பளிக்கும்

ஜில்லென்ற முத்தம்

சின்ன ஐஸ் கியூபை எடுத்து உங்களது வாய்க்குள் போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் வாயைத் திறந்து, உங்களது பார்ட்னரை நெருங்கி அந்த ஐஸ் கியூபை அவரது வாய்க்குள் பாஸ் செய்யுங்கள். உங்களது நாவால்தான் பாஸ் செய்ய வேண்டும், அப்படியே துப்பக் கூடாது. பிறகு முத்தமிடுங்கள். ஜில்லென்றிருக்கும்.

பழங்களினால் முத்தம்

ஸ்டிராபெர்ரி, திராட்சை அல்லது நறுக்கிய சின்ன மாம்பழத் துண்டு ஒன்றை எடுத்து அதை உதடுகளுக்கு நடுவில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் உங்களது துணையின் உதட்டுடன் வைத்து அழுத்துங்கள். அது நசுங்கி வழியும்போது இருவரும் இணைந்து அதைப் பருகி இந்த ப்ரூட்டி கிஸ்ஸை அனுபவிக்கலாம்.

பபுள் பாத் கிஸ்

பாத் டப்பில் நுரை நிரப்பிய நீரில் இருவரும் இணைந்து குளித்துக்கொண்டே முத்தமிடுவது இந்த வகை. இது குளியலுக்கு குளியல், முத்தத்திற்கு முத்தம் டூஇன்ஒன். 

பபுள்கம் கிஸ்

உங்களுடைய பேவரைட் சுயிங்கம், பபுள்கம்மினை வாயில் போட்டு சுவைத்து முத்தத்தை தொடங்கலாம். அந்த வாசனை முத்தமிடுபவரையும், பெறுபவரையும் உற்சாகப்படுத்தும்.

கொஞ்சம் சூடு கொஞ்சம் குளுமை 

முதலில் உங்களது துணையின் உதடுகளை சிறிது நேரம் மென்மையாக சுவையுங்கள். அதன் பின்னர் சற்று பலமாக ஊதுங்கள். முதலில் குளிர்ந்து போயிருக்கும் உதடுகள், நீங்கள் ஊதுவதன் திடீர் வெப்பத்தை சந்திப்பார் உங்களது பார்ட்னர். கூடவே இன்னொன்னும் கிடைக்குமா என்று கோரிக்கையும் வைப்பார்.

பேச்சும் முத்தமும்

இது படு ஜாலியானது, கூடவே உணர்வுகளைத் தூண்டக்கூடியது. இருவரும் நேருக்கு நேர் முகத்தை வைத்துக் கொள்ளுங்கள். இருவரது உதடுகளும் நெருக்கமாக இருக்க வேண்டும். உதட்டோடு உதடு உரச, ஆனால் முத்தம் தரக் கூடாது, எதையாவது சிறிதுநேரம் ஜாலியாக பேசிக் கொண்டிருங்கள். உதடுகள் உரசும், உணர்வுகள் தூண்டப்படும், உள்ளங்கள் நெருங்கி வரும், பின் தொடர்ந்து வரும் உறவு வலுப்படும்.

எஸ்கிமோ முத்தம்

அதேபோல மிகவும் பிரபலமானது எஸ்கிமோ முத்தம். பனிப் பிரதேசங்களில் வசிக்கும் இனுயுட் இன மக்கள் ஒருவர் மீது கொண்ட பாசத்தை வெளிப்படுத்த மூக்கோடு மூக்கு உரச நெற்றி அல்லது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிடுவது வழக்கம். இதை அவர்கள் கலாச்சாரமாகவே பின்பற்றி வருகின்றனர். உடல்கள் இணைவது மட்டும் உறவுகள் அல்ல, அன்பும் பரிமாறிக் கொள்ளப்பட வேண்டும். அதற்கு முத்தம் ஒரு நல்ல கருவி என்பதால் முத்தத்தில் ஆரம்பியுங்கள் உங்கள் இனிய உறவுகளை.

முத்தம் ஒரு எச்சரிக்கை

உதடோடு உதடு பொருத்தி முத்தமிடும்போது இருவரது வாய்க்குள்ளும் கிட்டத்தட்ட 10லட்சம் பாக்டீரியாக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன என்பது எச்சரிக்கைச் செய்தி. முத்தமிடுவதன் மூலம் சில வகை நோய்களும் கூட உடல் விட்டு உடல் மாறும் வாய்ப்புகள் உள்ளன. அதேசமயம், முத்தமிடுவதால் எச்ஐவி பரவுவதில்லை என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று எனவே ஜாக்கிரதை.

செவ்வாய், 12 ஜூன், 2012

பெண்ணின் யோனி பற்றி சில உண்மைகள்

முதலில் எவ்வாறு இந்த இரத்த வெளியேற்றம் நடைபெறுகிறது என்று பார்ப்போம்.

பெண் உறுப்பை எடுத்துக் கொண்டோமானால் தனித்தனியாக இரு துவாரங்கள் இருக்கும். ஒன்று சிறு நீர் துவாரம்( urethral opening). மற்றது மாதவிடாய் வெளியேற்றம் நடைபெறும் மற்றும் உடலுறவில் ஈடுபடும் துவாரம்vaginal opening).
இரண்டாவதாக உள்ள மாதவிடாய் வெளியேறும் அல்லது உடலுறவில் ஈடுபடும் துவாரம் கைமண் (hymen)எனப்படும் ஒரு மென்சவ்வினால் சூழப் பட்டிருக்கும். அந்த மென்சவ்வின் நடுவிலே ஒரு சிறிய துளை இருக்கும் அந்த துளையின் ஊடாகவே அந்த பெண்ணுக்கு மாதவிடாய் வெளியேற்றம் நடைபெறும்.





முதன் முதலில் உடலுறவில் ஈடு படும் போது இந்த மென்சவ்வு கிழிவடைவதனால் ரத்தப் போக்கு ஏற்படும். ஆனாலும் இது எல்லாப் பெண்களிலும் சாத்தியமில்லை.

சில பெண்களுக்கு இந்த ஹைமண் இயற்கையாகவே இல்லாமல் இருக்கலாம்

சில பெண்களுக்கு இந்த ஹைமண் உடலுறவு அல்லாத வேறு காரணங்களால் உடைந்து போகலாம்.அதாவது சைக்கிள் ஓட்டம், பாரத நாட்டியம் , ஸ்கிப்பிங் ,போன்ற செயற்பாடுகளின் போது கூட இந்த ஹைமண் பாதிக்கப் படலாம்.

சுய இன்ப செயற்பாட்டில் ஈடு படும் பெண்களிலும் இந்த ஹைமண் உடைந்து விடலாம். ஆமாம்! பெண்களும் இப்படிப்பட்ட சிந்துவிளையாட்டுகளை நடத்துவது உண்டு!

சில பெண்களிலே இந்த ஹைண் இளாஸ்டிக் (elastic) தன்மையானதாக இருக்கும் இவர்கள் எத்தனை முறை உடலுறவில் ஈடுபட்டாலும் அவர்களின் கைமண் அப்படியே பாதிக்கப் படாமல் இருக்கலாம்.
ஆகவே ஹைமண் மென்சவ்வு உள்ளதை வைத்தோ அல்லது ரத்தப் போக்கினை வைத்தோ மட்டும் வைத்து ஒரு பெண்ணின் கன்னித்தன்மையை நிரூபித்து விட முடியாது.

ஒரு பெண் முதன் முதலில் உடல் உறவு கொள்ளும்பொழுது  இரத்தம் சிறிதளவு அவளின் பிறப்புறுப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறுவது சாதாரணமான ஒரு விசயம். இதையே ஒரு பெண்ணின் கற்பினை நிரூபிக்கும் வழியாகவும் நம் சமூகம் அநியாயத்திற்கு பயன்படுத்துகிறது.
 

நம்மிடையே இருக்கும் அறியாமையின் வெளிப்பாடுகளில் ஒன்றே இந்த ரத்தப் போக்கினை வைத்து ஒரு பெண்ணின் கற்பினை எடை போட நினைப்பது. எப்படி பத்தினி ஆனாலும் எல்லாப் பெண்களுக்கும் முதன் முறையான உடலுறவின் போது ரத்தம் வருவதில்லை. 
எனவே முதல் இரவில் வேண்டாத எண்ணங்களையும், பரிசோதனைகளையும் செய்துகொண்டு அந்த இனிமையான நேரத்தை கசப்பாக்கிகொள்ளாதீர்கள்!! என்பதை மட்டும் வேண்டுகோளாக வைப்பது கடமை!

திங்கள், 11 ஜூன், 2012

உயிர்--8


இந்த ஆராய்ச்சிஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் பெண்கள், படிக்கும் மாணவிகள் என பலரும் அந்த பரிசோதனைக்கூடத்தின் வராண்டா பக்கம் வரவே பயந்தனர். எப்போதும் செக்ஸ் தொழிலாளிகள் கிண்டலும், கேலியுமாக பேசிக் கொண்டு உலா வரும் இடம்என்றால் கேட்கவா வேண்டும்?
ஆனால், நாளாக ஆக, ‘இவர் நிஜமாகவேசீரியஸாக ஏதோ செய்கிறார் என்பது அந்தவளாகத்தில் பலருக்கும் புரிந்தது. செக்ஸ் தொழிலாளிகள் மீதான ஆராய்ச்சியை திடீரெனமாஸ்டர்ஸ் நிறுத் திய போது மாணவிகளும் நர்ஸுகளும் இயல்பாகவே அவரை அணுகினார்கள். தனது ஆராய்ச்சிக்கு குடும்பப் பெண்கள்தான் தேவை என்பதை அவர் சொன்ன போது அவர்களில் பலர் அதற்குமுன்வந் தார்கள். தங்கள் கணவர்களோடு வந்த நர்ஸ்கள், பாய்ஃபிரண்டுகளைக் கூட்டிக் கொண்டு வந்த கல்லூரி மாணவிகள், மாஸ்டர்ஸிடம் ஏற்கெனவே சிகிச்சை பெற வந்தபெண்கள், தங்களுக்கு தெரிந்த தம்பதிகளை அனுப்பி வைத்தடாக்டர்கள் என பலரும் கைகொடுக்க வந்தனர்.

இப்போதுஅவருக்குத் தேவை இந்த பெண்களிடம் சரளமாக பேசி அவர்களிடமிருந்து தகவல் களைத் திரட்டஒரு பெண் உதவியாளர். பத்திரிகைகளில் அவர் ஒரு விளம்பரம் கொடுத்தார். முதிர்ந்த அனுபவம் கொண்ட ஒரு இளம்பெண் தேவை.அவர் மனிதர்கள் மீது ஆர்வம் காட்ட வேண்டும். ஒரு குழந்தை எங்கே உருவாகி எப்படிவருகிறது என்ற உண்மையைப் புரிந்தவராக இருக்க வேண்டும்.

இந்தவித்தியாசமான விளம்பரத்தைப் பார்த்து விட்டு அவரிடம் வந்தார் வர்ஜீனியா ஜான்சன்.உளவியல் நிபுணரான வர்ஜீனியா ஜான்சன் மோண்டானாவில் பிறந்தவர். மாஸ்டர்ஸை விட பத்துவயது இளையவர்.

பாட்டுப் பாடுவது, பத்திரிகைகளில் எழுதுவது, விளம்பர ஆராய்ச்சி என பல வேலைகளை அவ்வப்போதுபார்த்து வந்த வர்ஜீனியா ஜான்சனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தன.மாஸ்டர்ஸின் ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டி அவரது உதவியாளராக உடனே வேலைக்குசேர்ந்தார் அவர். அதன்பின் மாஸ்டர்ஸும் வர்ஜீனியா ஜான்சனும் பரிசோதனைச் சாலைபடுக்கை அறைக்கு வந்தவர்களை ஆராய்ந்தனர். பரிசோதனைக்கு வந்தவர்கள் மொத்தம் 694பேர். இதில் 312 பேர் ஆண்கள். 382 பெண்கள். இவர்களில் 552 பேர் திருமணமாகி கணவன், மனைவிகளாக வந்தவர்கள். 98 பேர் விவாகரத்துஆனவர்கள். 44 பேர் திருமணம் ஆகாதவர்கள். ஆண்களைப் பொறுத்தவரை 21 வயது இளைஞர்கள்முதல் 89 வயதில் இருக்கும் குடுகுடு கிழவர்கள் வரை வெவ்வேறு வயதுகளில்இருந்தார்கள். பெண்கள்... பதினெட்டு வயது கல்லூரி மாணவி முதல் எழுபத்தெட்டு வயதுபாட்டி வரை இருந்தார்கள். ஆறு பேர் கர்ப்பிணிகளாக பரிசோதனைக்கு வந்தார்கள். அந்தசமயத்தில் பரிசோதனைக் கூடத்தில் தங்கள் கணவரோடு உறவு கொண்ட அவர்கள், திரும்பவும் குழந்தை பிறந்த பிறகு மீண்டும்வந்தார்கள். உறவு கொண்டார்கள்.

ஒருவழியாகஆராய்ச்சி முடிந்து அதை புத்தகமாக வெளியிடும் சமயம்... செக்ஸ் என்ற வார்த்தையேபரபரப்பு கிளப்பக் கூடியதாயிற்றே. அப்படி எதுவும் வெற்று பரபரப்பு கிளம்பி, இந்த ஆராய்ச்சியின் கண்ணியத்துக்கு பாதிப்புஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் மாஸ்டர்ஸ் உறுதியாக இருந்தார். இது டாக்டர்களைக் குறிவைத்து நடந்த ஆராய்ச்சி.இந்த ஆராய்ச்சி முடிவுகள் அவர்களுக்கு உதவ வேண்டும். செக்ஸ் பிரச்னைகளோடுவருகிறவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை தர இது வழிகாட்டியாக இருக்கும். செக்ஸ்பிரச்னையால் குடும்பங்கள் சிதறாமல் இந்த புத்தகம் தடுக்கும் என அவர் நம்பினார். அந்த புத்தகமே கடினமானமருத்துவ வார்த்தைகளால் எழுதப்பட்டு இருந்தது. மருத்துவ புத்தகங்களை வெளி யிடும்பாஸ்டன் நகரைச் சேர்ந்த லிட்டில் பிரௌன் நிறு வனத்திடம் புத்தக உரிமையைக் கொடுத்தமாஸ்டர்ஸ்,‘‘பொதுமக்களை வாங்கச்சொல்லி விளம்பரம் கொடுக்கா தீர்கள்.என் புத்தகத்தை டாக்டர்கள் வாங்கினால் போதும்’’ என்று சொன்னார். கவர்ச்சியான அட்டை எதுவும்இல்லாமல் ஏதோ பாட புத்தகம் மாதிரி வெறும் எழுத்துக்களை நிரப்பிய மேலட்டையோடுதான்வெளியானது அது!

1966&ம் ஆண்டு ‘Human Sexual Response’ என்றப்பெயரைத் தாங்கி அந்த புத்தகம்வெளிவந்தது. ஆனால், அது வெளியாவதற்கு சிலநாட்கள் முன்னதாக புத்தகத்தைப் பற்றி அரைகுறையாக தெரிந்து கொண்டு பலர் தாக்குதல்தொடுத்தனர்.

‘‘செக்ஸ் உறவில் இருக்கும்இன்பத்தைப் பற்றி மாஸ்டர்ஸ் உணரவில்லை. மெக்கானிக்குகள் பைக்கை ஓட்டி டிரையல்பார்ப்பது மாதிரி இயந்திரத்தனமாக ஒரு அறையில் தாம்பத்ய உறவைச் செய்ய வைத்து அவர்ஆராய்ச்சி செய்திருக்கிறார். இப்படி அந்தரங் கத்தை அலசி ஆராய்ந்தால் அதில்இருக்கும் சுவாரஸ்யம் போய்விடும். விலங்குகள் கூட அதை சுகமாக அனுபவிக்கும் போதுமனிதன் மட்டும் இயந் திரத்தனமாக செக்ஸை அனுபவிக் கும் பரிதாப ஜீவன் ஆகிவிடுவான்’’ என்று சமூக ஆர்வலர்கள் கூக்குரல் போட்டனர்.அந்த சமயத்தில்தான் இப்படி ஒரு ஆராய்ச்சி நடந்த விஷயமே வெளியில் தெரிந்தது.

இப்படி கிளம்பியபரபரப்புகளே தீனி போட, மாஸ்டர்ஸும், வர்ஜீனியா ஜான்சனும் இணைந்து எழுதிய அந்தபுத்தகம் வந்த வேகத் தில் மளமளவென விற்றுத் தீர்ந்தது. புரியாத மொழி... பத்துடாலர் விலை என இருந்தாலும் அது ஐம்பது லட்சம் பிரதிகள் விற்றது. டாக்டர்கள்வாங்குவதற்கு முன்னரே சாதாரண பொதுஜனங்கள்தான் வாங்கித் தள்ளினர். இதுவரை நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை வெளி யிட்ட விற்பனைப் பட்டியலில்முதலிடம் பிடித்த ஒரே மருத்துவ நூல் அதுதான்.

செக்ஸின் போதுநாடித்துடிப்பு எவ்வளவு அதிகரிக்கிறது... ரத்த அழுத்தம் எவ்வளவு எகிறுகிறது...கண்ணுக்குள் இருக்கும் பாப்பா எப்படி நெகிழ்கிறது என பல விஷயங்களையும் அந்தபுத்தகம் டெக்னிக்கலாக சொல்லியிருந்தாலும் அதன் வீரியம் இன்னொரு பக்கத்தில்தான்வெளிப்பட்டது. காலம் காலமாக செக்ஸ் பற்றி இருந்துவந்த பல நம்பிக்கைகளைஒட்டுமொத்தமாக தகர்த்தது அது.

வயதுக்கு வந்த உடனேஒருவர் செக்ஸில் ஈடுபட தயாராகி விடுவதாக நினைப்பது தவறு. உடல், மனசு இரண்டும் பக்குவப்பட வேண்டும். அதன்பின்னரே ஒருவரால் செக்ஸில் ஈடுபட முடியும் என்றார்மாஸ்டர்ஸ்.

செக்ஸ் அறிவுஎன்பது தானாக வருவதில்லை. முறையாக கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம். சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை என்கிற மாதிரியான பழமொழிகள் எல்லாமே தப்பு.மீன்குஞ்சு பிறந்ததும் நீந்தக் கற்றுக் கொள்வது மாதிரி அந்த வயது வந்ததும் இதைதானாக கற்றுக் கொள்வார்கள் என நினைப்பது ஆபத்து. அதை பலர் தப்பாக கற்றுக்கொள்வதால் பிரச்னைதான் வருகிறது. அப்படிப்பட்டவர்கள்தான் பிரச்னைகளில்தவிக்கிறார்கள் என்றார் மாஸ்டர்ஸ்.
அதேபோல வயதானதும் செக்ஸைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அதுவரை சொல்லப்பட்ட அட்வைஸையும் அவர்மறுத்தார். உடல் ஒத்துழைத்து, ஆர்வமுள்ள துணை கிடைத்தால் எண்பது வயதிலும்ஒருவர் இருபது வயது இளைஞனைப் போல செயல்படலாம் என்றார் அவர்.

மலட்டுத் தன்மை என லேபிள் குத்தி பல பெண்கள் குழந்தை பெறலாயக்கற்றவர்களாக ஒதுக்கப்படுவதை அவர் கடுமையாக எதிர்த்தார்.

எப்போது, எப்படி உறவு கொள்ள வேண்டும் என்ற விஷயம்புரிந்தாலே இதில் பாதி பிரச்னைகள் தீர்ந்துவிடும். மேலும் இது தொடர்பானகுறைபாடுகளில் அறுபது சதவிகிதம் ஆண்களிடம்தான் இருக்கிறது. இதற்கு காரணம் பயம்தான் என்றார் அவர். செக்ஸ் என்பது ஏதோ குழந்தைபெறுவதற்கோ, உணர்ச்சிகளை கொட்டித்தீர்த்துக் கொள்வதற்கோ மட்டுமான விஷயம் இல்லை. அது உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஒருபழக்கம். அந்த நெருக்கமான உறவின் மூலம் ஆணும், பெண்ணும்சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வது தான் சமூக நியதி என்பது அவரது முடிவு. செக்ஸில்ஆண்களைப் போலவே பெண்களும் பரவச நிலையை அனுபவிக்கிறார்கள். ஆண்களுக்கு விரைவாகபாலுணர்வு கிளர்ந்து எழுகிறது. ஆனால், பெண்ணுக்கு இந்தகிளர்ச்சி தாமதமாகவே வருகிறது. பல சந்தர்ப்பங்களில் பெண்கள் இப்படி கிளர்ச்சி அடையஆரம்பிப்பதற்குள் ஆண்கள் முடித்து விடுகின்றனர். இதனால் திருமணமான பெண்களில்நான்கில் ஒருவர் பல ஆண்டுகள் உறவுக்கு பிறகு கூட அந்த பரவசத்தை அனுபவித்ததில்லை.பெரும்பாலான ஆண்கள் இப்படி பெண்களின் உணர்வுகளை மதிக்காததால் ஏற்படும்வெறுப்புதான் அந்த உறவின் மீது பலருக்கு ஆர்வமே இல்லாமல் செய்து விடுகிறது"என்றார் அவர். முதல் புத்தகம் போலவே அடுத்தடுத்து இரண்டு புகழ்மிக்க புத்தகங்களைமாஸ்டஸும் வர்ஜீனியா ஜான்சனும் வெளியிட்டனர். செக்ஸை ஆரம்பித்து முடிக்கும் வரைஉடலில் ஏற்படும் மாற்றங்களை நான்கு கட்டமாக அவர்கள் பிரித்தனர். இதில் முதல்நிலை உணர்ச்சி வசப்படும் கட்டம். இதற்கு அடுத்தது, இந்த உணர்ச்சியைஅப்படியே நிலைநிறுத்தி வைக்கும் பீடபூமி நிலை. உச்சகட்ட இன்பத்தை அடைவது மூன்றாவது நிலை.இதன்பின் ஓய்வெடுப்பது நான்காவது நிலை. சரி... இதில் என்ன லாபம்?

சனி, 9 ஜூன், 2012

ஆண் பெண் உறுப்புகளின் சாமுத்திரிக லஷ்ணம்

ஆண்களின் மார்பு பகுதியில் அதிகம் முடி இருந்தால் அவர்களுக்கு பாலுணர்வு எண்ணம் அதிகம் இருக்கும் என்று சாமுத்திரிகா லட்சணம் தெரிவித்துள்ளது. பெண்களின் உடல் அமைப்பை பார்த்து சாமுத்திரிகா லட்சணம் தெரிந்து கொண்டவர்கள் ஆண்களைப்பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன்.

செல்வம் பெருகும் 

ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் அதிக செல்வம் இருக்குமாம். தலையின் நரம்புகள் புடைத்து இருப்பின் தரித்திரமாம். தலையின் பின் பகுதி புடைத்திருப்பின் அறிவாளியாக இருப்பாராம். அதேபோல் அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற்றி அமைந்திருப்பின் ஞானமும் செல்வமும் உண்டு. நெற்றியில் பல ரேகைகள் இருப்பின் அதிர்ஷடம் உண்டாகும். நெற்றியில் ரேகை இல்லா திருப்பின் ஆயுள் குறையும். நெற்றியில் வியர்வை வருமாயின் அதிர்ஷடமாம்.

உலகை ஆளும் ஆண்

ஆண்களின் கண்கள் சிவந்து, விசாலமாக யானைக்கண் போல் இருந்தால் உலகை ஆள்வான். கோழி முட்டைக்கண்ணும், மிகச்சிறிய கண்ணும் இருப்பின் அறிவு, ஆற்றல் குறைவாக இருக்கும். அதேபோல் உயரமாய், நீண்டு, கூரிய முனையோடு சிறிய நாசித் துவாரங்கள் கொண்ட மூக்கு உடையவர்கள் பணம், பதவி, புகழ் உடையவர்களாக இருப்பர். நுனிப் பகுதி தடித்தோ, நடுப்பகுதி உயர்ந்தோ, பெரிய அளவில் மூக்கு அமைந்திருப்பின் தரித்திரமாம்.

அழகான,சிறிய வாய் உடையவர்கள் புத்தி, சக்தி, கருணை உடையவர்களாக, அறிஞர்களாக, பெரும்பதவியில் இருப்பவர்களாக இருப்பர். அகன்றும், வெளியே பிதுங்கியும் உள்ள வாய் அதிகமாகப் பேசும். பிறர் செயலில் குற்றம் காணும். உதடு சிவந்திருப்பின் அந்தஸ்து, அதிகாரம் அதிர்ஷடம் நிலைத்திருக்கும். கருத்து, உலர்ந்து, தடித்து இருப்பின் கபடம் நிறைந்திருக்குமாம்.

தோள்கள் இரண்டும் உயர்ந்திருப்பின் செல்வம் உண்டு. தாழ்ந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. சமமாக இருப்பின் அறிவு உண்டு. தோள்கள் இரண்டிலும் மயிர் அதிகம் இருந்தால் நினைத்த காரியம் முடியாது.

நாக்கில் மச்சம்

நீளமான நாக்கு இருப்பின் சிறந்த பேச்சாளர்களாக இருப்பர். நாக்கு நுனியில் அழியாத கருப்புப் புள்ளிகள் இருப்பின் சொன்ன சொல் பலிக்கும். நாக்கு சிவந்திருப்பின் அதிர்ஷடமாம். கருத்தும், வெளுத்தும், உலர்ந்தும் இருப்பின் தரித்திரமாம்.

காது மேல் செவி அகலமானால் முன் கோபம் இருக்கும். காது குறுகியிருப்பின் அதிர்ஷடமாம். மேல் செவி உள்ளே மடங்கியிருப்பின் கபட தாரி.

அரசாளும் ஆண்

நீளமான, சீரான பருமன் உடைய கைளை உடையவர்கள் சிறப்பாக வாழ்வர். முழங்கால் வரை கை நீண்டிருப்பின் அரசன் ஆவான். தடித்த, குட்டையான கைகளை உடையவர்களை நம்புதல் கூடாது. கைப்பிணைப்புகளில் மூட்டுகளில் ஓசை எழுப்பினால் தரித்திரமாம். கைகள் ஒன்றுக் கொன்று வித்தியாசமாக இருப்பின் பாவிகளாக இருப்பர். கைகளில் நீண்ட ரோமங்கள் இருப்பின் செல்வந்தன் ஆவான்.

மணிக்கட்டில் சதையிலிருந்து கெட்டியாக இருப்பின் அரசு பதவி கிட்டும். மணிக்கட்டு உயரமாக இருப்பின் நீண்ட ஆயுள் உண்டு. மணிக்கட்டுகள் ஸ்திரமின்றி இருந்தாலும், மடக்கும் போது சப்தம் வந்தாலும் தரித்திரமாம்.

பாலுணர்வு அதிகம் உண்டு

கைவிரல்கள் நீளமாக இருந்தால் கலை ஆர்வம் அதிகம் இருக்கும். காம இச்சை அதிகம் உண்டு. விரல்களுக்கு மத்தியில் இடைவெளி இருந்தால் தரித்திரமாம். உள்ளங்கை அதிகப் பள்ளமாக இருந்தால் அற்ப ஆயுளாம். உள்ளங்கை சிவந்திருந்தால் தனவான் ஆவான். உள்ளங் கையின் நான்கு மூலைகளும் சமமான உயரத்தோடு தட்டையாக இருப்பின் அரசனாவான்.

அதேபோல் ஆணின் மார்பு விசாலமாகவும், சதைப் பிடிப்போடும் எடுப்பாகவும் இருப்பின் அவன் புகழ் பெற்று விளங்குவான். கோணலாகவும், ஒன்றோடொன்று நெருங்கியும் இருப்பின் அற்பாயுளாம். ஆணின் மார்பகங்களில் உரோமம் இல்லாதிருப்பது ஆகாது. அதிகமான ரோமம் இருப்பின் பாலுணர்வு அதிகம் இருக்குமாம்.

புகழ் கிடைக்கும்

கால்கள் நீளமாக இருந்தால் அரசாங்க விருதுகள் பெறுவான். கால்கள் குட்டையாக இருப்பின் தரித்திரமாம். முழங்காலுக்கு மேலே உயரமாகவும், முழங்காலுக்குக் கீழே குட்டையாகவும் இருந்தால் நன்மைகள் பெருகும்.

கால் விரல்கள் ஒன்றோடொன்று நெருங்கி இருப்பின் புகழ் பெறுவான். பாதங்கள் சனதப் பிடிப்பின்றி அழகாக, அளவாக இருக்க வேண்டும். பாதங்களில் மேடு பள்ளம் இருந்தாலும், நகங்கள் கோணல்மாணலாக இருந்தாலும், விரல்கள் தனித்தனியே விலகியிருந்தாலும் வறுமை வாட்டும்..
 நன்றி:இந்தியன் sutras