புதன், 6 ஜூன், 2012

உயிர்---------7



தன் ஆராய்ச்சிஇப்படி குறை பிரசவம் ஆவதை மாஸ்டர்ஸ் விரும்பவில்லை. செயின்ட் லூயிஸ் நகர போலீஸ்கமிஷன ரைச் சந்தித்த அவர், எல்லா
விவரங்களையும்சொல்லி, அவரையும் தனது குழுவில் ஆலோசகர் ஆக்கிவிட்டார்.

மூன்றாவதாகமீடியா. இதற்கு முன் ஆராய்ச்சி செய்த பலரைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்பி, உணர்ச்சிமயமான சூழ்நிலைகளை ஏற்படுத்தி, பொதுமக்களை அவர்களுக்கு எதிராக போராட்டக்களத்தில் இறங்கவைத்து, அவர்களது இமேஜையே காலிசெய்ததில் பத்திரிகைகளின் பங்கு பிரதானமானது என்பது அவருக்கு தெரிந்திருந்தது.பத்திரிகைகளில் தன்னைப் பற்றியும், தனது ஆராய்ச்சிபற்றியும் நல்லவிதமாக வராவிட்டாலும் பரவாயில்லை... தப்பாக எதுவும் வந்துவிடக்கூடாது என நினைத்த அவர், செயின்ட் லூயிஸ்நகரில் பிரபலமான இரண்டு பத்திரி கைகளை நடத்திவந்த பதிப்பாளர் ஒருவரை சந்தித்து, ஆராய்ச்சி பற்றி சொன்னார். ‘‘நீங்களாக வந்து எங்களி டம் சொல்லாதவரை, இந்த ஆராய்ச்சி பற்றி ஒரு வரி கூட நான் எழுதமாட்டேன்’’என்று அவர் உறுதி மொழிகொடுத்தார். அப்புறம் என்ன? அவரும் ஆலோசனைக்குழுவில் இடம்பிடித்தார்.

மாஸ்டர்ஸ் தன்ஆராய்ச்சியை முதலில் நடத்தியது செக்ஸ் தொழி லாளிகளிடம்...

இரண்டு ஆண்டுகள்நடந்தது அந்த ஆராய்ச்சி. அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலிருந்து செக்ஸ்தொழிலாளிகளை வரவழைத்து, தன் பரிசோதனைக் கூடத்தில்ஆராய்ச்சி செய்தார் வில்லியம் மாஸ்டர்ஸ். 118 பெண்கள். 27 ஆண் செக்ஸ் தொழிலாளிகள். முதல்கட்டமாக அவர்களது பின்னணியை விசாரித்துக் கொண்டு, அவர்களின் குடும்ப விவரங்கள், உடல்நிலை, உணர்வுகள், தொழில் அனுபவங்கள் என எல்லாவற்றையும் கேட்டுதொகுத்துக் கொண்டார் அவர்.

இந்தஆராய்ச்சியின் போதுதான் அவருக்கு ஒரு சுவாரஸ்யமான உண்மை புரிந்தது. செக்ஸ் தொழிலை பல பெண்கள் தேர்ந்தெடுத்ததுசுலபமாக குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்கும் வழி என்பதால் மட்டுமில்லை... இந்ததொழிலுக்கு வந்திருக்கும் பெரும்பாலான பெண்களுக்கு சராசரி பெண்களை விட செக்ஸில்அதிக ஆசை இருக்கிறது என்பதுதான் அது!

முதல்கட்டஆராய்ச்சிகள் முடிந்து இரண்டாவது கட்டத்துக்கு அவர்களிலிருந்து எட்டு பெண்கள்மற்றும் மூன்று ஆண்களை மட்டும் செலக்ட் செய்தார். இனி ஆராய்ச்சியில் அவர்களதுஉடலும், மனமும் இணைய வேண்டும். அவர்களை ஜோடிகளாகஇணைத்து படுக்கை அறைக்கு அனுப்பி தனது கருவிகள் மூலம் ஆராய்ந்தார். அந்த மூன்றுஆண்களும், எட்டு பெண்களும் விதம்விதமான காம்பினேஷனில் பலமாதங்கள் அந்த அறைக்குள் போய் படுக்கையை பயன்படுத்தினார்கள். கிட்டத்தட்டஆராய்ச்சியின் இறுதிக் கட்டத்தில் அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஒரு செக்ஸ் தொழிலாளியின் உணர்வுகளும், உடல்ரீதியான மாற்றங்களும் எந்த அளவு இயல்பாகஇருக்கும்?’

ஒரு பெண் தன்கணவன் மீது இருக்கும் அன்பை வெளிப்படுத்தியபடி படுக்கையில் அனுபவிக்கும் பரவசஉணர்வுகளுக்கும், காசுக்காக அந்த சுகத்தைத்தரும் ஒரு செக்ஸ் தொழிலாளியின் உணர்வுகளுக்கும் நிச்சயம் வித்தியாசம் உண்டு.வெறும் செக்ஸ் தொழிலாளிகளை வைத்து நடத்தப்படும் இந்த சோதனை, எல்லா பெண்களையும் பிரதிபலிக்கும் சோதனையாகஇருக்காது என்பது அவருக்குப் புரிந்தது. இந்த சோதனையை வெறும் அனுபவமாக மட்டும்எடுத்துக் கொண்ட மாஸ்டர்ஸ், அந்தப் படுக்கைஅறையை தற்காலிகமாக பூட்டி வைத்துவிட்டார்.

அப்புறம் பலபெண்களே வந்து அவரது ஆராய்ச்சியைத் தொடர வைத்தது சுவாரஸ்யமான கதை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக