‘கர்ப்பம்’ - இந்த
வார்த்தையை உச்சரிக்கவும், ஒரு கர்ப்பிணியை டி.வி-யில் காட்டவும்அமெரிக்காவில் தடை இருந்தது.
லூசில்லே பால் அமெரிக்காவின் புகழ்பெற்ற டி.வி.நடிகை. கடந்த 53-ம் ஆண்டு இவர்
தயாரித்து நடித்த ‘ஐ லவ் லூசி’ என்ற தொடர்
பரபரப்பாக போய்க் கொண்டிருந்தபோதுஇவர் கர்ப்பமானார். தொடரை நிறுத்த விரும்பாமல், இவரது
கேரக்டரேகர்ப்பமாவது மாதிரி கதையை மாற்றினார் டைரக்டர். ஆனால், ‘கர்ப்பம்’ என்ற வசனமும், கர்ப்பிணியின் திரைத் தோற்றமும் ஆபாசமானதுஎன்று தடை செய்தார்கள் டி.வி.
நிலையத்தினர். பாதிரியார்கள், யூத மதகுருக்கள் பலரை சந்தித்து, ‘கர்ப்பம் என்பது ஆபாசமான விஷயம் இல்லை. இது மதநம்பிக்கைகளுக்கு
எதிரானதும் இல்லை. இதை தாராளமாக டி.வி-யில் காட்டலாம்’ என லூசில்லே
பால் விளக்கம் கொடுத்தார். இதைதொடர்ந்து லூசில்லேவுக்கு ஆதரவாக கருத்து
சொன்னார்கள் - பாதிரியார்களும் மதகுருமார்களும். இதன்பின் லூசில்லே கர்ப்பிணியாக
தோன்றுவதற்கு அனுமதித்த டி.வி.நிலையம், ‘கர்ப்பம்’ என்ற
வசனத்தைமட்டும் சென்ஸார் செய்துவிட்டது. அதற்கு பதிலாக, ‘நான்எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன்’ என்ற
வசனத்தைபயன்படுத்தச் சொன்னது. அதை திக்கித் திக்கி பேசி காமெடி ஆக்கினார் அவர்.
உலகிலேயேடி.வி-யில் தோன்றிய முதல் கர்ப்பிணி அவர்தான்!
கிட்டத்தட்டபதினான்காயிரம் ஆண்களிடம் இன்டர்வியூ நடத்தி, அவர்களதுபழக்கவழக்கங்களைத் தொகுத்து, ஆண்களின் செக்ஸ்பழக்கம் எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் ஒரு புத்தகத்தை எழுதினார், டாக்டர் ஆல்ஃபிரட் சார்லஸ் கின்ஸி. ‘Sexual behaviour in HumanMale’ என்ற அந்தப் புத்தகம்1948-ல் வெளிவந்தது.

கின்ஸி அதில்சொல்லியிருந்த எல்லாமே
வெடிகுண்டு சமாசாரங்கள். புத்தகம் வெளியான அடுத்த நொடி, அமெரிக்காவே
பற்றி எரிந்தது.
‘நான் பேசிய அத்தனைஆண்களில் 95 சதவிகிதம் பேர் வாழ்க்கையில் ஒரு தடவையாவது சுயஇன்பம் அனுபவித்ததாகஒப்புக்கொண்டார்கள். மீதி ஐந்து சதவிகிதம் பேர் அவசரமாக, ‘சேச்சே! எனக்கு அப்படி எந்த பழக்கமும் இல்லை’ என்று மறுத்தார்கள். அநேகமாக, அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்றுதான் எனக்குத்தோன்றுகிறது’.
‘அதேபோலவே ஆண்களில்பெரும்பாலானவர்கள் ஓரினச் சேர்க்கை எப்படிப்பட்ட உணர்வுகளைத் தரும் என ஒருதடவையாவது முயற்சித்துப் பார்த்ததாகச் சொன்னார்கள். இதுதவிர, அமெரிக்க ஆண்களில் பத்து சதவிகிதம் பேர்பெரியவர்கள் ஆனதும், ஓரினச்சேர்க்கைப்பிரியர்களாக இருக்கிறார்கள்.’
‘ஆண்களில் எண்பத்தைந்துசதவிகிதம் பேர் கல்யாணத்துக்கு முன்பே செக்ஸ் உறவை அனுபவித்து இருக்கிறார்கள்.தங்கள் மனைவி கற்போடு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் இவர்கள் அப்படி இல்லை.’
‘முப்பது முதல்நாற்பத்தைந்து சதவிகித ஆண்கள் திருமணத்துக்குப் பிறகு மனைவியைத் தவிர வேறுபெண்களோடு உறவு வைத்திருக்கிறார்கள்.’
& யாருக்கும் தெரியக்கூடாது என்று மனசுக்குள் பொத்திப் பொத்தி வைத்திருந்த அழுக்கான ரகசியங்கள் வெளியேதெரிந்தால் அளவிட முடியாத கோபமும், அதிர்ச்சியும்பொங்கி வழியும்! அப்படித்தான் ரியாக்ட் செய்தது அமெரிக்க சமுதாயம்.
இப்போதுபோலஅமெரிக்கர்கள் அப்போது எதையும் ‘டேக் இட் ஈஸி’ என அலட்சியப்படுத்தும் மனோபாவத்தில் இல்லை.இரண்டாம் உலகப் போர் அப்போதுதான் முடிந்திருந்தது. போரில் லட்சக்கணக் கானவர்கள்இறந்து போயிருக்க, குடும்பப் பிணைப்பு, அன்பு, பாசம் என எல்லாஉணர்வுகளும் உச்சத்தில் இருந்த நேரம் அது!
அதோடுகாலம்காலமாக செக்ஸ் விஷயத்தில் மதம் புகுத்திய கட்டுப்பாடுகள் தளராமல் அப்படியேஇருந்துவந்தது. செக்ஸைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதே பாவ காரியமாக கருதப்பட்டநேரம் அது! ‘கணவனுக்கும், மனைவிக்கும் இடையே நிகழும் தாம்பத்ய உறவைத்தவிர, யாரும் எதையும் தப்பாக செய்வதில்லை... சமுதாயம்நேர்மையான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது’ என பொதுவானநம்பிக்கை இருந்த காலம்!
அந்த சமயத்தில்போய் அவர்களின் அசிங்கமான மறுபக்கத்தை அம்பலப்படுத்தி, ‘உங்கள் புருஷன் கல்யாணத்துக்கு முன்பும் சரி, பின்னாலும் சரி, உங்களிடம்உண்மையாக இல்லை. அது மட்டுமில்லை... அவர் சுய இன்பம் அனுபவித்தார். ஓரினச்சேர்க்கை அனுபவத்துக்கும் அவர் ஆசைப்பட்டார்’ என்று சொன்னால்எப்படி இருக்கும்?
அமெரிக்காவேஆத்திரத்தில் பொங்கியது. ‘கின்ஸிசெய்திருக்கும் வேலை அமெரிக்காவில் குடும்ப அமைப்பையே சிதைத்துவிடும். அவர்ஒழுக்கக் கேட்டை பரப்புகிறார். காலம்காலமாக இருந்துவரும் ஒழுக்க மதிப்பீடுகளை ஒரேநொடியில் தகர்த்துத் தரை மட்டமாக்கி விட்டார். இளைய சமுதாயத்தைத் தவறான பாதையில்திருப்பி விடுகிறார். கலாசார சீரழிவை தொடங்கி வைக்கிறார்’ என்றெல்லாம் அவரைத் திட்டினார்கள். அவர் இறந்துஐம்பது வருஷங்கள் ஆகின்றன. ஆனால், இன்னமும்கூடஅவரைத் திட்டுபவர்கள் உண்டு. குழந்தைகளைக்கூட சிதைக்கும் செக்ஸ் வக்கிரம், எய்ட்ஸ் என்ற எமன்... இப்படி அமெரிக்காவைஇப்போது அச்சுறுத்தும் பல விஷயங்களுக்கும் அவரைக் குற்றம்சாட்டும் மனோபாவம்குறிப்பிட்ட சதவிகித மக்களிடம் இருக்கிறது.
கின்ஸி, அடிப்படையில் ஒரு விலங்கியல் ஆராய்ச்சி யாளர்.அவர் செக்ஸைப் பற்றி ஆராய வந்ததே தனிக் கதை. பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே அவரைஈர்த்த விஷயம் அது! பள்ளியில் அவர் சாரணர் படையில் சேர்ந்தார். அதில் சேரும்விடலைப் பள்ளிப் பையன்களுக்கு ஒரு ஒழுக்கக் கையேடு கொடுப்பார்கள். அதில் ஒரு பாராஅவரைக் குழப்பியது.
மீசை அரும்பும்வயதில் பையன்கள் தப்பான வழிகளில் போகக் கூடாது என்பதற்காக கொடுக்கப்படும் கையேடுஅது! அதில், ‘பையன்கள் விடலைப்பருவத்தைத் தொடும் சமயத்தில் கடவுள் அவர்களுக்கு ஓர் அற்புதமான திரவத்தைப்பரிசாகக் கொடுப்பார். அது அவர்கள் உடம்பில் சுரக்க ஆரம்பிக்கும். அவர்கள்வேகமாகவும், உயரமாகவும் வளர்ந்துதிடகாத்திரமான வாலிபன் ஆவதற்கு, இந்தத்திரவம்தான் உதவுகிறது. அதை எந்த வழியிலும் வீணாக்காமல் பத்திரமாக சேமித்துவைத்தால், மட்டுமே அவர்கள் வளரமுடியும். அதை வீணாக்குபவர்களைகடவுள் தண்டித்து விடுவார்’ என்றிருந்தது.
வளர்ந்துகல்லூரிக்குப் போனபிறகு அதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார் கின்ஸி. ஆனால், விலங்குகளின் செக்ஸ் உறுப்புகள், பழக்கங்கள் பற்றிய புத்தகங்கள்தான் அவருக்குக்கிடைத்தன. மனிதர்கள் பற்றிய புத்தகங்களைத் தேடிய அவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
ப்ளூமிங்டன்நகரில் இருக்கும் இண்டியானா பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பேராசிரியராக வேலைக்குசேர்ந்தபிறகு, அவர் தனது பாடத்துக்குவெளியிலும் ஆர்வம் காட்டத் தொடங்கினார். ‘திருமணம் மற்றும்குடும்ப உறவு’ என்ற தலைப்பில் செக்ஸ்உணர்வுகள் பற்றி அவர் கொடுக்கும் உரை, இண்டியானாபல்கலைக்கழகத்தில் ரொம்ப பாப்புலர். மாணவர்கள் மட்டுமின்றி, வெளிநபர்களும்கூட வந்து கேட்குமளவு அவரது உரைசுவாரஸ்யமானது. தனது உரையைக் கேட்க வருகிறவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசிஅவர்களது செக்ஸ் அனுபவங்களை விசாரிப் பார் கின்ஸி. அப்போதுதான் அவருக்கு அந்தஉண்மை புரிந்தது. முறைகேடான செக்ஸ் உறவுகள் பற்றி மக்கள் நினைப்பதற்கும், நிஜமாக நடப் பதற்கும் இடையே ஏகப்பட்ட இடைவெளிஇருந்தது.
‘ராக்ஃபெல்லர் அறக் கட்டளை’ அப்போது செக்ஸ் தொடர்பான ஆராய்ச்சி களுக்குநிதியுதவி செய்து கொண்டிருந்தது. தனது ஆராய்ச்சி குறித்து அந்த அறக் கட்டளைக்குஎழுதி நிதியுதவி கேட்டார் கின்ஸி. உடனே அது கிடைத்தது. பல்கலைக்கழகத்தின் தலைவர்ஹெர்மன் வெல்ஸ் அனுமதி கொடுக்க, ஆராய்ச்சியைஆரம்பித்து விட்டார் கின்ஸி. 1938&ம் ஆண்டுதொடங்கிய அந்த ஆராய்ச்சி அவர் இறக்கும் வரை தொடர்ந்தது.
கின்ஸியின்ஆராய்ச்சி,மாஸ்டர்ஸ்
செய்ததைப் போலபரிசோதனைக்கூட செக்ஸ் இல்லை. அவரது காலத்தில் அதைச் செய்திருக்கவும்
முடியாது.அவர் மனிதர்களின் செக்ஸ் மனோபாவத்தை அம்பலப்படுத்த விரும்பினார். அதனால்
முழுக்கஇன்டர்வியூக்கள்தான்!‘நான் பேசிய அத்தனைஆண்களில் 95 சதவிகிதம் பேர் வாழ்க்கையில் ஒரு தடவையாவது சுயஇன்பம் அனுபவித்ததாகஒப்புக்கொண்டார்கள். மீதி ஐந்து சதவிகிதம் பேர் அவசரமாக, ‘சேச்சே! எனக்கு அப்படி எந்த பழக்கமும் இல்லை’ என்று மறுத்தார்கள். அநேகமாக, அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்றுதான் எனக்குத்தோன்றுகிறது’.
‘அதேபோலவே ஆண்களில்பெரும்பாலானவர்கள் ஓரினச் சேர்க்கை எப்படிப்பட்ட உணர்வுகளைத் தரும் என ஒருதடவையாவது முயற்சித்துப் பார்த்ததாகச் சொன்னார்கள். இதுதவிர, அமெரிக்க ஆண்களில் பத்து சதவிகிதம் பேர்பெரியவர்கள் ஆனதும், ஓரினச்சேர்க்கைப்பிரியர்களாக இருக்கிறார்கள்.’
‘ஆண்களில் எண்பத்தைந்துசதவிகிதம் பேர் கல்யாணத்துக்கு முன்பே செக்ஸ் உறவை அனுபவித்து இருக்கிறார்கள்.தங்கள் மனைவி கற்போடு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் இவர்கள் அப்படி இல்லை.’
‘முப்பது முதல்நாற்பத்தைந்து சதவிகித ஆண்கள் திருமணத்துக்குப் பிறகு மனைவியைத் தவிர வேறுபெண்களோடு உறவு வைத்திருக்கிறார்கள்.’
& யாருக்கும் தெரியக்கூடாது என்று மனசுக்குள் பொத்திப் பொத்தி வைத்திருந்த அழுக்கான ரகசியங்கள் வெளியேதெரிந்தால் அளவிட முடியாத கோபமும், அதிர்ச்சியும்பொங்கி வழியும்! அப்படித்தான் ரியாக்ட் செய்தது அமெரிக்க சமுதாயம்.
இப்போதுபோலஅமெரிக்கர்கள் அப்போது எதையும் ‘டேக் இட் ஈஸி’ என அலட்சியப்படுத்தும் மனோபாவத்தில் இல்லை.இரண்டாம் உலகப் போர் அப்போதுதான் முடிந்திருந்தது. போரில் லட்சக்கணக் கானவர்கள்இறந்து போயிருக்க, குடும்பப் பிணைப்பு, அன்பு, பாசம் என எல்லாஉணர்வுகளும் உச்சத்தில் இருந்த நேரம் அது!
அதோடுகாலம்காலமாக செக்ஸ் விஷயத்தில் மதம் புகுத்திய கட்டுப்பாடுகள் தளராமல் அப்படியேஇருந்துவந்தது. செக்ஸைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதே பாவ காரியமாக கருதப்பட்டநேரம் அது! ‘கணவனுக்கும், மனைவிக்கும் இடையே நிகழும் தாம்பத்ய உறவைத்தவிர, யாரும் எதையும் தப்பாக செய்வதில்லை... சமுதாயம்நேர்மையான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது’ என பொதுவானநம்பிக்கை இருந்த காலம்!
அந்த சமயத்தில்போய் அவர்களின் அசிங்கமான மறுபக்கத்தை அம்பலப்படுத்தி, ‘உங்கள் புருஷன் கல்யாணத்துக்கு முன்பும் சரி, பின்னாலும் சரி, உங்களிடம்உண்மையாக இல்லை. அது மட்டுமில்லை... அவர் சுய இன்பம் அனுபவித்தார். ஓரினச்சேர்க்கை அனுபவத்துக்கும் அவர் ஆசைப்பட்டார்’ என்று சொன்னால்எப்படி இருக்கும்?
அமெரிக்காவேஆத்திரத்தில் பொங்கியது. ‘கின்ஸிசெய்திருக்கும் வேலை அமெரிக்காவில் குடும்ப அமைப்பையே சிதைத்துவிடும். அவர்ஒழுக்கக் கேட்டை பரப்புகிறார். காலம்காலமாக இருந்துவரும் ஒழுக்க மதிப்பீடுகளை ஒரேநொடியில் தகர்த்துத் தரை மட்டமாக்கி விட்டார். இளைய சமுதாயத்தைத் தவறான பாதையில்திருப்பி விடுகிறார். கலாசார சீரழிவை தொடங்கி வைக்கிறார்’ என்றெல்லாம் அவரைத் திட்டினார்கள். அவர் இறந்துஐம்பது வருஷங்கள் ஆகின்றன. ஆனால், இன்னமும்கூடஅவரைத் திட்டுபவர்கள் உண்டு. குழந்தைகளைக்கூட சிதைக்கும் செக்ஸ் வக்கிரம், எய்ட்ஸ் என்ற எமன்... இப்படி அமெரிக்காவைஇப்போது அச்சுறுத்தும் பல விஷயங்களுக்கும் அவரைக் குற்றம்சாட்டும் மனோபாவம்குறிப்பிட்ட சதவிகித மக்களிடம் இருக்கிறது.
கின்ஸி, அடிப்படையில் ஒரு விலங்கியல் ஆராய்ச்சி யாளர்.அவர் செக்ஸைப் பற்றி ஆராய வந்ததே தனிக் கதை. பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே அவரைஈர்த்த விஷயம் அது! பள்ளியில் அவர் சாரணர் படையில் சேர்ந்தார். அதில் சேரும்விடலைப் பள்ளிப் பையன்களுக்கு ஒரு ஒழுக்கக் கையேடு கொடுப்பார்கள். அதில் ஒரு பாராஅவரைக் குழப்பியது.
மீசை அரும்பும்வயதில் பையன்கள் தப்பான வழிகளில் போகக் கூடாது என்பதற்காக கொடுக்கப்படும் கையேடுஅது! அதில், ‘பையன்கள் விடலைப்பருவத்தைத் தொடும் சமயத்தில் கடவுள் அவர்களுக்கு ஓர் அற்புதமான திரவத்தைப்பரிசாகக் கொடுப்பார். அது அவர்கள் உடம்பில் சுரக்க ஆரம்பிக்கும். அவர்கள்வேகமாகவும், உயரமாகவும் வளர்ந்துதிடகாத்திரமான வாலிபன் ஆவதற்கு, இந்தத்திரவம்தான் உதவுகிறது. அதை எந்த வழியிலும் வீணாக்காமல் பத்திரமாக சேமித்துவைத்தால், மட்டுமே அவர்கள் வளரமுடியும். அதை வீணாக்குபவர்களைகடவுள் தண்டித்து விடுவார்’ என்றிருந்தது.
வளர்ந்துகல்லூரிக்குப் போனபிறகு அதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார் கின்ஸி. ஆனால், விலங்குகளின் செக்ஸ் உறுப்புகள், பழக்கங்கள் பற்றிய புத்தகங்கள்தான் அவருக்குக்கிடைத்தன. மனிதர்கள் பற்றிய புத்தகங்களைத் தேடிய அவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
ப்ளூமிங்டன்நகரில் இருக்கும் இண்டியானா பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பேராசிரியராக வேலைக்குசேர்ந்தபிறகு, அவர் தனது பாடத்துக்குவெளியிலும் ஆர்வம் காட்டத் தொடங்கினார். ‘திருமணம் மற்றும்குடும்ப உறவு’ என்ற தலைப்பில் செக்ஸ்உணர்வுகள் பற்றி அவர் கொடுக்கும் உரை, இண்டியானாபல்கலைக்கழகத்தில் ரொம்ப பாப்புலர். மாணவர்கள் மட்டுமின்றி, வெளிநபர்களும்கூட வந்து கேட்குமளவு அவரது உரைசுவாரஸ்யமானது. தனது உரையைக் கேட்க வருகிறவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசிஅவர்களது செக்ஸ் அனுபவங்களை விசாரிப் பார் கின்ஸி. அப்போதுதான் அவருக்கு அந்தஉண்மை புரிந்தது. முறைகேடான செக்ஸ் உறவுகள் பற்றி மக்கள் நினைப்பதற்கும், நிஜமாக நடப் பதற்கும் இடையே ஏகப்பட்ட இடைவெளிஇருந்தது.
‘ராக்ஃபெல்லர் அறக் கட்டளை’ அப்போது செக்ஸ் தொடர்பான ஆராய்ச்சி களுக்குநிதியுதவி செய்து கொண்டிருந்தது. தனது ஆராய்ச்சி குறித்து அந்த அறக் கட்டளைக்குஎழுதி நிதியுதவி கேட்டார் கின்ஸி. உடனே அது கிடைத்தது. பல்கலைக்கழகத்தின் தலைவர்ஹெர்மன் வெல்ஸ் அனுமதி கொடுக்க, ஆராய்ச்சியைஆரம்பித்து விட்டார் கின்ஸி. 1938&ம் ஆண்டுதொடங்கிய அந்த ஆராய்ச்சி அவர் இறக்கும் வரை தொடர்ந்தது.
அதற்கு முன்நடந்த செக்ஸ் சர்வேக்கள் வேறுவிதமாக இருந்தன. ஆராய்ச்சியாளர் ஆணாக இருந்தால், பெண்களை முகத்துக்கு நேரே பார்த்து அந்தரங்கமானகேள்விகள் கேட்க கூச்சப்படுவார். ஆண்களிடமே ஆண்கள் கேட்கத் தயங்கும்சந்தர்ப்பங்களும் உண்டு. இதற்காக பொத்தாம் பொதுவாகக் கேள்விகள் அடங்கிய ஒருபடிவத்தைக் கொடுத்து, அதில் ‘டிக்’ அடிக்கச்சொல்வார்கள். இப்படி பலரும் ‘டிக்’ அடித்துக் கொடுக்கும் படிவங்களை வைத்துஆராய்ச்சி இறுதி செய்யப்படும்.
ஆனால், கின்ஸிக்கு இந்த டைப் ஆராய்ச்சியில் விருப்பம்இல்லை. அவர் ஒவ்வொருவரையும் முகத்துக்கு நேரே பார்த்துக் கேள்விகள் கேட்டு தகவல்திரட்ட விரும்பினார். இப்படிப்பட்ட நேரடி இன்டர்வியூக்களில் யாரும் பொய்சொல்லமாட்டார்கள் என அவர் நம்பினார். மொத்தம் 521 கேள்விகள் அடங்கிய படிவத்தை அவர்வடிவமைத்தார். அதில் முந்நூறு கேள்விகள் செக்ஸ் தொடர்பானவை... மற்றவை, தகவல் கொடுப்பவர் பற்றிய தகவல் குறிப்புகள்.தகவல் தரும் யாருடைய பெயரையும் அவர் பதிவு செய்யவில்லை. வயது, இனம், தொழில், குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேர்... என்கிறமாதிரி தகவல்களாகத்தான் அவை இருக்கும். இப்படி ரகசியம் காக்கப்படும் என நம்பினால்தான்அவர்கள் உண்மை பேசுவார்கள் என்பது கின்ஸிக்கு தெரியும் (இண்டியானாபல்கலைக்கழகத்தில் கின்ஸி ஆராய்ச்சி நடத்திய மையம் இன்னமும் ‘கின்ஸி செக்ஸ், பாலினம் மற்றும்மகப்பேறு ஆராய்ச்சி நிலையம்’ என்ற பெயரில்இயங்கிவருகிறது. அங்கு இந்த எல்லா படிவங்களும் பொக்கிஷம் போலபாதுகாக்கப்படுகின்றன. யார் வேண்டுமானாலும் போய் இவற்றைப் படிக்கலாம்).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக