செவ்வாய், 5 ஜூன், 2012

உயிர்--6


சரி... எப்படிஇத்தனை பேர் அவரிடம் படுக்கை அறை ஆராய்ச்சிப் பொருட்களாக இருக்க ஒப்புக் கொண்டார்கள்?


அமெரிக்காவின்புகழ் பெற்ற மருத்துவரான வில்லியம் மாஸ்டர்ஸ் பிறந்தது, ஒஹையோ மாநிலத்தில் இருக்கும் க்ளீவ்லாண்டில்.பாரம்பரியமிக்க ரோசெஸ்டர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அவர் படித்தார். அந்தபல்கலைக்கழகத்தில் தான் செக்ஸ் உயிரியல் வல்லுநர் என பெயர் பெற்ற ஜார்ஜ் வாஷிங்டன்கார்னர் பணி புரிந்தார். வாஷிங்டன் கார்னரை குருவாக ஏற்றுக் கொண்ட வில்லியம்மாஸ்டர்ஸ்,எலிகளின் செக்ஸ் வாழ்க்கைபற்றிதான் முதலில் ஆராய்ந்தார். பெண்களுக்கு மாத விடாய் வருவது போல எலிகளுக்கும்ஒருவித திரவச் சுரப்பு நிகழ்கிறது என்பது அவரது ஆராய்ச்சி முடிவு.

அதை மனிதர்களின்செக்ஸ் சுழற்சி யோடு ஒப்பிட்டு பார்க்க முயன்றபோது அவருக்குத் தோல்விதான்கிடைத்தது. சரியான புத்தகங்கள் அவருக்கு கிடைக்கவில்லை. கிடைத்த ஒரு சில ஆராய்ச்சிநூல்களும் மனித உடலில் செக்ஸின்போது நிகழும் மாற்றங்கள் குறித்து தப்புத் தப்பாகசொல்லியிருந்தன. அப்போது அவருக்கு 24 வயசு. தாங்கள்எங்கிருந்து எதனால் வந்தோம்... தலைமுறை தலைமுறையாக தாயின் கருவில் உயிர்ச்சுழற்சிஎப்படி நிகழ்கிறது என்பது பற்றி யாரும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டவில்லையே?’ என்ற விஷயம் அவரை உறுத்தியது. என் வாழ்நாள் முழுக்க செக்ஸ் பற்றியஉருப்படியான ஆராய்ச்சிதான் செய்யப் போகிறேன் என அப்போதே அவர்முடிவெடுத்தார்.

ஆனால், அவரது குருவான கார்னர் கவலையோடு அவருக்குஎச்சரிக்கை விடுத்தார். ‘‘உனக்கு அதற்கானவயதும், பக்குவமும் வரும் வரை காத்திரு. இப்போது நீசின்னப் பையன். நீ மனப்பூர்வமாகவே ஆராய்ச்சி செய்தாலும் அதற்கு தப்பான பெயர்சூட்டி உன்னைக் களங்கப்படுத்தி விடுவார்கள். எத்தனையோ மகத்தானஆராய்ச்சியாளர்களுக்கு செக்ஸ்வெறியர்கள் என பட்டம் கொடுத்து, தண்டனையும் கொடுத்த தேசம் இது. அப்படி ஒரு நிலைஉனக்கும் வரக் கூடாது. முதலில் ஒரு டாக்டராக புகழ் தேடிக் கொள். அப்புறம் ஏதாவதுஒரு நிறுவனத்தின் உதவியோடு ஆராய்ச்சி நடத்து. அப்போதுதான் பிரச்னை வராது’’ என்றார் அவர்.

மாஸ்டர்ஸ் அதைஏற்றார். வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் வந்து வேலைக்குசேர்ந்தார். மாதவிடாய் கோளாறுகள், மகப்பேறுபிரச்னைகள் என பெண்கள் மருத்துவத்தில் புகழ்பெற்றார். குறிப்பாக முதுமை வந்துமாதவிடாய் நிற்கும் பருவத்தில் பெண்களுக்கு ஹார்மோன் ஊசிகளைப் போட்டு, மாதவிடாய் கோளாறு களை தடுக்கும் இவரது புதியசிகிச்சை முறையைப் பெற பெண்கள் கூட்டம் க்யூவில் நின்றது. செக்ஸ் தொடர்பான ஆராய்ச்சிஎதற்கும் பெண்களின் சப்போர்ட் தேவை. அது அவருக்கு கிடைத்து விட்டது.

அவரது ஆராய்ச்சிஆசைக்கு தீனி போடும் விதமான விஷயங்கள் இங்கும் அவருக்கு கிடைத்தன. புகழ்பெற்றமகப்பேறு நிபுணர் என அவர் பெயர் வாங்கியதால், ‘‘டாக்டர்! எனக்குகுழந்தை பாக்கியம் இல்லை’’ என்ற புலம்பலோடுஅவரிடம் நிறைய பெண்கள் வந்தார்கள். அவர்களைப் பரிசோதித்துப் பார்த்த மாஸ்டர்ஸுக்குஆச்சர்யம்...

உடல்ரீதியாகஅவர்களில் பலருக்கு எந்த குறையும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் குழந்தை இல்லை என்றமனக்குறையோடு வரும் பெண்களில் நூற்றில் முப்பத்தேழு பேருக்கு செக்ஸில் ஆர்வம்இல்லை. அவர்கள் குறைந்தபட்ச ஈடுபாடு காட்டி கணவருடன் சேர்ந்து படுக்கை அறைக்குபோனாலே போதும்... அவர்களது பிரச்னை தீர்ந்துவிடும். அதைச் சொன்னால் அவர்கள்புரிந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு செக்ஸில் நாட்டமும் இல்லை... அதுபற்றி தெரிந்துகொள்வதிலும் ஆர்வம் இல்லை.

தவறு எங்கேஇருக்கிறது என்று அவருக்கு குழப்பம். இந்த குழப்பம் வந்தபோது அவருக்கு 38 வயதுஆகியிருந்தது. கண்ணியமான டாக்டர் என்ற பெயரும் வாங்கியிருந்தார். இப்போது நம்ஆராய்ச்சியைச் செய்ய ஆரம்பிக்கலாம் என்ற நம்பிக்கை அவருக்கு வந்தது. அமெரிக்கர்கள்தனிமனித ஒழுக்கத்தைப் பிரதான விஷயமாக மதித்த காலம் அது! செக்ஸ் என்ற வார்த்தையைஉச்சரிப்பதே ஆபாசமான விஷயமாக கருதப்பட்டது.

ஆனாலும் செக்ஸ்ஆராய்ச்சிகள் அங்கொன்றும், இங்கொன்றுமாகநடந்து பலத்த சர்ச்சைகள் எழுந்து கொண்டிருந்தன. அதுவரை செக்ஸை ஆராய்ந்த எல்லோருமேவெறும் இன்டர்வியூ டைப் ஆராய்ச்சிகளைத்தான் முடித்திருந்தனர். பெரும்பாலும்அவர்கள் மனோதத்துவ நிபுணர்கள். எங்காவது ஒரு ஆபீஸ் போட்டுக் கொண்டு, தங்களிடம் சிகிச்சைக்குத் தனியாக, தம்பதிகளாக வருகிறவர்களிடம் கேள்விகள் கேட்டு, அவர்கள் சொல்லும் பதில்களை வைத்து ஆராய்ச்சிமுடிவுகளை அறிவித்துக் கொண்டிருந்தனர். பலருக்கு கேள்விகள் புரியாது. சிலருக்குதங்கள் பதிலை எப்படி சொல்வது என்று தெரியாது. எந்த வயதில்முதல் தடவையாக உறவு கொண்டீர்கள்? ஒரு மாதத்துக்குஎத்தனை தடவை? மனைவியுடனான செக்ஸ் தவிரவேறு ஏதாவது உண்டா?’ என்கிற மாதிரியானகேள்விகள்தான். கூச்சப்பட்டுக் கொண்டு பலர் உண்மைகளை மறைத்துவிடுவார்கள். இவைவெறும் உணர்வுப்பூர்வமான விஷயங்களாக இருந்ததே தவிர, அறிவியல்ரீதியாகஅவற்றால் உபயோகம் எதுவும் இல்லை.

ஆனால், சும்மா இன்டர்வியூ ஆராய்ச்சி செய்ததற்கேஎதிர்ப்புகள் எழும்போது, ‘நான் பரிசோதனைக்கூடத்தில் ஒரு படுக்கையை வைத்து, அதில் பலரை உறவுகொள்ளச் செய்து ஆராய்ச்சி செய்யப் போகிறேன் என்று சொன்னால்அமெரிக்க மக்கள் தன்னைக் கொன்றே விடுவார்கள்... அதன் நல்ல பலன்கள் பற்றி எவ்வளவுசொன்னாலும் யாருடைய மண்டையிலும் ஏறாது என்பதை மாஸ்டர்ஸ் உணர்ந்தார். அதனால்முடிந்தவரை தனது ஆராய்ச்சியை ரகசியமாக வைத்துக் கொள்ள தீர்மானித்தார்.

முதல்கட்டமாகதங்கள் பல்கலைக்கழக நிர்வாகியிடம் தனது ஆராய்ச்சி பற்றி விளக்கமாகச் சொல்லிஅவரிடம் சம்மதம் வாங்கினார். பிறகு ஆராய்ச்சியைத் தடை செய்யும் அளவுக்கு சக்திவாய்ந்தது எது எது... யார் யார் என்று ஒரு பட்டியல் போட்டார்.


இதில் முதலிடம்பிடித்தது சர்ச். அப்போது வரை மதம்தான் மனிதர்களுக்கான ஒழுக்க நெறிகளைவரையறுத்துக் கொண்டிருந்தது. செக்ஸை ஒருபாவச்செயல் என காலம்காலமாக சொல்லிவந்த கிறிஸ்தவ பாதிரியார்கள், செக்ஸ் தொடர்பானஆராய்ச்சிகளையும் பாவச் செயலாகவே கருதி னார்கள். மற்ற விஷயங்களைப் பொறுத்தவரைமனிதர் களின் மீதான மதத்தின் பிடி தளர்ந்து இருந்தாலும், ஒழுக்கத்தைப் பொறுத்தவரை அதன் பிடி இறுக்கமாகவே இருந்தது.

செயின்ட் லூயிஸ்நகரிலிருந்த அனைத்து தேவாலயங்களின் நிர்வாகிகளையும் சந்தித்த மாஸ்டர்ஸ், தன் ஆராய்ச்சி மருத்துவரீதியாக எவ்வளவுமுக்கியமானது என்பதைச் சொல்லி, ‘நீங்கள் சம்மதம்சொன்னால் நான் இந்த ஆராய்ச்சியைச் செய்கிறேன் எனமுடிவெடுக்கும் பொறுப்பை அவர்கள் கையில் கொடுத்தார். இந்த தந்திரம் நல்ல பலன் தந்தது.அவர்கள் மாஸ்டர்ஸின் வெளிப்படையான அμகுமுறையில்கவரப்பட்டு அனுமதி தந்தார்கள்.

தனதுஆராய்ச்சிக்கு ஆலோசனை சொல்ல ஒரு குழுவை உருவாக்கி இருந்தார் மாஸ்டர்ஸ். உண்மையில்அவர்களில் யாருடைய ஆலோசனையும் அவருக்கு தேவையில்லை. ஆனால் யார் யார் ஆராய்ச்சிக்குமுட்டுக்கட்டையாக இருப்பார்கள் என அவர் கருதினாரோ அவர்களை வளைத்து சும்மா ஒரு கௌரவபதவி கொடுத்து, அவர்கள் வாயை மூடும்டெக்னிக் அது! நகரில் இருக்கும் பிரபலமான மத குருக்கள் அனைவரையுமே அந்தக் குழுவில்ஆலோசகர்களாக நியமித்து விட்டார் மாஸ்டர்ஸ்.

அடுத்தது போலீஸ்.இந்த ஆராய்ச்சியின் எந்த ஒரு கட்டத்திலும் போலீஸ் அதிரடியாக பரிசோத னைக் கூடத்தில்நுழைந்து அங்கு படுக்கை யில் இருப்பவர்களை, ‘விபசாரத்தில் ஈடுபட்டதாக’ (பரிசோதனைக்கு வந்தவர்களில் பலர் தம்பதிகள்இல்லை என்பதை நினைவில் கொள்க!) கைது செய்யும் அபாயம் இருந்தது. அது மட்டுமில்லை...ஆராய்ச்சிக் குழுவினரை விபசாரத்துக்கு உடந்தையாக இருந்ததாகக் கைது செய்யக் கூடியவாய்ப்பும் இருந்தது. பொதுமக்கள் தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந் தால், ‘பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகச் சொல்லி ஆராய்ச்சிக்கே தடை போட்டு விடுவார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக