செவ்வாய், 29 மே, 2012

உயிர் -2

இந்தத் தொடரைப்படிக்கும் எவரும் "உணவு, தூக்கம் போலவேபாலுணர்வும்கூட உயிர்களின் தவிர்க்கமுடியாத அடிப்படைத் தேவை" என்பதையும்,அதுபற்றி முழுமையாகத்தெரிந்து கொகள்வது எத்தனை அவசியம் என்பதையும் தெளிவாக உணர்வார்கள்.

அது ஒருபெட்ரூம்... பகட்டான அலங்காரங்களோ, திகட்ட வைக்கும்ஆடம்பர வசதிகளோ இல்லாத மிகச் சாதாரணமான பெட்ரூம். ஆனாலும் அது சரித்திரத்தில் இடம்பிடித்து விட்டது. வெறும் பத்து ஆண்டுகளில் பத்தாயிரம் முறை பலபேர் வந்து பரவசமானகலவி இன்பத்தை அனுபவித்த படுக்கை அறை என்ற பெருமையை அது பெற்றது.

தங்கள் காதல்மனைவியைக் கட்டியணைத்தபடி வந்த அன்புக் கணவர்கள், கேர்கள் ஃபிரெண்டை முத்தமிட்டபடி நுழைந்தடீன்ஏஜ் காதலர்கள், தனியாகஅறைக்குகள் நுழைந்து காத்திருந்து முன்பின் அறிமுகமில்லாத பெண்களை துணையாகத்தேடிக் கொண்டவர்கள், ‘வயது எங்கள்உணர்ச்சிகளுக்கு அணை போடவில்லை என்றுநிரூபிக்கும் விதமாக தங்கள் மனைவியோடு வந்து அந்தப் படுக்கையைப் பயன்படுத்திக்கொண்ட கிழவர்கள், ‘எங்களுக்குஜோடியே தேவையில்லை என்ற படி தனிஆட்களாக வந்து சுய இன்பத்தில் பரவசப்பட்டவர்கள்... இப்படி பலவிதமான மனிதர்களை அந்தஅறை பத்து ஆண்டுகளில் பார்த்திருக்கிறது.

வெளிச்சம்,இருட்டு என்ற வித்தியாசம்எல்லாம் அவர்களில் பலருக்கு இல்லை. ஒரேநாளில் வெவ்வேறு நேரங்களில் விதம்விதமானஉணர்வுகளுடன் அந்த அறைக்கு பல ஜோடிகள் வந்தன. படுக்கை விரிப்பை மாற்றக்கூட அவகாசம்தராமல், அடுத்தடுத்துபத்து ஜோடிகள் வந்து போனதும் நடந்திருக்கிறது.
இவ்வளவு பிஸியானஅந்த அறை.. ஒரு நட்சத்திர ஹோட் டலின் தேனிலவு சூட் அல்லது ஏதாவதுகுளிர்பிரதேச சுற்றுலா தல ரிஸார்ட்ஸாக இருக்கும் என்று தானே நீங்கள்நினைத்தீர்கள்.

ஸாரி... அதுதப்பு. அந்த அறை, ஒரு மருத்துவக்கல்லூரியின் பரிசோதனைக் கூடம். அங்கு இப்படி பத்தாயிரம் தடவை பலர் பரவச நிலையைஅனுபவித்தது, ஓர்ஆராய்ச்சிக்காக! அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் இருக்கும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின்மருத்துவக் கல்லூரி... அதில் இருக்கும் மகப்பேறு மற்றும் பெண்கள்நலப் பிரிவில்தான்நடந்தது இந்த ஆராய்ச்சி.

இதில் போய் என்னஆராய்ச்சி! என முகத்தைச்சுளிப்பவர்கள், தவறாமல் அடுத்தபாராவுக்கு போங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக