வியாழன், 31 மே, 2012

உயிர்---------4

இப்படி எத்தனையோகேள்விகள் ஒரு பெண்ணின் அந்தரங்கபாகத்தில் மூன்று தனித்தனி துவாரங்கள் உண்டு. சிறுநீர் போக ஒரு துவாரம்...அந்தரங்க உறவுக்கு ஒரு துவாரம்... குழந்தை பெற்றுக்கொகள்ள மூன்றாவது துவாரம்...சரியாகக் கணிக்காமல் உறவின்போது துவாரம் மாறி விட்டால் போச்சு. அப்படி உறவுகொகள்ளும் ஆணுக்கு மர்மமான வியாதிகள் வரும் என்றெல்லாம்கற்பனைக் குதிரையை பயங்கரமாகத் தட்டிவிட்டு, கதைகள் எழுதியஅந்தக் கால டாக்டர்கள் உண்டு!

மருத்துவம்படிக்கிற எல்லோருக்கும் அடிப்படையாக இரண்டு விஷயங்கள் பற்றிய புரிதல் முக்கியம்.ஒன்று பிஸியாலஜிஉடலில் எந்தெந்தபாகங்கள் என்னென்ன வேலைகளைச் செய்கிறது என்பதை சொல்லித்தரும் பிரிவு இது!இரண்டாவது பேதாலஜி நோய் வந்தால் உடலில் எந்தெந்த பாகங்களில்என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது... செயல்பாடுகளில் என்ன குறைபாடுகள் ஏற்படுகிறதுஎன்பது குறித்த நோய் குண அறிவியல். இந்த இரண்டையும் நன்றாக புரிந்துகொண்டவர்களேடாக்டர்கள்.

செக்ஸ் தொடர்பானநோய்களில்,சிக்கல் இந்த அடிப்படைவிஷயத்திலேயே ஆரம்பித்து விடுகிறது. செக்ஸ் உறுப்புகள், அவற்றின் செயல்பாடுகள், உறவு கொகள்ளும்போது அவற்றின் பங்கு... இவைபற்றி தெரிந்தால்தானே நோய் ஏற்படும்போது இதில் நிகழும் மாற்றங்களை அறிய முடியும்.அடிப்படையே புரியாத பட்சத்தில்..?

பல டாக்டர்கள்இதனால் ஏற்பட்ட குழப்பத்தில் செக்ஸ் பிரச்னைகளுக்கு சிகிச்சை தருவதையே தவிர்த்துவந்தார்கள். உளவியல் நிபுணர்களோ, ‘செக்ஸ் தொடர்பானஎல்லா பிரச்னைகளுக்கும் மனதுதான் காரணம் என்றுஸ்டிராங்காக சொல்லி, ஏதோ அவர்களால் முடிந்தஅளவுக்கு சிகிச்சை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

இப்படிப்பட்ட ஒருபின்னணியில்தான் நடந்தது, அந்த ஆராய்ச்சி!மற்றவர்களுக்கு இது எப்படியோ... ஆனால், செக்ஸ்பிரச்னைகளுக்கு மருத்துவ ரீதியான தீர்வுகளைத் தரும் எங்களைப் போன்ற டாக்டர்களுக்குஇது மனிதன் நிலவில் காலடி வைத்ததைவிட பெரிய அறிவியல்சாதனை. அந்த ஒற்றை ஆராய்ச்சிதான் இன்று செக்ஸாலஜி என்ற பெயரில்நவீன சிகிச்சை முறை ஒன்று உருவாக அடித்தளம் போட்டுக் கொடுத்தது. இப்போது பலரும்செக்ஸில் பிரச்னை என்றால் கூசிக்கொண்டு அதை மூடி மறைக்காமல், முக்காடு போட்டுக்கொண்டு தயங்கித் தயங்கிபிளாட்பார லேகியக் கடைக்குப் போகாமல், ‘வாலிப, வயோதிக அன்பர்களைக் கூவி அழைக்கும் போலி வைத்தியர்களிடம் போய்சொத்தை இழக்காமல், அறிவியல்ரீதியான தீர்வுதேடி தம்பதி சமேதராக ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இந்த ஆராய்ச்சிதான்!

ஒரு காலத்தில் மலட்டுத் தன்மை பெண்ணிடம் மட்டும்தான்இருக்கிறது என்று உலகம் முழுக்கஎல்லா சமுதாயமும் உறுதியாக நம்பியது. விதையில்எப்போதும் பழுது இல்லை... நிலம்தான் பாழ்பட்டுக் கிடக்கிறது. அதனால் விதைத்த விதைபொய்த்துப் போகிறது என்று இதை நாசூக்காகசொன்னார்கள்.

அரியணைக்குவாரிசைப் பெற்றுத் தராத காரணத்துக்காக எத்தனையோ மகாராணிகள் அநியாயமாக மலடி பட்டம் சுமந்து, மரண தண்டனையை பரிசாகப் பெற்று, வாகள்முனைக்கு தங்கள் தலையைக் கொடுத்த பரிதாபசம்பவங்கள் அநேகமாக உலகின் எல்லா நாட்டு வரலாறுகளிலும் இருக்கின்றன! பிரச்னைமகாராஜாவிடம்தான் இருக்கிறது என்பது புரியாவிட்டாலும், அந்தப்புரத்துக்கு அடுத்தடுத்து வரும்மகாராணிகளில் யாரோ ஒருத்தி, தன் உயிரைக்காப்பாற்றிக்கொகள்ள, யாருடனாவது சேர்ந்துதப்பு செய்து இளவரசனைப் பெற்றெடுத்து விடுவாகள். அரசனும் "இப்பபுரியுதா? நான் ஆம்பளை சிங்கம்தான்!" என்று மகிழ்ந்துவிடுவான்.
ஆனால், சராசரி குடும்பங்களில் எத்தனையோ பிரச்னைகள்.குழந் தைப்பேறு இல்லாததால் ஏராளமான மணமுறிவுகள். மிக சாதாரணமான ஒரு சிகிச்சைஅவர்களுக்குத் தீர்வு தந்திருக்கும். அது அப்போது யாருக்கும் தெரியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக