திங்கள், 28 மே, 2012

உயிர் -1

பழங்கால இந்தியாவில்செக்ஸை வாழ்க்கையின் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாக நினைத்தார்கள். சாப்பிடுவது,தூங்குவது மாதிரி அதுவும்ஒரு விஷயம். அதை ஒதுக்கி வைக்கவோ, ரகசிய பொருளாகப்பதுக்கி வைக்கவோ அவர்கள் நினைத்ததில்லை. ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே அரும்பும் அன்பு, காதலாக மலர்ந்த பிறகு அவர்கள் இணைந்து நடத்தும்திருமண வாழ்க்கை இந்த உறவில்தான் முழுமை பெறுகிறது என்பது அவர்களுக்குப்புரிந்திருந்தது.

இல்லறத்தில் ஆண்,பெண் இடையே இருக்கும்உறவு, ஒளிவு மறைவில்லாதது.அன்பு செலுத்துவது, உண்மையாகஇருப்பது, மரியாதை தருவதுஎன எதுவுமே ஒன்வே டிராஃபிக் இல்லை. செக்ஸிலும் இப்படித்தான்... அது இருவரின்தேவைகளையுமே முழுமையாக பூர்த்தி செய்யும்படி அமைய வேண்டும் என்றனர் ரிஷிகள். பெண் என்பவகள் ஆணுக்கு படுக்கையில் சந்தோஷம்தருவதற்காகப் படைக்கப்பட்டவகள் இல்லை. அந்த உறவில் சுகம் தேடும் உரிமை அவளுக்கும்இருக்கிறது. அந்த இன்பம் கிடைக்காதபட்சத்தில் அவகள் திருமண உறவுக்கு வெளியில்அதைத் தேட தயங்க மாட்டாகள். அதனால் குடும்பத்தில் மட்டுமில்லை... சமூகத்திலும்பிரச்னைகள் உருவாகும் என்பது அந்தரிஷிகள் சொன்ன வாக்கு.

முடிவாக அவர்கள்சொன்ன நீதி... இந்த உறவில்கொடுப்பவர், எடுப்பவர் என்றவித்தியாசம் இல்லை! நமது ரிஷிகள்நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து வைத்திருந்த உண்மைகளை நாற்பதுவருடங்களுக்கு முன்புதான் தீவிர ஆராய்ச்சிகளின் வாயிலாக மேற்கத்திய நாகரிகம்புரிந்து கொண்டிருக்கிறது.
வாழ்க்கையின்முழுமையான பரிமாணத்தை நமது மதிப்புக்குரிய முன்னோர் காட்டினார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்நமது இந்த மரபு வேரைப் பிடுங்கி எறிந்து, "பாலுணர்வு" என்பதையே ஒரு மிகப் பெரியகவர்ச்சி அம்சம் போல ஆக்கி, "ஒருவனுக்குஒருத்தி" என்பதன் புனிதத்தையும் இல்லாமல் ஆக்கி, அவர்களது "டேக் இட் ஈஸி" கலாசாரத்தைநமக்கும் விதைத்து விட்டனர்.

இதிலிருந்துமீண்டு வர என்ன வழி? நமது பாரம்பரியஞானத்தின் வேர்களைத் தேடி, செக்ஸ் தொடர்பானசிக்கல்களுக்கு அறிவியல்ரீதியான தீர்வுகளைக் காணும் முயற்சி தான் இந்தத் தொடர்.மிகுந்த கண்ணி யத்தோடும், அளவற்ற ஜாக்கிரதைஉணர்வோடும் இந்தத் தொடரை அணுகியிருக்கிறார் தன் ஆராய்ச்சிகளின் மூலம் உலகளவில்புகழ்பெற்ற செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக