இந்த ஆராய்ச்சிஆரம்பிக்கப்பட்ட
சமயத்தில் மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் பெண்கள், படிக்கும்
மாணவிகள் என பலரும் அந்த பரிசோதனைக்கூடத்தின் வராண்டா பக்கம் வரவே பயந்தனர்.
எப்போதும் செக்ஸ் தொழிலாளிகள் கிண்டலும், கேலியுமாக பேசிக் கொண்டு உலா வரும்
இடம்என்றால் கேட்கவா வேண்டும்?
ஆனால், நாளாக ஆக, ‘இவர் நிஜமாகவேசீரியஸாக ஏதோ செய்கிறார்’ என்பது அந்தவளாகத்தில் பலருக்கும் புரிந்தது. செக்ஸ் தொழிலாளிகள் மீதான ஆராய்ச்சியை திடீரெனமாஸ்டர்ஸ் நிறுத் திய போது மாணவிகளும் நர்ஸுகளும் இயல்பாகவே அவரை அணுகினார்கள். ‘தனது ஆராய்ச்சிக்கு குடும்பப் பெண்கள்தான் தேவை’ என்பதை அவர் சொன்ன போது அவர்களில் பலர் அதற்குமுன்வந் தார்கள். தங்கள் கணவர்களோடு வந்த நர்ஸ்கள், பாய்ஃபிரண்டுகளைக் கூட்டிக் கொண்டு வந்த கல்லூரி மாணவிகள், மாஸ்டர்ஸிடம் ஏற்கெனவே சிகிச்சை பெற வந்தபெண்கள், தங்களுக்கு தெரிந்த தம்பதிகளை அனுப்பி வைத்தடாக்டர்கள் என பலரும் கைகொடுக்க வந்தனர்.
இப்போதுஅவருக்குத் தேவை இந்த பெண்களிடம் சரளமாக பேசி அவர்களிடமிருந்து தகவல் களைத் திரட்டஒரு பெண் உதவியாளர். பத்திரிகைகளில் அவர் ஒரு விளம்பரம் கொடுத்தார். ‘முதிர்ந்த அனுபவம் கொண்ட ஒரு இளம்பெண் தேவை.அவர் மனிதர்கள் மீது ஆர்வம் காட்ட வேண்டும். ஒரு குழந்தை எங்கே உருவாகி எப்படிவருகிறது என்ற உண்மையைப் புரிந்தவராக இருக்க வேண்டும்.’
இந்தவித்தியாசமான விளம்பரத்தைப் பார்த்து விட்டு அவரிடம் வந்தார் வர்ஜீனியா ஜான்சன்.உளவியல் நிபுணரான வர்ஜீனியா ஜான்சன் மோண்டானாவில் பிறந்தவர். மாஸ்டர்ஸை விட பத்துவயது இளையவர்.
பாட்டுப் பாடுவது, பத்திரிகைகளில் எழுதுவது, விளம்பர ஆராய்ச்சி என பல வேலைகளை அவ்வப்போதுபார்த்து வந்த வர்ஜீனியா ஜான்சனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தன.மாஸ்டர்ஸின் ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டி அவரது உதவியாளராக உடனே வேலைக்குசேர்ந்தார் அவர். அதன்பின் மாஸ்டர்ஸும் வர்ஜீனியா ஜான்சனும் பரிசோதனைச் சாலைபடுக்கை அறைக்கு வந்தவர்களை ஆராய்ந்தனர். பரிசோதனைக்கு வந்தவர்கள் மொத்தம் 694பேர். இதில் 312 பேர் ஆண்கள். 382 பெண்கள். இவர்களில் 552 பேர் திருமணமாகி கணவன், மனைவிகளாக வந்தவர்கள். 98 பேர் விவாகரத்துஆனவர்கள். 44 பேர் திருமணம் ஆகாதவர்கள். ஆண்களைப் பொறுத்தவரை 21 வயது இளைஞர்கள்முதல் 89 வயதில் இருக்கும் குடுகுடு கிழவர்கள் வரை வெவ்வேறு வயதுகளில்இருந்தார்கள். பெண்கள்... பதினெட்டு வயது கல்லூரி மாணவி முதல் எழுபத்தெட்டு வயதுபாட்டி வரை இருந்தார்கள். ஆறு பேர் கர்ப்பிணிகளாக பரிசோதனைக்கு வந்தார்கள். அந்தசமயத்தில் பரிசோதனைக் கூடத்தில் தங்கள் கணவரோடு உறவு கொண்ட அவர்கள், திரும்பவும் குழந்தை பிறந்த பிறகு மீண்டும்வந்தார்கள். உறவு கொண்டார்கள்.
ஒருவழியாகஆராய்ச்சி முடிந்து அதை புத்தகமாக வெளியிடும் சமயம்... செக்ஸ் என்ற வார்த்தையேபரபரப்பு கிளப்பக் கூடியதாயிற்றே. அப்படி எதுவும் வெற்று பரபரப்பு கிளம்பி, இந்த ஆராய்ச்சியின் கண்ணியத்துக்கு பாதிப்புஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் மாஸ்டர்ஸ் உறுதியாக இருந்தார். ‘இது டாக்டர்களைக் குறிவைத்து நடந்த ஆராய்ச்சி.இந்த ஆராய்ச்சி முடிவுகள் அவர்களுக்கு உதவ வேண்டும். செக்ஸ் பிரச்னைகளோடுவருகிறவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை தர இது வழிகாட்டியாக இருக்கும். செக்ஸ்பிரச்னையால் குடும்பங்கள் சிதறாமல் இந்த புத்தகம் தடுக்கும்’ என அவர் நம்பினார். அந்த புத்தகமே கடினமானமருத்துவ வார்த்தைகளால் எழுதப்பட்டு இருந்தது. மருத்துவ புத்தகங்களை வெளி யிடும்பாஸ்டன் நகரைச் சேர்ந்த லிட்டில் பிரௌன் நிறு வனத்திடம் புத்தக உரிமையைக் கொடுத்தமாஸ்டர்ஸ்,‘‘பொதுமக்களை வாங்கச்சொல்லி விளம்பரம் கொடுக்கா தீர்கள்.என் புத்தகத்தை டாக்டர்கள் வாங்கினால் போதும்’’ என்று சொன்னார். கவர்ச்சியான அட்டை எதுவும்இல்லாமல் ஏதோ பாட புத்தகம் மாதிரி வெறும் எழுத்துக்களை நிரப்பிய மேலட்டையோடுதான்வெளியானது அது!
1966&ம் ஆண்டு ‘Human Sexual Response’ என்றப்பெயரைத் தாங்கி அந்த புத்தகம்வெளிவந்தது. ஆனால், அது வெளியாவதற்கு சிலநாட்கள் முன்னதாக புத்தகத்தைப் பற்றி அரைகுறையாக தெரிந்து கொண்டு பலர் தாக்குதல்தொடுத்தனர்.
‘‘செக்ஸ் உறவில் இருக்கும்இன்பத்தைப் பற்றி மாஸ்டர்ஸ் உணரவில்லை. மெக்கானிக்குகள் பைக்கை ஓட்டி டிரையல்பார்ப்பது மாதிரி இயந்திரத்தனமாக ஒரு அறையில் தாம்பத்ய உறவைச் செய்ய வைத்து அவர்ஆராய்ச்சி செய்திருக்கிறார். இப்படி அந்தரங் கத்தை அலசி ஆராய்ந்தால் அதில்இருக்கும் சுவாரஸ்யம் போய்விடும். விலங்குகள் கூட அதை சுகமாக அனுபவிக்கும் போதுமனிதன் மட்டும் இயந் திரத்தனமாக செக்ஸை அனுபவிக் கும் பரிதாப ஜீவன் ஆகிவிடுவான்’’ என்று சமூக ஆர்வலர்கள் கூக்குரல் போட்டனர்.அந்த சமயத்தில்தான் இப்படி ஒரு ஆராய்ச்சி நடந்த விஷயமே வெளியில் தெரிந்தது.

செக்ஸின் போதுநாடித்துடிப்பு எவ்வளவு அதிகரிக்கிறது... ரத்த அழுத்தம் எவ்வளவு எகிறுகிறது...கண்ணுக்குள் இருக்கும் பாப்பா எப்படி நெகிழ்கிறது என பல விஷயங்களையும் அந்தபுத்தகம் டெக்னிக்கலாக சொல்லியிருந்தாலும் அதன் வீரியம் இன்னொரு பக்கத்தில்தான்வெளிப்பட்டது. காலம் காலமாக செக்ஸ் பற்றி இருந்துவந்த பல நம்பிக்கைகளைஒட்டுமொத்தமாக தகர்த்தது அது.
‘வயதுக்கு வந்த உடனேஒருவர் செக்ஸில் ஈடுபட தயாராகி விடுவதாக நினைப்பது தவறு. உடல், மனசு இரண்டும் பக்குவப்பட வேண்டும். அதன்பின்னரே ஒருவரால் செக்ஸில் ஈடுபட முடியும்’ என்றார்மாஸ்டர்ஸ்.
செக்ஸ் அறிவுஎன்பது தானாக வருவதில்லை. முறையாக கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம். ‘சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை’ என்கிற மாதிரியான பழமொழிகள் எல்லாமே தப்பு.மீன்குஞ்சு பிறந்ததும் நீந்தக் கற்றுக் கொள்வது மாதிரி அந்த வயது வந்ததும் இதைதானாக கற்றுக் கொள்வார்கள் என நினைப்பது ஆபத்து. அதை பலர் தப்பாக கற்றுக்கொள்வதால் பிரச்னைதான் வருகிறது. அப்படிப்பட்டவர்கள்தான் பிரச்னைகளில்தவிக்கிறார்கள் என்றார் மாஸ்டர்ஸ்.
அதேபோல ‘வயதானதும் செக்ஸைக் குறைத்துக் கொள்ள வேண்டும்’ என்று அதுவரை சொல்லப்பட்ட அட்வைஸையும் அவர்மறுத்தார். ‘உடல் ஒத்துழைத்து, ஆர்வமுள்ள துணை கிடைத்தால் எண்பது வயதிலும்ஒருவர் இருபது வயது இளைஞனைப் போல செயல்படலாம்’ என்றார் அவர்.
‘மலட்டுத் தன்மை’ என லேபிள் குத்தி பல பெண்கள் குழந்தை பெறலாயக்கற்றவர்களாக ஒதுக்கப்படுவதை அவர் கடுமையாக எதிர்த்தார்.
‘எப்போது, எப்படி உறவு கொள்ள வேண்டும் என்ற விஷயம்புரிந்தாலே இதில் பாதி பிரச்னைகள் தீர்ந்துவிடும். மேலும் இது தொடர்பானகுறைபாடுகளில் அறுபது சதவிகிதம் ஆண்களிடம்தான் இருக்கிறது. இதற்கு காரணம் பயம்தான்’ என்றார் அவர். செக்ஸ் என்பது ஏதோ குழந்தைபெறுவதற்கோ, உணர்ச்சிகளை கொட்டித்தீர்த்துக் கொள்வதற்கோ மட்டுமான விஷயம் இல்லை. அது உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஒருபழக்கம். அந்த நெருக்கமான உறவின் மூலம் ஆணும், பெண்ணும்சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வது தான் சமூக நியதி என்பது அவரது முடிவு. செக்ஸில்ஆண்களைப் போலவே பெண்களும் பரவச நிலையை அனுபவிக்கிறார்கள். ஆண்களுக்கு விரைவாகபாலுணர்வு கிளர்ந்து எழுகிறது. ஆனால், பெண்ணுக்கு இந்தகிளர்ச்சி தாமதமாகவே வருகிறது. பல சந்தர்ப்பங்களில் பெண்கள் இப்படி கிளர்ச்சி அடையஆரம்பிப்பதற்குள் ஆண்கள் முடித்து விடுகின்றனர். இதனால் திருமணமான பெண்களில்நான்கில் ஒருவர் பல ஆண்டுகள் உறவுக்கு பிறகு கூட அந்த பரவசத்தை அனுபவித்ததில்லை.பெரும்பாலான ஆண்கள் இப்படி பெண்களின் உணர்வுகளை மதிக்காததால் ஏற்படும்வெறுப்புதான் அந்த உறவின் மீது பலருக்கு ஆர்வமே இல்லாமல் செய்து விடுகிறது"என்றார் அவர். முதல் புத்தகம் போலவே அடுத்தடுத்து இரண்டு புகழ்மிக்க புத்தகங்களைமாஸ்டஸும் வர்ஜீனியா ஜான்சனும் வெளியிட்டனர். செக்ஸை ஆரம்பித்து முடிக்கும் வரைஉடலில் ஏற்படும் மாற்றங்களை நான்கு கட்டமாக அவர்கள் பிரித்தனர். இதில் முதல்நிலை ‘உணர்ச்சி வசப்படும் கட்டம்.’ இதற்கு அடுத்தது, இந்த உணர்ச்சியைஅப்படியே நிலைநிறுத்தி வைக்கும் ‘பீடபூமி நிலை.’ உச்சகட்ட இன்பத்தை அடைவது மூன்றாவது நிலை.இதன்பின் ஓய்வெடுப்பது நான்காவது நிலை. சரி... இதில் என்ன லாபம்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக